Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

885. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பத்து பேர் (கொண்ட ஒரு குழுவினர் ) வந்தபோது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தாயத் அணிந்து உள்ளார் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


أَنَّ عَشَرَةً أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُونَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ قَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَأَمْسَكْتَ عَنْ هَذَا؟ قَالَ: «إِنَّ هَذَا عَلَيْهِ تَمِيمَةٌ» فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ


Almujam-Alkabir-960

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

960. ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் நோயுற்றபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது  அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அவர்கள், தாயத் போன்றதை அணிவதற்கு மரணமே பரவாயில்லை எனக் கூறி, யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற தாம் செவியேற்றுள்ளதாக கூறினார்கள்.


دَخَلْنَا عَلَى أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ نَعُودُهُ فَقُلْنَا: أَلَا تُعِلِّقُ شَيْئًا؟ قَالَ: الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Almujam-Alkabir-820

ஹதீஸின் தரம்: More Info

820. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான். யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ عَلَّقَ وَدَعَةً فَلَا وَدَعَ اللهُ، وَمَنْ عَلَّقَ تَمِيمَةً فَلَا تَمَّمَ اللهُ لَهُ»


Almujam-Alkabir-12255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12255. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார்.


بَيْنَمَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ: ” هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلَّا الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ، فَقَالَ: هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الْأَرْضِ لَمْ يَنْزِلْ إِلَّا الْيَوْمَ فَسَلَّمَ، وَقَالَ: أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةِ الْكِتَابِ، وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ لَمْ تَقْرَأْ بِحَرْفٍ مِنْهَا إِلَّا أُعْطِيتَهُ


Almujam-Alkabir-1602

ஹதீஸின் தரம்: More Info

1602. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரை நீங்கள் தடுக்கமாட்டீர்கள் என்று உங்களைப்பற்றி எனக்கு தெரியும். (தடுக்கமாட்டீர்கள் என்று உங்களை நம்புகிறேன்)

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَأَعْرِفَنَّكُمْ يَا بَنِي عَبْدِ مَنَافٍ، مَا مَنَعْتُمْ طَائِفًا، يَطُوفُ بِهَذَا الْبَيْتِ سَاعَةَ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


Almujam-Alkabir-1600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1600.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்துல் முத்தலிபின் சந்ததிகளே! அப்து மனாஃபின் சந்ததிகளே! ஒரு நாள் நீங்கள் இந்த கஅபா ஆலயத்தின் பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டால் இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، وَيَا بَنِي عَبْدِ مَنَافٍ، إِنْ وُلِّيتُمْ مِنْ هَذَا الْأَمْرِ شَيْئًا، فَلَا تَمْنَعُوا أَحَدًا، طَافَ بِهَذَا الْبَيْتِ، يُصَلِّي أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


Almujam-Alkabir-1599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1599. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! அப்துல் முத்தலிப் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தொழும் எவரையும் நீங்கள் தடுக்கமாட்டீர்கள் என்று உங்களைப்பற்றி எனக்கு தெரியும். (தடுக்கமாட்டீர்கள் என்று உங்களை நம்புகிறேன்)

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَأَعْرِفَنَّ مَا مَنَعْتُمْ أَحَدًا مِنَ النَّاسِ، أَنْ يُصَلِّيَ عِنْدَ هَذَا الْبَيْتِ، أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


Almujam-Alkabir-1567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1567. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! ஒரு நாள் நீங்கள் இந்த கஅபா ஆலயத்தின் பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டால் இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، إِنْ وُلِّيتُمْ هَذَا الْأَمْرَ يَوْمًا، فَلَا تَمْنَعُوا طَائِفًا يَطُوفُ بِهَذَا الْبَيْتِ، أَيَّ سَاعَةٍ مِنْ سَاعَاتِ اللَّيْلِ، وِ النَّهَارِ»


Almujam-Alkabir-1603

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! அப்துத்தார் சந்ததிகளே!  இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، يَا بَنِي عَبْدِ الدَّارِ، لَا تَمْنَعُوا أَحَدًا، طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


Almujam-Alkabir-1601

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا، طَافَ بِهَذَا الْبَيْتِ سَاعَةً مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


Next Page » « Previous Page