Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-928

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

928. கைஸ் பின் ஆயித்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறிய சில செய்திகள்…

யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) இரவிலும், பகலிலும் ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு நரகத்தை விட்டு விடுதலை பெறும் பத்திரத்தை எழுதுவது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது…

 


يَا أَبَا كَاهِلٍ أَلَا أُخْبِرُكَ بِقَضَاءٍ قَضَاهُ اللهُ عَلَى نَفْسِهِ؟ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ: «أَحْيَى اللهُ قَلْبَكَ وَلَا يُمِيتُهُ حَتَّى يَمُوتَ بَدَنُكَ، اعْلَمْ

يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ لَنْ يَغْضَبَ رَبُّ الْعِزَّةِ عَلَى مَنْ كَانَ فِي قَلْبِهِ مَخَافَةٌ، وَلَا تَأْكُلُ النَّارُ مِنْهُ هُدْبَةً، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ سَتَرَ عَوْرَتَهُ حَيَاءً مِنَ اللهِ سِرًّا وَعَلَانِيَةً كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَسْتُرَ عَوْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ دَخَلَ حَلَاوَةُ الصَّلَاةِ قَلْبَهُ حَتَّى يُتِمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ صَلَّى أَرْبَعِينَ يَوْمًا وَأَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَكْتُبَ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ صَامَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ شَهْرِ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَرْوِيَهُ يَوْمَ الْعَطَشِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ كَفَّ أَذَاهُ عَنِ النَّاسِ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَكُفَّ عَنْهُ أَذَى الْقَبْرِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ بَرَّ وَالِدَيْهِ حَيًّا وَمَيِّتًا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ» قَالَ: قُلْتُ: كَيْفَ يَبَرُّ وَالِدَيْهِ إِذَا كَانَا مَيِّتَيْنِ؟ قَالَ: «بِرُّهُمَا أَنْ يَسْتَغْفِرَ لِوَالِدَيْهِ، وَلَا يَسُبَّ وَالِدِي أَحَدٍ فَيَسُبَّ وَالِدَيْهِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ أَدَّى زَكَاةَ مَالِهِ عِنْدَ حُلُولِهَا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَجْعَلَهُ مِنْ رُفَقَاءِ الْأَنْبِيَاءِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ قَلَّتْ عِنْدَهُ حَسَنَاتُهُ وَعَظُمَتْ عِنْدَهُ سَيِّئَاتُهُ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُثَقِّلَ مِيزَانَهُ يَوْمَ الْقِيَامَةِ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ سَعَى عَلَى امْرَأَتِهِ وَوَلَدِهِ وَمَا مَلَكَتْ يَمِينُهُ يُقِيمُ فِيهِمْ أَمَرَ اللهِ، وَيُطْعِمُهُمْ مِنْ حَلَالٍ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَجْعَلَهُ مِنَ الشُّهَدَاءِ فِي دَرَجَاتِهِمْ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ كُلَّ يَوْمٍ ثَلَاثَ مَرَّاتٍ وَكُلَّ لَيْلَةٍ ثَلَاثَ مَرَّاتٍ حُبًّا بِي وَشَوْقًا إِلَيَّ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَغْفِرَ لَهُ ذُنُوبَهُ تِلْكَ اللَّيْلَةَ وَذَلِكَ الْيَوْمَ، اعْلَمَنَّ يَا أَبَا كَاهِلٍ أَنَّهُ مَنْ شَهِدَ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ مُسْتَيْقِنًا بِهِ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَغْفِرَ لِكُلِّ وَاحِدَةٍ ذُنُوبَ حَوْلٍ»


Almujam-Alkabir-7466

ஹதீஸின் தரம்: Pending

7466.


«عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ، فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ، وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ، وَمَنْهَاةٌ عَنِ الْإِثْمِ»


Almujam-Alkabir-935

ஹதீஸின் தரம்: More Info

935. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரலி அறிவித்தார்.


«إِنَّ الْمُخْتَلِعَاتِ، وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»


Almujam-Alkabir-636

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

636. நபி (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்த பெண்மனி கவ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாய்க்குட்டி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நுழைந்து கட்டிலுக்கடியில் சென்று செத்துவிட்டது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபியவர்கள் கவ்லாவே அல்லாஹ்வின் தூதரின் வீட்டில் என்ன நடந்தது, ஜிப்ரீல் என்னிடம் வருவதில்லையே என்றார்கள். அப்போது எனக்குள் நான், வீட்டை சரிபடுத்தி கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது துடைப்பத்துடன் கட்டிலுக்கு கீழே குனிந்து, அங்கே கிடந்த நாய்க்குட்டியை கண்டு, வெளியே எடுத்துப் போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் முகம் நடுக்கத்துடன் வந்தார்கள். – அவர்களுக்கு வஹி இறங்கினால் நடுக்கம் எடுக்கும் – எனவே என்னைப் பார்த்து கவ்லாவே, என்னைப் போர்த்திவிடு என்றார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா, “வள்ளுஹா” என்று தெடங்கி “ஃபதர்ளா” முடிய உள்ள வசனங்களை இறக்கி வைத்தான்.


