55-3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது (தொழுகையின்) வரிசையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறி (தொழுகையை) முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக அர்ஷ் வரை உள்ள வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَجَاءَ رَجُلٌ فَدَخَلَ فِي الصَّفِّ فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَاتِ؟» قَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللهِ، مَا أَرَدْتُ بِهِنَّ إِلَّا خَيْرًا قَالَ: «لَقَدْ رَأَيْتُ أَبْوَابَ السَّمَاءِ فُتِحَتْ فَمَا تَنَاهَتْ دُونَ الْعَرْشِ»
சமீப விமர்சனங்கள்