Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-6139

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6139. யார் தனது வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து, பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின்  விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)


«مَنْ تَوَضَّأَ فِي بَيْتِهِ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، فَهُوَ زَائِرُ اللهِ، وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ الزَّائِرَ»


Almujam-Alkabir-884

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

884. ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ»


Almujam-Alkabir-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

103.


«أَنَا وَامْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ امْرَأَةٌ آمَتْ مِنْ نَفْسِهَا فحَبَسَتْ نَفْسَهَا عَلَى بَنَاتِهَا حَتَّى بَانُوا أَوْ مَاتُوا»


Almujam-Alkabir-55

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

55. ஐந்து செயல்களில் ஒன்றை செய்பவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவைகள்:

1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.

2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.

3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.

4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.

5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


خَمْسٌ مَنْ فَعَلَ وَاحِدَةً مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللهِ: مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا، أَوْ دَخَلَ عَلَى إِمَامِهِ يُرِيدُ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَسَلِمَ النَّاسُ مِنْهُ وَسَلِمَ مِنَ النَّاسِ


Almujam-Alkabir-7663

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7663.


«مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ جَمَاعَةٍ يَثْبُتُ فِيهِ حَتَّى يُصَلِّيَ سُبْحَةَ الضُّحَى، كَانَ كَأَجْرِ حَاجٍّ، أَوْ مُعْتَمِرٍ تَامًّا حَجَّتُهُ وَعُمْرَتُهُ»


Almujam-Alkabir-317

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு ளுஹாத் தொழுகையை தொழும் வரை அல்லாஹ்வை திக்ர் செய்துக் கொண்டிருந்தால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்கள்: அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்த் (ரலி)


«مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فِي جَمَاعَةٍ، ثُمّ ثَبَتَ فِي الْمَسْجِدِ يُسَبِّحُ اللهَ سُبْحَةَ الضُّحَى، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامًّا لَهُ حَجَّتُهُ وَعُمْرَتُهُ»


Almujam-Alkabir-7649

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7649.


«مَنْ صَلَّى الصُّبْحَ فِي مَسْجِدٍ جَمَاعَةً، ثُمَّ مَكَثَ حَتَّى يُسَبِّحَ تَسْبِيحَةَ الضُّحَى، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامٍّ لَهُ حَجَّتُهُ وَعُمْرَتُهُ»


Almujam-Alkabir-7914

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7914. பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவரை தன்னுடைய காலினால் தட்டி, “எழுந்து அமர்வீராக! இது நரகவாசிகளுடைய தூக்கமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ، فَضَرَبَهُ بِرِجْلِهِ، وَقَالَ: «قُمْ، فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ»


Almujam-Alkabir-895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

895.


الْهِجْرَةُ هِجْرَتَانِ: أَحَدُهُمَا أَنْ يَهْجُرَ السَّيِّئَاتِ، وَالْأُخْرَى أَنْ يُهَاجِرَ إِلَى اللهِ وَرَسُولِهِ، وَلَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا تُقُبِّلَتِ التَّوْبَةُ، وَلَا تَزَالُ التَّوْبَةُ مَقْبُولَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنَ المَغْرِبِ، فَإِذَا طَلَعَتْ طَلَعَ عَلَى كُلِّ قَلْبٍ بِمَا فِيهِ وَكَفَى النَّاسَ الْعَمَلَ


Almujam-Alkabir-907

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

907. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. (இதை மூன்று தடவை கூறினார்கள்).

சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، ثَلَاثَ مَرَّاتٍ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»


Next Page » « Previous Page