أَنَّ جِرْوًا دَخَلَ الْبَيْتَ وَدَخَلَ تَحْتَ السَّرِيرِ وَمَاتَ فَمَكَثَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيَّامًا لَا يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ، فَقَالَ: ” يَا خَوْلَةُ مَا حَدَثَ فِي بَيْتِ رَسُولِ اللهِ جِبْرِيلُ لَا يَأْتِينِي فَهَلْ حَدَثَ فِي بَيْتِ رَسُولِ اللهِ حَدَثٌ فَقُلْتُ: وَاللهِ مَا أَتَى عَلَيْنَا يَوْمٌ خَيْرٌ مِنْ يَوْمِنَا فَأَخَذَ بُرْدَهُ فَلَبِسَهُ وَخَرَجَ فَقُلْتُ: لَوْ هَيَّأْتُ الْبَيْتَ، وكَنَسْتَهُ فَأَهْوَيْتُ بِالْمِكْنَسَةِ تَحْتَ السَّرِيرِ فَإِذَا شَيْءٌ ثَقِيلٌ فَلَمْ أَزَلْ حَتَّى أَخْرَجْتُهُ فَإِذَا بِجِرْوٍ مَيِّتٍ فَأَخَذْتُهُ بِيَدِي فَأَلْقَيْتُهُ خَلْفَ الدَّارِ فَجَاءَ نَبِيُّ اللهِ تَرْعَدُ لَحْيَيْهِ، وَكَانَ إِذَا أَتَاهُ الْوَحْيُ أَخَذَتْهُ الرِّعْدَةُ فَقَالَ: ” يَا خَوْلَةُ دَثِّريني فَأَنْزَلَ اللهُ: ” {وَالضُّحَى، وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ، وَمَا قَلَى} [الضحى: 2]


Almujam-Alkabir-3277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து பாதுகாப்புபெற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என அபூகதாதா (ரலி) அறிவித்தார்.


«مَنْ سَرَّهُ أَنْ يَأْمَنَ مِنْ غَمِّ يَوْمِ الْقِيَامَةِ فَلْيَنْظُرْ مُعْسِرًا أَوْ لِيَضَعْ عَنْهُ»


Almujam-Alkabir-5606

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5606. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது சிலர் ஒரு ஜனாஸாவை கொண்டு சென்றனர். உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.

அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக்கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.


كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ، وَقَيْسِ بْنِ سَعْدٍ، بِالْقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجِنَازَةٍ، فَقَامَا، فَقِيلَ لَهُمَا: إِنَّمَا هُوَ مِنْ أَهْلِ الْأَرْضِ، فَقَالَا: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ: إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا»


Almujam-Alkabir-315

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

315. கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் மிம்பரின் முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கி சிறிது ஓய்வுக்குபின் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் செவியேற்றீர்களா? என்று கேட்க, நாங்கள் ஆம் என்று கூறினோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்க்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் மூன்றாவது படியில் ஏறும் போது யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள்

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا إِلَى الْمِنْبَرِ فَقَالَ حِينَ ” ارْتَقَى دَرَجَةً: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الْأُخْرَى فَقَالَ: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الثَّالِثَةَ فَقَالَ: «آمِينَ» ، فَلَمَّا نَزَلَ عَنِ الْمِنْبَرِ وَفَرَغَ، قُلْنَا: يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ كَلَامًا الْيَوْمَ مَا كُنَّا نَسْمَعُهُ قَبْلَ الْيَوْمِ؟، قَالَ: «وَسَمِعْتُمُوهُ؟» ، قَالُوا: نَعَمْ، قَالَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ لِي حِينَ ارْتَقَيْتُ دَرَجَةً فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبْرِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، قَالَ: قُلْتُ: آمِينَ، وَقَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ وَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ


Almujam-Alkabir-11248

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11248. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தங்குவோருக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«يُنْزِلُ اللهُ كُلَّ يَوْمٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ سِتُّونَ مِنْهَا للطَّوَّافينَ، وَأَرْبَعُونَ للعاكفينَ حَوْلَ الْبَيْتِ، وَعِشْرُونَ مِنْهَا لِلنَّاظِرِينَ إِلَى الْبَيْتِ»


Almujam-Alkabir-11475

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11475. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِنَّ اللهَ تَعَالَى يُنْزِلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ»


Almujam-Alkabir-713

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

713. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் எட்டு வயதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்தேன்.


«خَدَمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ» ،


Next Page » « Previous Page