ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள் பற்றிய பாடம்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹுவின் தூதரே! என் பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நான் நன்மையைப் பெற்றுத் தரும் நல்லறங்கள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) ஆம். அவை நான்கு காரியங்கள் ஆகும். அவை அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது, அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பது, அவர்கள் அளித்துச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுடைய தோழர்களை கண்ணிப்படுத்துவது. மேலும் அவர்கள் வழியாகவே தவிர உள்ள உறவினர்களை இணைத்து வாழ்வதும் ஆகும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத்
يُحَدِّثُ الْقَوْمَ، قَالَ: ” كُنَّا عِنْدَ النَّبِيِّ K فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟، قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لا رَحِمَ لَكَ إِلا مِنْ قِبَلِهِمَا “
சமீப விமர்சனங்கள்