Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-13497

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13497. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»


Almujam-Alkabir-13496

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13496. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வருபவர் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«مَنْ زَارَ قَبْرِي بَعْدَ مَوْتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»


Almujam-Alkabir-6104

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6104. (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது. மேலும் கியாமத் நாளில் அவர் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி)


«مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ اسْتَوْجَبَ شَفَاعَتِي، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْآمِنِينَ»


Almujam-Alkabir-4922

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


«إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الْخَلِيفَتَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»


Almujam-Alkabir-4921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4921. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


«إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ خَلِيفَتَيْنِ كِتَابَ اللهِ وَأَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَمْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»


Almujam-Alkabir-2680

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2680. …மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ، فَخَطَبَ، فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ: ” أَيُّهَا النَّاسُ، قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي


Almujam-Alkabir-7027

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا بِالْمَسْجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُحْسِنَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Almujam-Alkabir-7026

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Almujam-Alkabir-4923

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் எனக்குப் பின் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ مِنْ بَعْدِي: كِتَابَ اللهِ عَزَّ وَجَلَّ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Almujam-Alkabir-2679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“…நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது. எனவே எனக்குபின்னால் இவ்விரண்டின் விசயத்தில் நீங்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதை சிந்தித்துக்கொள்ளுங்கள்…

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


كَأَنِّي قَدْ دُعِيتُ فَأَجَبْتُ فَإِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّ‍قَلَيْنِ: كِتَابَ اللهِ، حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ، فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا


Next Page » « Previous Page