Category: புஹாரி

Bukhari

Bukhari-6587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6587. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் ‘எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்றேன். அவர் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்’ என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் ‘(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். அவர் ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்’

بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، فَقُلْتُ: أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: وَمَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى. ثُمَّ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، قُلْتُ أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: مَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى، فَلاَ أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ


Bukhari-6586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான்.

இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஷுஐப் இப்னு அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்’ என்றும், அறிவிப்பாளர் உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Read More »

Bukhari-6585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :81


يَرِدُ عَلَيَّ يَوْمَ القِيَامَةِ رَهْطٌ مِنْ أَصْحَابِي، فَيُحَلَّئُونَ عَنِ الحَوْضِ، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى


Bukhari-6584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6584. (அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் ‘இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்’ ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’ என்று நான் கூறுவேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று சொல்லப்படும். உடனே நான் ‘எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள்.

Read More »

Bukhari-6583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنِّي فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، مَنْ مَرَّ عَلَيَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، لَيَرِدَنَّ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ»


Bukhari-6582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6582. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்பான்.

என அனஸ் (ரலி) அறிவித்தார்.

Book :81


لَيَرِدَنَّ عَلَيَّ نَاسٌ مِنْ أَصْحَابِي الحَوْضَ، حَتَّى عَرَفْتُهُمْ اخْتُلِجُوا دُونِي، فَأَقُولُ: أَصْحَابِي، فَيَقُولُ: لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ


Bukhari-6581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6581. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் ‘(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?’ என்று கேட்டேன். அவர் ‘இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா’ என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.154

‘வாசனை’ யா(தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா இப்னு காலித் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

Book :81


بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الجَنَّةِ، إِذَا أَنَا بِنَهَرٍ، حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ المُجَوَّفِ، قُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا الكَوْثَرُ، الَّذِي أَعْطَاكَ رَبُّكَ، فَإِذَا طِينُهُ – أَوْ طِيبُهُ – مِسْكٌ أَذْفَرُ ” شَكَّ هُدْبَةُ


Bukhari-6580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6580. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ اليَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ»


Bukhari-6579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6579. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். 153

என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

Book :81


«حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ المِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا»


Bukhari-6578

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6578. ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 108:1 வது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகையில், ‘அது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்’ என்று தெரிவித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ பிஷ்ர் ஜஅஃபர் இப்னு அபீ வஹ்ஷிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் ‘சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!’ என்று கேட்டேன். அதற்கு ஸயீத்(ரஹ்) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்றார்கள். 152

Book :81


الكَوْثَرُ: الخَيْرُ الكَثِيرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ ” قَالَ أَبُو بِشْرٍ: قُلْتُ لِسَعِيدٍ: إِنَّ أُنَاسًا يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الجَنَّةِ؟ فَقَالَ سَعِيدٌ: «النَّهَرُ الَّذِي فِي الجَنَّةِ مِنَ الخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ»


Next Page » « Previous Page