Category: புஹாரி

Bukhari

Bukhari-6467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6467. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினும் அதற்குரிய பிரதிபலன் இறைவனிடம் கிடைக்கும் என்ற) நற்செயல் சொர்க்கத்தில் நுழைவித்துவிடாது’ என்று கூறினார்கள். மக்கள் ‘தங்களையுமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று வினவினார்கள். என்னையும் தான்; அல்லாஹ் மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர,’ என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில் ‘நேர்மையோடு செயல்படுங்கள்; நற்செய்தி பெறுங்கள்’ என்று இடம் பெற்றுள்ளது.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நேர்மை அல்லது நடுநிலை என்பதற்கு ‘வாய்மை’ என்று இங்கு பொருளாகும். இதை (அரபியில்) ‘சதீத்’ மற்றும் ‘சதாத்’ என்பர்.

Book :81


«سَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا ، فَإِنَّهُ لا يُدْخِلُ أَحَدًا الجَنَّةَ عَمَلُهُ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَلا أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِمَغْفِرَةٍ وَرَحْمَةٍ» قَالَ: أَظُنُّهُ عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ. وَقَالَ عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَدِّدُوا وَأَبْشِرُوا» قَالَ مُجَاهِدٌ: {قَوْلًا سَدِيدًا} [النساء: 9]: ” وَسَدَادًا: صِدْقًا


Bukhari-6466

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6466. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று ) குறிப்பிட்ட நாள்கள் எதையும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை. அவர்களின் (எந்த வணக்க வழிபாடு)ம் நிரந்தரமானதாகவே இருந்தது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்ததைப் போன்று உங்களில் எவரால் செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.

Book :81


سَأَلْتُ أُمَّ المُؤْمِنِينَ عَائِشَةَ، قُلْتُ: يَا أُمَّ المُؤْمِنِينَ، كَيْفَ كَانَ عَمَلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، هَلْ كَانَ يَخُصُّ شَيْئًا مِنَ الأَيَّامِ؟ قَالَتْ: «لاَ، كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَطِيعُ»


Bukhari-6465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6465. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.

Book :81


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «أَدْوَمُهَا وَإِنْ قَلَّ» وَقَالَ: «اكْلَفُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ»


Bukhari-6464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6464. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :81


«سَدِّدُوا وَقَارِبُوا، وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الجَنَّةَ، وَأَنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ»


Bukhari-6463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6463. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)’ என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)’ என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்’ என்றார்கள்.

Book :81


«لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ، سَدِّدُوا وَقَارِبُوا، وَاغْدُوا وَرُوحُوا، وَشَيْءٌ مِنَ الدُّلْجَةِ، وَالقَصْدَ القَصْدَ تَبْلُغُوا»


Bukhari-6462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6462. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.

Book :81


«كَانَ أَحَبُّ العَمَلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ»


Bukhari-6461

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 நற்செயல்கள் புரிவதில் நடுநிலைப் போக்கும் நீடித்த நிலையும் (விரும்பத்தக்கவை ஆகும்).46

6461. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நிரந்தரமாய்ச் செய்யப்படும் செயல்’ என்று விடையளித்தார்கள். ‘(இரவில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) எப்போது எழுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் ‘சேவல் கூவும்போது (நடுநிசி நேரம்) எழு(ந்து தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள்.

Book : 81


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَيُّ العَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «الدَّائِمُ» قَالَ: قُلْتُ: فَأَيَّ حِينٍ كَانَ يَقُومُ؟ قَالَتْ: «كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ»


Bukhari-6460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6460. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

Book :81


«اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا»


Bukhari-6459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6459. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம் ‘நான் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் (ஆனால்,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது’ என்று கூறினார்கள். அதற்கு நான் ‘(அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?’ என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள் கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு) இருப்பினும், அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அண்டைவீட்டாராக, இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்து கொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்.

Book :81


أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ: «ابْنَ أُخْتِي، إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ [ص:98] رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ» فَقُلْتُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: «الأَسْوَدَانِ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبْيَاتِهِمْ فَيَسْقِينَاهُ»


Bukhari-6458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6458. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காமலேயே ஒரு மாதகாலம் கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் தவிர.

Book :81


«كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا، إِنَّمَا هُوَ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنْ نُؤْتَى بِاللُّحَيْمِ»


Next Page » « Previous Page