Category: புஹாரி

Bukhari

Bukhari-5925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 76

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன் கணவருக்குத் தலை வாரிவிடுவது.

5925. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன்.

இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 113

Book : 77


«كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: مِثْلَهُ


Bukhari-5924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

சீப்பினால் தலை வாருதல்.

5924. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.

(வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 77


أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى

فَقَالَ: «لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ، لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ»


Bukhari-5923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

5923. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும், அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

Book : 77


«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ»


Bukhari-5922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73

மனைவி தன் கரங்களால் கணவனுக்கு நறுமணம் பூசுவது.

5922. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான்அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டபோதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.

Book : 77


«طَيَّبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي لِحُرْمِهِ، وَطَيَّبْتُهُ  بِمِنًى قَبْلَ أَنْ يُفِيضَ»


Bukhari-5921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5921. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

Book :77


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ القَزَعِ»


Bukhari-5920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 72

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது).

5920. நாஃபிஉ (ரஹ்) அறிவித்தார்:

இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு ஹஃப்ஸ் (ரஹ்) கூறினார்:

நான், உமர் இப்னு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் ‘ ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்’ என்று கூறி, தம் நெற்றி முடி மற்றும் தலையின் இரண்டு பக்கங்களையும் எங்களிடம் கட்டிக் காட்டினார்கள்.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம் தானா?’ என்று கேட்கப்பட்டது? அவர்கள் ‘எனக்குத்

«سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ القَزَعِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: قُلْتُ: وَمَا القَزَعُ؟ فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ قَالَ: إِذَا حَلَقَ الصَّبِيَّ، وَتَرَكَ هَا هُنَا شَعَرَةً وَهَا هُنَا وَهَا هُنَا، فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ إِلَى نَاصِيَتِهِ وَجَانِبَيْ رَأْسِهِ. قِيلَ لِعُبَيْدِ اللَّهِ: فَالْجَارِيَةُ وَالغُلاَمُ؟ قَالَ: لاَ أَدْرِي، هَكَذَا قَالَ: الصَّبِيُّ. قَالَ عُبَيْدُ اللَّهِ: وَعَاوَدْتُهُ، فَقَالَ: أَمَّا القُصَّةُ وَالقَفَا لِلْغُلاَمِ فَلاَ بَأْسَ بِهِمَا، وَلَكِنَّ القَزَعَ أَنْ يُتْرَكَ بِنَاصِيَتِهِ شَعَرٌ، وَلَيْسَ فِي رَأْسِهِ غَيْرُهُ، وَكَذَلِكَ شَقُّ رَأْسِهِ هَذَا وَهَذَا


Bukhari-5919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71

தொங்கும் முடிகள்.

5919. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். இரவில் (‘தஹஜ்ஜுத்’ தொழுகை) தொழுவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக் கொண்டார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூ பிஷ்ர் (ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பில், ‘என் தொங்கும் முடியைப் பிடித்து’ அல்லது ‘என் தலையைப் பிடித்து’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.112

Book :

بِتُّ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ خَالَتِي، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، قَالَ: «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ» قَالَ: «فَأَخَذَ بِذُؤَابَتِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ»

حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ: بِهَذَا، وَقَالَ: بِذُؤَابَتِي، أَوْ بِرَأْسِي


Bukhari-5918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5918. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது அவர்களின் தலை வகிடுகளில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ரஜாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘நபி (ஸல்) அவர்களின் வகிட்டில்’ என்று (ஒருமையாக) வந்துள்ளது.

Book :77


«كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»

قَالَ عَبْدُ اللَّهِ: فِي مَفْرِقِ النَّبِيِّ


Bukhari-5917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 70

தலை முடியில் வகிடு எடுத்தல்.

5917. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) எந்த விஷயத்தில் தமக்கு (இறைக்) கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பி வந்தார்கள்.

வேதக்காரர்கள் தங்களின் தலை முடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டு வந்தார்கள். பிறகு அதை (வகிடெத்து)ப் பிரித்தார்கள்.

அத்தியாயம்: 77


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ، وَكَانَ أَهْلُ الكِتَابِ يَسْدِلُونَ أَشْعَارَهُمْ،

وَكَانَ المُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ،

فَسَدَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاصِيَتَهُ، ثُمَّ فَرَقَ بَعْدُ»


Bukhari-5916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5916. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அறிவித்தார்:

நான் (‘விடைபெறும்’) ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே!’ என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன். மேலும், என் தியாக (குர்பானி)ப் பிராணிக்கு (அடையாள) மாலை தொங்கவிட்டு விட்டேன். எனவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.110

Book :77


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟

قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


Next Page » « Previous Page