Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-5818

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் சார்பாக ஹஜ் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

நன்மையான காரியத்தை அறிவித்தவருக்கு அதைச் செய்தவரின் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ حَجَّ عَنْ مَيِّتٍ فَلِلَّذِي حَجَّ عَنْهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»


Almujam-Alawsat-1048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»


Almujam-Alawsat-8438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்..

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»


Almujam-Alawsat-7136

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7136. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்…

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا، وَمَا عَمِلَ مَنْ أَعْمَالِ الْبِرِّ إِلَّا كَانَ أَجْرُهُ كَصَاحِبِ الطَّعَامِ، مَا كَانَ مِنْ قُوَّةِ الطَّعَامِ فِيهِ»


Almujam-Alawsat-454

ஹதீஸின் தரம்: More Info

454. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحَزْوَرَةِ، فَقَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Almujam-Alawsat-8072

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைத்தும் அவள் (அவருக்கு உடன்பட ) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«مَا مِنَ امْرَأَةٍ يَطْلُبُ مِنْهَا زَوْجُهَا حَاجَةً، فَتَأْبَى فَيَبِيتُ، وَهُوَ عَلَيْهَا غَضْبَانُ إِلَّا بَاتَتْ تَلْعَنُهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ»


Almujam-Alawsat-9231

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களின் நற்செயல்கள் அல்லாஹ்விடம் உயரவும் செய்யாது.  (அவர்கள் யாரெனில்) போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ ، وَلَا يَصْعَدُ لَهُمْ إِلَى اللَّهِ حَسَنَةٌ: السَّكْرَانُ حَتَّى يَصْحُوَ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ فَيَضَعَ يَدَهُ فِي يَدِ مَوَالِيهِ»


Almujam-Alawsat-5099

ஹதீஸின் தரம்: Pending

5099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் மற்ற நபிமார்களுக்குமுன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُ بِالْبَاءَةِ، وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا» ، وَيَقُولُ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alawsat-4673

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு நான்கு தக்பீர்கள் கூறித் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، ثُمَّ أَتَى الْقَبْرَ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا»


Almujam-Alawsat-4337

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4337.


«صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَسَلَّمَ، عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»


Next Page » « Previous Page