Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-3899

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3899. அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த ஒரு வார்த்தையை உனக்கும் கற்றுத்தரவா?” என்று அபூஅய்யூப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” கற்றுத்தாருங்கள் எனது தந்தையின் சகோதரரே! என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் (அடைக்கலமாக) தங்க வந்த சமயம், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உமக்கு கற்றுத்தரட்டுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம்” அல்லாஹ்வின் தூதரே! “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்!  என்று கூறினேன். அப்போது அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


قَالَ لِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً عَلَّمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قُلْتُ: بَلَى يَا عَمِّ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ نَزَلَ عَلَيَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ يَا أَبَا أَيُّوبَ كَلِمَةً مِنْ كَنْزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: «أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-3898

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “(இவர் தான்) முஹம்மது” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், எனக்கு ஸலாம் கூறி (வருக! வருக! என்று) வரவேற்றார்கள்.

பிறகு “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக நல்லது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நான், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டேன். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


لَيْلَةَ أُسْرِيَ بِي مَرَرْتُ بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا جِبْرِيلُ مَنْ هَذَا مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، فَسَلَّمَ عَلَيَّ وَرَحَّبَ بِي وَقَالَ: مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيْبَةٌ وَاسِعَةٌ “، فَقُلْتُ: وَمَا غَرْسُ الْجَنَّةِ؟، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-9776

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) மனிதர்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அப்போது இரக்கம்காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான். அப்போது பாவமன்னிப்புக் கேட்போருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அப்போது விரோதம் கொள்வோருக்கு (எதுவும் வழங்காமல்) விட்டுவிடுகிறான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«تُعْرَضُ أَعْمَالُ بَنِي آدَمَ كُلَّ يَوْمِ اثْنَيْنِ، وَفِي كُلِّ يَوْمِ خَمِيسٍ، فَيَرْحَمُ الْمُتَرَحِّمِينَ وَيَغْفِرُ للمُسْتَغْفِرِينَ، ثُمَّ يَذَرُ أَهْلَ الْحِقَدْ بِحِقْدِهِمْ»


Almujam-Alkabir-3972

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் உயர்த்தப்படுகின்றன. சண்டையிட்டு பேசிக்கொள்ளாத இருவரின் செயல்களைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

 


«مَا مِنْ يَوْمٍ إِثْنَيْنِ أَوْ خَمِيسٍ إِلَّا يُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ إِلَّا أَعْمَالَ الْمُتَهَاجِرَيْنَ»


Almujam-Alkabir-4871

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4871. காரிஜா பின் ஸைத் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் அவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் எங்களை எழுத விட்டால் உங்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்கிறோம் என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் “இல்லை” (எழுதக்கூடாது) என்று கூறி மறுத்துவிட்டார். என்றாலும் மர்வான் கூடாரத்திற்கு பின் ஸைத் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் ஒருவரை அமரவைத்து மர்வான் ஹதீஸ்களை கேட்க ஸைத் (ரலி) அவர்கள் கூறும் ஹதீஸ்களை எழுத்தாளர் எழுதிக்கொண்டார். பிறகு மர்வான், “அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் மறுத்ததை நாங்கள் செய்துவிட்டோம்” என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எழுதப்பட்ட அந்த ஏட்டை கொண்டுவராவிட்டால் இதற்கு மேல் ஹதீஸை அறிவிக்கமாட்டேன் என்று கூறினார். எனவே! மர்வான் அதைக் கொண்டு வர அதைக் கிழித்து விட்டு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்களை எழுதுவதை விட்டு எங்களைத் தடுத்தார்கள்” என்று கூறினார்.


