Category: புஹாரி

Bukhari

Bukhari-6065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :78


«لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ»


Bukhari-6064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57 பொறாமையும் பிணக்கும் தடை செய்யப் பட்டவையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுக). (113:5)

6064. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 78


«إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا»


Bukhari-6063

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 56 ‘நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் (உங்களை) ஏவுகின்றான். அன்றியும், மானக்கேடான செயல்கள்,பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைச் செய்வதற்குத் தடை விதிக்கின்றான். நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான்’ எனும் (16:90 ஆவது) இறைவசனம். ‘(மனிதர்களே!) உங்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் உங்களுக்கே கேடாக முடியும்’ எனும் (10:23ஆவது) இறைவசனம். ‘அதன் பின் அவனுக்குக் கொடுமை இழைக்கப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்’ எனும் (22:60 ஆவது) இறைவசனம். மேலும், முஸ்லிமுக்கெதிராகவோ இறை மறுப்பாளருக்கெதிராகவோ வன்மத்தைத் தூண்டாமல் இருப்பது.

6063. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ‘ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ

مَكَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَا وَكَذَا، يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَأْتِي أَهْلَهُ وَلاَ يَأْتِي، قَالَتْ عَائِشَةُ: فَقَالَ لِي ذَاتَ يَوْمٍ: ” يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ أَفْتَانِي فِي أَمْرٍ اسْتَفْتَيْتُهُ فِيهِ: أَتَانِي رَجُلاَنِ، فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رِجْلَيَّ وَالآخَرُ عِنْدَ رَأْسِي، فَقَالَ الَّذِي عِنْدَ رِجْلَيَّ لِلَّذِي عِنْدَ رَأْسِي: مَا بَالُ الرَّجُلِ؟ قَالَ: مَطْبُوبٌ، يَعْنِي مَسْحُورًا، قَالَ: وَمَنْ طَبَّهُ؟ قَالَ: لَبِيدُ بْنُ أَعْصَمَ، قَالَ: وَفِيمَ؟ قَالَ: فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ، تَحْتَ رَعُوفَةٍ فِي بِئْرِ ذَرْوَانَ ” فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَذِهِ البِئْرُ الَّتِي أُرِيتُهَا، كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ، وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الحِنَّاءِ» فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخْرِجَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَهَلَّا، تَعْنِي تَنَشَّرْتَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي، وَأَمَّا أَنَا فَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا» قَالَتْ: وَلَبِيدُ بْنُ أَعْصَمَ، رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ، حَلِيفٌ لِيَهُودَ


Bukhari-6062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55 ஒருவர் தம் சகோதரர் குறித்து தாம் அறிந்த வற்றைக் கூறிப் புகழ்வது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (யூத அறிஞராயிருந்து முஸ்லிமான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர பூமியின் மீது நடக்கின்ற வேறெவரைக் குறித்தும் ‘இவர் சொர்க்கவாசி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டதில்லை.79

6062. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழங்கி குறித்து (ஆடையைப் பெருமையுடன் தரையில் படும்படி இழுத்துச் செல்கிறவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று) குறிப்பிட்டபோது அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று (இடுப்பில் நிற்காமல் கீழே) விழுந்துவிடுகிறதே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (தற்பெருமையுடன் கீழங்கியைத் தொங்க விடும்) அவர்களில் உள்ளவர் அல்லர்’ என்று கூறினார்கள்.80

பகுதி 56

‘நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ ذَكَرَ فِي الإِزَارِ مَا ذَكَرَ، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ إِزَارِي يَسْقُطُ مِنْ أَحَدِ شِقَّيْهِ؟ قَالَ: «إِنَّكَ لَسْتَ مِنْهُمْ»


Bukhari-6061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6061. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!’ என்று பல முறை கூறினார்கள். பிறகு, ‘உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்.

காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘(நபி(ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.78

Book :78


أَنَّ رَجُلًا ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَيْحَكَ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ – يَقُولُهُ مِرَارًا – إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسِبُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ، وَحَسِيبُهُ اللَّهُ، وَلاَ يُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا ” قَالَ وُهَيْبٌ، عَنْ خَالِدٍ: «وَيْلَكَ»


Bukhari-6060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 (யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்பட்ட செயலாகும்.

6060. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘அந்த மனிதரின் முதுகை ‘அழித்துவிட்டீர்கள்’ அல்லது ‘ஒடித்து விட்டீர்கள்’ என்று (கடிந்து) கூறினார்கள்.77

Book : 78


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ فِي المِدْحَةِ فَقَالَ: ” أَهْلَكْتُمْ، أَوْ: قَطَعْتُمْ ظَهْرَ الرَّجُلِ


Bukhari-6059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 தம் நண்பரைப் பற்றிப் பேசப்படும் தகவலை அவருக்குத் தெரிவித்(து அவரை விழிப்படையச் செய்)தல்.

6059. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில், ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடவில்லை’ என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் (அம்மனிதர் கூறியதைச்) சொன்னேன். (அதைக் கேட்ட) உடனே அவர்களின் முகம் (கோபத்தினால் நிறம்) மாறிவிட்டது. (தொடர்ந்து) அவர்கள், ‘(இறைத்தூதர்) மூஸாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் சகித்துக்கொண்டார்கள்’ என்று கூறினார்கள்.76

Book : 78


قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: وَاللَّهِ مَا أَرَادَ مُحَمَّدٌ بِهَذَا وَجْهَ اللَّهِ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَتَمَعَّرَ وَجْهُهُ، وَقَالَ: «رَحِمَ اللَّهُ مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»


Bukhari-6058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 இரட்டை முகத்தான் பற்றிக் கூறப்பட்டவை

6058. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.75

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 78


«تَجِدُ مِنْ شَرِّ النَّاسِ يَوْمَ القِيَامَةِ عِنْدَ اللَّهِ ذَا الوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ»


Bukhari-6057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 ‘பொய் பேசுவதிலிருந்து தவிர்ந்துகொள் ளுங்கள்’ எனும் (22:30ஆவது) இறைவசனம்.

6057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.74

அறிவிப்பாளர் அஹ்மத் இப்னு யூனுஸ்(ரஹ்) கூறினார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீ திஃப்(ரஹ்)) இதன் அறிவிப்பாளர் தொடரை (விளக்கவில்லை. அவையில் இருந்த) ஒருவர் (அதை) எனக்கு விளக்கினார்.

Book : 78


«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ وَالجَهْلَ ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ» قَالَ أَحْمَدُ: أَفْهَمَنِي رَجُلٌ إِسْنَادَهُ


Bukhari-6056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 கோள் சொல்வதன் தீமை அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) குறை கூறித் திரிகின்ற, கோள் சொல்லி அலைகின்ற (எவருக்கும் நீங்கள் இணங்கிவிடாதீர்கள்). (68:11) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: குறை சொல்லிக்கொண்டும் புறம் பேசிக் கொண்டும் திரிகின்ற எவருக்கும் கேடுதான். (104:1) (இதன் மூலத்தில் உள்ள ஹுமஸத், லுமஸத் ஆகியவற்றின் வினைச் சொற்களான) யஹ்மிஸு, யல்மிஸு ஆகிய சொற்களுக்கும் ‘யஈபு’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. (குறை கூறுதல்.)

6056. ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் ‘(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்’ என்று கூறப்பட்டது.

அப்போது ஹுதைஃபா(ரலி) ‘கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

Book : 78


كُنَّا مَعَ حُذَيْفَةَ، فَقِيلَ لَهُ: إِنَّ رَجُلًا يَرْفَعُ الحَدِيثَ إِلَى عُثْمَانَ، فَقَالَ لَهُ حُذَيْفَةُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَدْخُلُ الجَنَّةَ قَتَّاتٌ»


Next Page » « Previous Page