Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-4727

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4727. அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்களும் (அவரது மனைவி) உம்மு ஸுலைமும் நின்றனர். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّ أَبَا طَلْحَةَ، «دَعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ طَلْحَةَ حِينَ تُوُفِّي، فَأَتَاهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِ، فَتَقَدَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ لَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ»


Almujam-Alkabir-13319

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13319. அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்கள், இல்லை விடமுடியாது. மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பினேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் அவர்களே! அவசரப்படாதீர்கள், “யார் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டாரோ அவர் சிறந்த புகழிடத்தை பெற்றுக்கொண்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூற நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆம், கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் என்னை நீதிபதி பதவிக்கு நியமிப்பதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள், உங்கள் தந்தை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தீர்ப்பளிக்கும்

أَنَّ عُثْمَانَ قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَكُنْ قَاضِيًا، قَالَ أَوَ تُعْفِينِي , يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: لَا، اذْهَبْ فَاقْضِ بَيْنَ النَّاسِ، قَالَ: أَوَ تُعْفِينِي , يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: لَا، عَزَمْتُ عَلَيْكَ إِلَّا ذَهَبْتَ فَقَضَيْتَ، قَالَ: لَا تَعْجَلْ، سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ عَاذَ بِاللهِ فَقَدْ عَاذَ بِمُعَاذٍ “؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنَّى أَعُوذُ بِاللهِ، أَنْ أَكُونَ قَاضِيًا، قَالَ: وَمَا يَمْنَعُكُ، وَقَدْ كَانَ أَبُوكَ يَقْضِي؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا عَالِمًا فَقَضَى بِحَقٍّ أَوْ بِعَدْلٍ سَأَلَ التَّفَلُّتَ كِفَافًا» ، فَمَا أَرْجُو بَعْدَ هَذَا؟


Almujam-Alkabir-13801

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13801. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. மனோஇச்சைப்படி (சுயலாபத்திற்கு) தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


القضاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة قاضي قضى بالهوى فهو في النار وقاضي قضى بغير علم فهو في النار وقاضي قضى بالحق فهو في الجنة


Almujam-Alkabir-1156

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1156. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே அநீதமாக தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்…

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«الْقُضَاةُ ثَلَاثَةٌ قَاضِيَانِ فِي النَّارِ، وَقَاضٍ فِي الْجَنَّةِ، قَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ وَهُوَ يَعْلَمُ، فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ وَهُوَ لَا يَعْلَمُ، فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالْحَقِّ وَهُوَ يَعْلَمُ، فَهُوَ فِي الْجَنَّةِ»


Almujam-Alkabir-1154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«الْقُضَاةُ ثَلَاثَةٌ قَاضِيَانِ فِي النَّارِ، وَقَاضٍ فِي الْجَنَّةِ، قَاضٍ قَضَى بِغَيْرِ حَقٍّ وَهُوَ يَعْلَمُ، فَذَاكَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى، وَهُوَ لَا يَعْلَمُ، فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ، فَذَلِكَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالْحَقِّ، فَذَاكَ فِي الْجَنَّةِ»


Almujam-Alkabir-8178

ஹதீஸின் தரம்: Pending

8178.


«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ، وَعَلِيٌّ هَاهُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ، وَكَانُوا لَا يَقْنُتُونَ فِي الْفَجْرِ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، مُحْدَثٌ»


Almujam-Alkabir-11316

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11316.


«قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ دَعَا عَلَى قَوْمٍ، وَدَعَا لِقَوْمٍ»


Almujam-Alkabir-11986

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11986.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَنَتَ فِي صَلَاةِ الْفَجْرِ»


Almujam-Alkabir-12311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12311. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபஜ்ர் தொழுகையில் பனூ சுலைம் கோத்திரத்தாரில் உள்ள (சில) குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள்.


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي الْفَجْرِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ بَنِي سُلَيْمٍ»


Almujam-Alkabir-11910

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11910. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய  அனைத்து தொழுகைகளில் குனூத் ஓதினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَنَتَ شَهْرًا فِي الصَّلَوَاتِ كُلِّهَا، الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ»


Next Page » « Previous Page