أَنَّ مَرْوَانَ، قَالَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ: يَا أَبَا سَعِيدٍ، لَوْ أَنَّكَ تَرَكْتَنَا لَكَتَبْنَا عَنْكَ حَدِيثَكَ، فَقَالَ زَيْدٌ: لَا، فَأَجْلَسَ لَهُ مَرْوَانُ كَاتِبًا خَلْفَ الْقُبَّةِ، فَجَعَلَ هُوَ يَسْأَلُ زَيْدًا وَيَكْتُبُ الْكَاتِبُ مَا يُحَدِّثُ بِهِ زَيْدٌ، فَقَالَ: يَا أَبَا سَعِيدٍ مَا أُرَانَا إِلَّا قَدْ ظَفِرْنَا بِمَا أَبَيْتَ قَالَ: وَاللهِ لَا أَرْمِي حَتَّى أُوتَى بِهِ. فَجَاءَ بِالْكِتَابِ فَشَقَّهُ، وَقَالَ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَكْتُبَ حَدِيثَهُ»


Almujam-Alkabir-8773

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

8773. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், தனது மனைவி(யரில் ஒருவரி)டம் இன்றைய நாள் சிறந்ததா? அல்லது நேற்றைய நாள் சிறந்ததா? என்று கேட்டார். அதற்கவர், “எனக்கு தெரியாது” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், என்றாலும் எனக்குத் தெரியும். நேற்றைய தினம் இன்றைய தினத்தை விட சிறந்தது. இன்றைய தினம் நாளைய தினத்தை விட சிறந்தது. இவ்வாறே மறுமைநாள் வரை (வரும் முந்தைய நாட்கள் பிந்தைய நாட்களை விட சிறந்தது) என்று கூறினார்.


قَالَ عَبْدُ اللهِ لِامْرَأَتِهِ: «الْيَوْمَ خَيْرٌ أَمْ أَمْسِ؟» فَقَالَتْ: لَا أَدْرِي، فَقَالَ: «لَكِنِّي أَدْرِي، أَمْسِ خَيْرٌ مِنَ الْيَوْمِ، وَالْيَوْمُ خَيْرٌ مِنْ غَدٍ، وَكَذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Almujam-Alkabir-8551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8551. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும். (இதன் கருத்து) இந்த வருடம் (பின்வரும்) அந்த வருடத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல. இந்த சமுதாயம் (பின்வரும்) அந்த சமுதாயத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல.

மாறாக, உங்களில் உள்ள சிறந்தோரும், அறிஞர்களும் மேதைகளும் (இறந்து) போய்விட (அவர்களுக்கு பின்வரும்) கூட்டம் அவர்களின் சுயகருத்துக்களை அளவுகோலாக கொண்டே சட்டமெடுப்பார்கள். அதனால் இஸ்லாம் அழிந்து துண்டுதுண்டாகிவிடும் (என்பதே இதன் பொருளாகும்)

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)


«لَيْسَ عَامٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، وَلَا عَامٌ خَيْرٌ مِنْ عَامٍ، وَلَا أُمَّةٌ خَيْرٌ مِنْ أُمَّةٍ، وَلَكِنْ ذَهَابُ خِيَارِكُمْ وَعُلَمَائِكُمْ، وَيُحَدِّثُ قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيَنْهَدِمُ الْإِسْلَامُ وَيَنْثَلِمُ»


Almujam-Alkabir-58

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

58. ஹதீஸ் எண்-57 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

என்றாலும் இதில், “நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது, அவர்களுக்கு பின்னால் தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா என்று கூறினார்” என ஆரம்பிக்கிறது.


قَامَ رَجُلٌ خَلْفَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا فَذَكَرَ الْحَدِيثَ


Almujam-Alkabir-57

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

57.  வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ கஸீரா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று அதிகமாக அவனைத் துதிக்கிறேன்) என்று கூறியதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின், திரும்பி “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், (நான்தான் அல்லாஹ்வின் தூதரே!) அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன. அர்ஷைத் தவிர வேறு எதுவும் அதைத் தடுக்கவில்லை” என்று கூறினார்கள்.


صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلًا يَقُولُ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ كَثِيرًا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» قَالَ: مَا أَرَدْتُ إِلَّا الْخَيْرَ قَالَ: «لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»


Almujam-Alkabir-56

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

56/2. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ கஸீரா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று அதிகமாக அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வானத்தின் பக்கம் பார்த்தார்கள். பின்பு தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக அர்ஷ் வரை உள்ள வானத்தின் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَدَخَلَ دَاخِلٌ فِي الصَّلَاةِ، فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ كَثِيرًا، فَرَفَعَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ، ثُمَّ أَقْبَلَ عَلَى صَلَاتِهِ حَتَّى إِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» قَالَ: أَنَا يَا رَسُولَ اللهِ قَالَ: «لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»


Next Page » « Previous Page