தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-12692

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்ஸார் பின் ஹுரைஸின் அறிவிப்புகள்.

12692. யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

இப்னு அப்பாஸ் (ரலி)

عبد الله بن عباس

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

தந்தை பெயர்: அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ அப்பாஸ், அல்ஹிப்ர், அல்பஹ்ர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 3, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் ரலி அவர்களின் மகனாவார். ஹிஜ்ரிக்கு முன் 3 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃபில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மார்க்க அறிவையும் குர்ஆன் விளக்கத்தையும் அருளுமாறு இருமுறை துஆ செய்தார்கள்.

இவர் தனது பரந்த அறிவின் காரணமாக 'அல்ஹிப்ர்' (அறிஞர்), 'அல்பஹ்ர்' (கடல்) என்று அழைக்கப்பட்டார். இவர் நபித்தோழர்களில் மிகப் பெரும் அறிஞர்களில் ஒருவராவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப், உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ், மைமூனா பின்த் அல்ஹாரிஸ், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீதாலிப், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், முஆத் பின் ஜபல், அபூதர் அல்ஃகிஃபாரீ, உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஜாஹித் பின் ஜப்ர், காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், அதா பின் அபீரபாஹ், தாவூஸ் பின் கைஸான், வஹ்ப் பின் முனப்பிஹ், ஸயீத் பின் ஜுபைர், அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் உமர், அபூத்துஃபைல் ஆமிர் பின் வாத்திலா, இக்ரிமா, அம்ர் பின் தீனார், நாஃபிஉ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அபூ அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (17) · Should verify


الْعَيْزَارُ بْنُ حُرَيْثٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، قَالَا: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ قَالَ: ثنا أَبِي، قَالَا: ثنا حُبَيِّبِ بْنِ حَبِيبٍ أَخُو حَمْزَةَ الزَّيَّاتُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ دَخَلَ الْجَنَّةَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12692.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12530.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11176-ஹுபைய்யிப் பின் ஹபீப் அஸ்ஸய்யாத் பலவீனமானவர் என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1373)

  • பலமான அறிவிப்பாளர்கள் வழியாக மற்றவர்கள்அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-532)

  • மேலும் இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஹுபைய்யிப் பின் ஹபீப் அஸ்ஸய்யாத் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் அபூ இஸ்ஹாக் வழியாக, பலமான அறிவிப்பாளரான மஃமர் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றார். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21453 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.