Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-3538

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும், தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُوَسَّعَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي عُمُرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»


Almujam-Alawsat-2411

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُعْظِمَ اللَّهُ رِزْقَهُ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»


Almujam-Alawsat-249

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُنْسَأَ فِي أَجَلِهِ، وَيُوَسَّعَ عَلَيْهِ فِي رِزْقِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»


Almujam-Alawsat-2786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2786. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، وأُحْسِنُ إِلَيْهِمْ، ويُسِيئُونَ إِلَيَّ، فَقَالَ: «إِنْ كَانَ كَمَا تَقُولُ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ»


Almujam-Alawsat-944

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

944. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَجُلًا أَتَاهُ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، فَقَالَ: «إِنْ كَانَ كَمَا تَقُولُ: فَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ ظَهِيرٌ عَلَيْهِمْ»


Almujam-Alawsat-9317

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9317. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு, “என்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நீயும் நல்ல முறையில் நடந்து கொள்வாயாக !  என்னைத் துண்டித்து விடுகின்றவரை நீயும் துண்டித்து விடுவாயாக !” என்று கூறிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الرَّحِمُ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، تَعَلَّقَتْ بِحَقْوَيِ الرَّحْمَنِ، تَقُولُ: اللَّهُمَّ صِلْ مَنْ وَصَلَنِي، وَاقْطَعْ مَنْ قَطَعَنِي»


Almujam-Alawsat-3321

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3321. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு, “என்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நீயும் நல்ல முறையில் நடந்து கொள்வாயாக !  என்னைத் துண்டித்து விடுகின்றவரை நீயும் துண்டித்து விடுவாயாக !” என்று கூறிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ مُعَلَّقَةٌ بِحِقْوَيِ الرَّحْمَنِ، تَقُولُ: اللَّهُمَّ صِلْ مَنْ وَصَلَنِي، وَاقْطَعْ مَنْ قَطَعَنِي»


Almujam-Alawsat-3152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3152. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنُ، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ»


Almujam-Alawsat-3537

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3537. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ»


Almujam-Alawsat-9187

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9187. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Next Page » « Previous Page