Category: புஹாரி

Bukhari

Bukhari-6045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

அத்தியாயம்: 78


«لاَ يَرْمِي رَجُلٌ رَجُلًا بِالفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالكُفْرِ، إِلَّا ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ»


Bukhari-6044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44 ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப் பட்டுள்ள தடை.

6044. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.58

Book : 78


«سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ» تَابَعَهُ غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ


Bukhari-6043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6043. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மினாவில் (தங்கியிருந்தபோது ‘துல்ஹஜ்’ பத்தாம் நாள் உரையாற்றுகையில்) ‘மக்களே! இது என்ன நாள் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித நாள்’ என்று கூறினார்கள்.

(பிறகு) ‘இது எந்த நகரம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித நகரம்’ என்று கூறினார்கள். (பிறகு) ‘இது என்ன மாதம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித மாதம்’ என்று கூறிவிட்டு, ‘நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்’ என்று கூறினார்கள்.57

Book :78


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «بَلَدٌ حَرَامٌ، أَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «شَهْرٌ حَرَامٌ» قَالَ: «فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا»


Bukhari-6042

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 43

இறைநம்பிக்கையாளர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்’என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 49:11) ஆவது இறைவசனம்.

6042. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், (பெண்கள் தொடர்பாக) ‘நீங்கள் உங்கள் மனைவியை ஏன் காளையை அடிப்பது போல் அடிக்கிறீர்கள்? பிறகு நீங்களே அவளை (இரவில்) அணைத்துக் கொள்ள வேண்டிவருமே!’ என்றும் கூறினார்கள்.


ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘அடிமையை அடிப்பது போல் (ஏன் அடிக்கிறீர்கள்?)’ என்று காணப்படுகிறது. 


அத்தியாயம்: 78


نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَضْحَكَ الرَّجُلُ مِمَّا يَخْرُجُ مِنَ الأَنْفُسِ، وَقَالَ: «بِمَ يَضْرِبُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ضَرْبَ الفَحْلِ، أَوِ العَبْدِ، ثُمَّ لَعَلَّهُ يُعَانِقُهَا»
وَقَالَ الثَّوْرِيُّ، وَوُهَيْبٌ، وَأَبُومُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ: «جَلْدَ العَبْدِ»


Bukhari-6041

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

அல்லாஹ்வுக்காக நேசம்கொள்வது

6041. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராகவது.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.55

Book : 78


«لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا»


Bukhari-6040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

அன்பு அல்லாஹ்விடமிருந்தே ஆரம்பமாகிறது.

6040. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். எனவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.54

Book : 78


إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي أَهْلِ الأَرْضِ


Bukhari-6039

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6039. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.53

Book :78


سَأَلْتُ عَائِشَةَ، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي أَهْلِهِ؟ قَالَتْ: «كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ»


Bukhari-6038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 ஒருவர் தம் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

6038. அனஸ் (ரலி) அறிவித்தார்

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.

Book : 78


خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي: أُفٍّ، وَلاَ: لِمَ صَنَعْتَ؟ وَلاَ: أَلَّا صَنَعْتَ


Bukhari-6037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6037. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள்.

மக்கள், ‘ஹர்ஜ் என்றால் என்ன?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘கொலை கொலை’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

Book :78


«يَتَقَارَبُ الزَّمَانُ، وَيَنْقُصُ العَمَلُ، وَيُلْقَى الشُّحُّ، وَيَكْثُرُ الهَرْجُ» قَالُوا: وَمَا الهَرْجُ؟ قَالَ: «القَتْلُ القَتْلُ»


Bukhari-6036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6036. அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என மக்களிடம் கேட்டார்கள். அப்போது மக்கள், ‘அது சால்வை’ என்றனர். அப்போது ஸஹ்ல்(ரலி), ‘அது கரை வைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்’ என்று கூறினார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) அப்போது அந்தப் பெண்மணி, ‘இதனை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்(து கொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை எனக்கு அணிவித்துவிடுங்களேன்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘சரி’ என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்றுவிட்டபோது, அந்தத் தோழரிடம் அவரின் நண்பர்கள் ‘நீர் செய்தது அழகல்ல் நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் தான் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ، فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ: أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ فَقَالَ القَوْمُ: هِيَ الشَّمْلَةُ، فَقَالَ سَهْلٌ: هِيَ شَمْلَةٌ مَنْسُوجَةٌ فِيهَا حَاشِيَتُهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَكْسُوكَ هَذِهِ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا فَلَبِسَهَا، فَرَآهَا عَلَيْهِ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَحْسَنَ هَذِهِ، فَاكْسُنِيهَا، فَقَالَ: «نَعَمْ» فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَمَهُ أَصْحَابُهُ، قَالُوا: مَا أَحْسَنْتَ حِينَ رَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَهَا مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يُسْأَلُ شَيْئًا فَيَمْنَعَهُ، فَقَالَ: رَجَوْتُ بَرَكَتَهَا حِينَ لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَعَلِّي أُكَفَّنُ فِيهَا


Next Page » « Previous Page