Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-83

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தன் பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை வெறுப்பவர் பற்றிய பாடம்.

இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர் அந்த பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரிடம் கோபம் கொண்டு: “நீயா அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ رَجُلًا كَانَ عِنْدَهُ، وَلَهُ بَنَاتٌ فَتَمَنَّى مَوْتَهُنَّ، فَغَضِبَ ابْنُ عُمَرَ فَقَالَ: أَنْتَ تَرْزُقُهُنَّ؟


Al-Adabul-Mufrad-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட தன் பெண் பிள்ளையை பராமரிப்பவரின் சிறப்பு.

80. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் ஷுராகா பின் ஜுஃஷும் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ أَلَا أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ


Al-Adabul-Mufrad-74

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

74.


قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مِمَّنْ أَنْتَ؟» قُلْتُ: مِنْ تَيْمِ تَمِيمٍ، قَالَ: مِنْ أَنْفُسِهِمْ أَوْ مِنْ مَوَالِيهِمْ؟ قُلْتُ: مِنْ مَوَالِيهِمْ، قَالَ: فَهَلَّا قُلْتَ: مِنْ مَوَالِيهِمْ إِذًا؟


Al-Adabul-Mufrad-62

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

62. ஒரு மனிதன் தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ செலவு செய்தால் அதற்கு அல்லாஹ் கூலி வழங்காமல் இருப்பதில்லை. உங்களை சார்ந்து இருப்பவரிடமிருந்து துவங்குங்கள். பிறகு எஞ்சியதை உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பின்னர் அதற்கு அடுத்த நிலை உறவினர்களுக்கும் செலவு செய்யுங்கள்.

என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.


مَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ يَحْتَسِبُهَا إِلَّا آجَرَهُ اللَّهُ تَعَالَى فِيهَا، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، فَإِنْ كَانَ فَضْلًا فَالْأَقْرَبَ الْأَقْرَبَ، وَإِنْ كَانَ فَضْلًا فَنَاوِلْ


Al-Adabul-Mufrad-47

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உறவுகளை இணைத்து வாழ்வது மற்றும் அதன் அவசியம் பற்றிய பாடம்.

தன் பாட்டனார் கூறியதாக குலைப் இப்னு மன்ஃபா என்பவர் அறிவிக்கிறார்: அல்லாஹுவின் தூதரே நான் யாருக்கு நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் : உன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பிறகு உனது கட்டுப்பாட்டில் இருக்கும் உனக்கு உரிமை உடையவருக்கும் (நன்மை செய்ய வேண்டும்). மேலும் உறவுகள் என்பது இணைக்கப்பட வேண்டியவைகள் ஆகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : குலைப் இப்னு மன்ஃபா


قَالَ جَدِّي : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ ، حَقٌّ وَاجِبٌ ، وَرَحِمٌ مَوْصُولَةٌ .


Al-Adabul-Mufrad-45

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதர் தனது தந்தையை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது அவருக்கு முன்னால் அமரவோ நடக்கவோ கூடாது என்பது பற்றிய பாடம்.

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் வெளியே சென்றோம் அப்போது அவருக்கு ஸாலிம் என்பவர் ” அப்துர் ரஹ்மானுடைய தந்தையே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று முகமன் கூறினார்.
அறிவிப்பவர் : ஷஹர் இப்னு ஹவ்ஷப்


قَالَ : خَرَجْنَا مَعَ ابْنِ عُمَرَ ، فَقَال لَهُ سَالِمٌ : الصَّلاَةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ.


Al-Adabul-Mufrad-43

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நேசம் என்பது அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது என்பது பற்றிய பாடம்.

நான் கூறுவதே உனக்கு போதுமானதாகும்
“நிச்சயமாக நேசம் என்பது அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியதாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.
அறிவிப்பவர் : அபூபக்கர் இப்னு ஹஸம்


قَالَ : كَفَيْتُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ الْوُدَّ يُتَوَارَثُ


Al-Adabul-Mufrad-42

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

தனது தந்தை இணைத்து வாழ்ந்த உறவினருக்கு நன்மை செய்தல்.

42 .

