Category: புஹாரி

Bukhari

Bukhari-5985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

உறவைப் பேணி வாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கித் தரப்படும்.

5985. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.16

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 78


«مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»


Bukhari-5984

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.

5984. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

அத்தியாயம்: 78


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ


Bukhari-5983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5983. அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) கூறியாதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், ‘இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?’ என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்’ என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு

(அந்த மனிதரை நோக்கி), ‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்றவேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக’ என்று கூறினார்கள்.

அம்மனிதர் (அப்போது) தம் வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.14

Book :78


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ، فَقَالَ القَوْمُ: مَا لَهُ مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَبٌ مَا لَهُ»

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، ذَرْهَا» قَالَ: كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ


Bukhari-5982

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு.

5982. அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்’ என்று வினவப்பட்டது.13

Book : 78


قِيلَ: «يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ»


Bukhari-5981

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

(இறைவனுக்கு) இணைவைக்கும் சகோதரனுடனும் உறவைப் பேணி வாழ்வது.

5981. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

(என் தந்தை) உமர் (ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்’ என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

உமர் (ரலி), ‘நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை.

رَأَى عُمَرُ حُلَّةَ سِيَرَاءَ تُبَاعُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ وَالبَسْهَا يَوْمَ الجُمُعَةِ، وَإِذَا جَاءَكَ الوُفُودُ. قَالَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا بِحُلَلٍ، فَأَرْسَلَ إِلَى عُمَرَ بِحُلَّةٍ،

فَقَالَ: كَيْفَ أَلْبَسُهَا وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ؟ قَالَ: «إِنِّي لَمْ أُعْطِكَهَا لِتَلْبَسَهَا، وَلَكِنْ تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا» فَأَرْسَلَ بِهَا عُمَرُ إِلَى أَخٍ لَهُ مِنْ أَهْلِ مَكَّةَ قَبْلَ أَنْ يُسْلِمَ


Bukhari-5980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5980. அபூ சுஃப்யான் (ரலி) அறிவித்தார்:

(பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.12

Book :78


أَنَّ أَبَا سُفْيَانَ أَخْبَرَهُ: أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ –  يَأْمُرُنَا بِالصَّلاَةِ، وَالصَّدَقَةِ، وَالعَفَافِ، وَالصِّلَةِ»


Bukhari-5979

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

கணவன் உள்ள ஒரு பெண் தன் தாயுடன் உறவைப் பேணி வாழ்வது.

5979. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான் “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துக் கொள்” என்று சொன்னார்கள்.


قَدِمَتْ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ، فِي عَهْدِ قُرَيْشٍ وَمُدَّتِهِمْ إِذْ عَاهَدُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَعَ ابْنِهَا، فَاسْتَفْتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: إِنَّ أُمِّي قَدِمَتْ وَهِيَ رَاغِبَةٌ؟ أَفَأَصِلُهَا؟ قَالَ: «نَعَمْ، صِلِي أُمَّكِ»


Bukhari-5978

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

(இறைவனுக்கு) இணைவைக்கும் பெற்றோராயினும் அவர்களின் உறவையும் பேணி வாழ்வது.10

5978. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள்.11

‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக,

‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்”

என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார்.

أَتَتْنِي أُمِّي رَاغِبَةً، فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: آصِلُهَا؟ قَالَ: «نَعَمْ»

قَالَ ابْنُ عُيَيْنَةَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهَا: {لاَ يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ} [الممتحنة: 8]