Category: புஹாரி

Bukhari

Bukhari-6517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 எக்காளம் ஊதப்படுதல்100 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (39:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்ஸூர்’ என்பது எக்காளம்’ வடிவிலுள்ள ஓர் ஊதுகுழலாகும். (37:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஜ்ரத்’ என்பதற்கு பெரும் சப்தம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (74:8ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) அந்நாக்கூர்’எனும் சொல்லுக்கு எக்காளம்’ என்று பொருள். (79:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ராஜிஃபா (நிலநடுக்கம்) என்பது முதலாவது எக்காளத் தையும், (79:7ஆவது வசனத்திலுள்ள) அர்ராதிஃபா’ (தொடர்ந்து வருவது) என்பது இரண்டாவது எக்காளத்தையும் குறிக்கும்.

6517. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இரண்டு பேர் சச்சரவிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம்; மற்றொருவர் யூதர். அந்த முஸ்லிம் (தாம் செய்த ஒரு சத்தியத்தின் போது) ‘அம்லத்தார் அனைவரையும் விட மூஸா(அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக! என்று கூறினார். இதைக் கேட்ட அந்த முஸ்லிம் கோபமடைந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்

اسْتَبَّ رَجُلاَنِ: رَجُلٌ مِنَ المُسْلِمِينَ، وَرَجُلٌ مِنَ اليَهُودِ، فَقَالَ المُسْلِمُ: وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى العَالَمِينَ، فَقَالَ اليَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى العَالَمِينَ، قَالَ: فَغَضِبَ المُسْلِمُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ وَجْهَ اليَهُودِيِّ، فَذَهَبَ اليَهُودِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ المُسْلِمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ فِي أَوَّلِ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ مُوسَى فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ»


Bukhari-6516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6516. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தோரை திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 82


«لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا»


Bukhari-6515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6515. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது ‘இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்கு தான் நீ அனுப்பப்படுவாய்’ என்று கூறப்படும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 98

Book :82


إِذَا مَاتَ أَحَدُكُمْ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ، غُدْوَةً وَعَشِيًّا، إِمَّا النَّارُ وَإِمَّا الجَنَّةُ، فَيُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى تُبْعَثَ إِلَيْهِ


Bukhari-6514

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6514. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :82


يَتْبَعُ المَيِّتَ ثَلاَثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ: يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ


Bukhari-6513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6513. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இவர்) ஓய்வு பெற்றவர்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார். இறைநம்பிக்கையாளர் (இறக்கும்போது, இவ்வுலகத் துன்பங்களிலிருந்து) ஓய்வு பெறுகிறார்.

என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

Book :82


«مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ، المُؤْمِنُ يَسْتَرِيحُ»


Bukhari-6512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6512. அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன’ என்றார்கள்.

Book :82


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ، فَقَالَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا المُسْتَرِيحُ وَالمُسْتَرَاحُ مِنْهُ؟ قَالَ: «العَبْدُ المُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ، وَالعَبْدُ الفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ العِبَادُ وَالبِلاَدُ، وَالشَّجَرُ وَالدَّوَابُّ»


Bukhari-6511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6511. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்’ என்று கூறுவார்கள்.

இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.97

Book :82


كَانَ رِجَالٌ مِنَ الأَعْرَابِ جُفَاةً، يَأْتُونَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَسْأَلُونَهُ: مَتَى السَّاعَةُ؟ فَكَانَ يَنْظُرُ إِلَى أَصْغَرِهِمْ فَيَقُولُ: «إِنْ يَعِشْ هَذَا لاَ يُدْرِكْهُ الهَرَمُ حَتَّى تَقُومَ عَلَيْكُمْ سَاعَتُكُمْ»، قَالَ هِشَامٌ: يَعْنِي مَوْتَهُمْ


Bukhari-6510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 மரணத்தின் வேதனைகள்95

6510. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(நோய் வாய்ப்பட்டிருந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக்குவளையொன்று’ இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. அவர்கள் தம் இரண்டு கைகளையும் அந்தத் தண்ணீருக்குள் நுழைத்து முகத்தில் தடவிக் கொண்டே ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு’ என்று கூறினார்கள்.

பிறகு தம் கையை உயர்த்தியவாறு ‘(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ எனப் பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.96

அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘உல்பா’ என்பது மரப் பாத்திரத்தையும், ‘ரக்வா’ என்பது தோல் பாத்திரத்தையும் குறிக்கும்.

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ – أَوْ عُلْبَةٌ فِيهَا مَاءٌ، يَشُكُّ عُمَرُ – فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي المَاءِ، فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، وَيَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ: «فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «العُلْبَةُ مِنَ الخَشَبِ، وَالرَّكْوَةُ مِنَ الأَدَمِ»