…நான் அம்ர் இப்னு உஸ்மான் என்பவருடன் மதினா பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது தனது சகோரனின் மகனின் மீது சாய்ந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஸல்லாம் எங்களை கடந்து சென்றார். பின்னர் அவையை விட்டு வெளியேறினார். அவர் மீது அக்கறையுடன் அவர்களின் பக்கம் திரும்பி. அம்ர் இப்னு உஸ்மான் அவர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்டுவிட்டு. எவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையை கொண்டு அனுப்பினானோ அவன் மீது ஆணையாக அவனுடைய வேதத்தில் உள்ளது (என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறிவிட்டு): “உன் தந்தை இணைத்து வாழ்ந்த உறவுகளை நீ துண்டிக்க வேண்டாம் அது உனது ஒளியை அணைத்து விடும்” என்று தனது தந்தை உபாதா அவர்கள் கூறியதாக ஸஃத் பின் உபாதா அறிவித்தார்.


كُنْتُ جَالِسًا فِي مَسْجِدِ الْمَدِينَةِ مَعَ عَمْرِو بْنِ عُثْمَانَ ، فَمَرَّ بِنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلاَّمٍ مُتَّكِئًا عَلَى ابْنِ أَخِيهِ ، فَنَفَذَ عَنِ الْمَجْلِسِ ، ثُمَّ عَطَفَ عَلَيْهِ ، فَرَجَعَ عَلَيْهِمْ فَقَالَ : مَا شِئْتَ عَمْرَو بْنَ عُثْمَانَ ؟ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ، فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ ، إِنَّهُ لَفِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ، مَرَّتَيْنِ : لاَ تَقْطَعْ مَنْ كَانَ يَصِلُ أَبَاكَ فَيُطْفَأَ بِذَلِكَ نُورُكَ


Al-Adabul-Mufrad-40

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தனது தந்தை இணைத்து வாழ்ந்த (உறவுகளை) இணைத்து வாழ்பவரின் நன்மை பற்றிய பாடம்.

ஒரு பயணத்தில் இப்னு உமர் (ரலி) அவர்களை ஒரு அரபி கடந்து சென்றார். அந்த அரபியுடைய தந்தை உமர் (ரலி) அவர்களின் தோழரராவார். நீ இன்னாருடைய மகன் தானே? என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த அரபியிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். பிறகு அவரை பின் தொடரும் கழுதையை அவருக்கு கொடுக்கும்படி இப்னு உமர் (ரலி) அவர்கள் கட்டையிட்டார்கள். மேலும் தனது தலையில் இருந்த தலைப்பாகை அவரிடம் கழற்றிக் கொடுத்தார். அவருக்கு இரண்டு திர்ஹம்கள் போதுமானதக இல்லையா? என்று அவருடன் இருந்த சிலர் கேட்டார்கள். அதற்கு  (இப்னு உமர் ரலி) அவர்கள்: உன் தந்தையின் நேசத்திற் குரியவர்களின்  உறவை நீ பாதுகாத்துக் கொள். அவர்களின் உறவை துண்டிக்காதே பிறகு அல்லாஹ் உனது ஒளியை அணைத்துவிடுவான்” என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


مَرَّ أَعْرَابِيٌّ فِي سَفَرٍ، فَكَانَ أَبُو الأَعْرَابِيِّ صَدِيقًا لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لِلأَعْرَابِيِّ: أَلَسْتَ ابْنَ فُلانٍ ؟، قَالَ: بَلَى، فَأَمَرَ لَهُ ابْنُ عُمَرَ بِحِمَارٍ كَانَ يَسْتَعْقِبُ، وَنَزَعَ عِمَامَتَهُ عَنْ رَأْسِهِ، فَأَعْطَاهُ، فَقَالَ بَعْضُ مَنْ مَعَهُ: أَمَا يَكْفِيهِ دِرْهَمَانِ؟ فَقَالَ: قَالَ النَّبِيُّ : احْفَظْ وُدَّ أَبِيكَ، لا تَقْطَعْهُ فَيُطْفِئُ اللَّهُ نُورَكَ “


Al-Adabul-Mufrad-35

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள்.

35. அபூஉஸைத்-மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நான் நன்மையைப் பெற்றுத் தரும் ஏதேனும் நல்லறங்கள் உள்ளதா? என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். அவை நான்கு காரியங்கள் ஆகும். அவைகள்:

1 . அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்வது,
2 . அவர்கள் விட்டுச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,
3 . அவர்களுடைய நண்பர்களை கண்ணியப்படுத்துவது,
4 . உனக்கு அவர்கள் வழியாகவே மட்டுமே உறவினர்களாக ஆனவர்களை இணைத்து வாழ்வது”
என்று கூறினார்கள்.


يُحَدِّثُ الْقَوْمَ، قَالَ: ” كُنَّا عِنْدَ النَّبِيِّ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟، قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لا رَحِمَ لَكَ إِلا مِنْ قِبَلِهِمَا “


Next Page » « Previous Page