Category: புஹாரி

Bukhari

Bukhari-5863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 45

தங்க மோதிரங்கள்.

5863. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

  1. ‘தங்க மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’,
  2. சாதாரணப் பட்டு,
  3. தடித்தப்பட்டு,
  4. அலங்காரப்பட்டு,
  5. சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா),
  6. பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை,
  7. வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

மேலும்,

  1. நோயாளிகளை நலம் விசாரிப்பது,
  2. ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று

    نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَبْعٍ: نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ ” أَوْ قَالَ: ” حَلْقَةِ الذَّهَبِ، وَعَنِ الحَرِيرِ، وَالإِسْتَبْرَقِ، وَالدِّيبَاجِ، وَالمِيثَرَةِ الحَمْرَاءِ، وَالقَسِّيِّ، وَآنِيَةِ الفِضَّةِ. وَأَمَرَنَا بِسَبْعٍ: بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَرَدِّ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِبْرَارِ المُقْسِمِ، وَنَصْرِ المَظْلُومِ


Bukhari-5862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை.

5862. மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அறிவித்தார்:

(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அன்பு மகனே! நபி( ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டியுள்ளது. எனவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு’ என்றார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘உங்களுக்காக நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் அன்பு மகனே! (நபி-ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்’ என்று சொல்ல, நான்       நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப்பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டு வந்து, ‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து

يَا بُنَيِّ، إِنَّهُ بَلَغَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهُوَ يَقْسِمُهَا، فَاذْهَبْ بِنَا إِلَيْهِ، فَذَهَبْنَا فَوَجَدْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنْزِلِهِ، فَقَالَ لِي: يَا بُنَيِّ ادْعُ لِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْظَمْتُ ذَلِكَ، فَقُلْتُ: أَدْعُو لَكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: يَا بُنَيِّ، إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ، فَدَعَوْتُهُ، فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرٌ بِالذَّهَبِ، فَقَالَ: «يَا مَخْرَمَةُ، هَذَا خَبَأْنَاهُ لَكَ» فَأَعْطَاهُ إِيَّاهُ


Bukhari-5861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

பாய் முதலானவற்றின் மீது அமர்வது.

5861. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள்.

மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே,

நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள்.77

Book : 77


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ فَيُصَلِّي عَلَيْهِ، وَيَبْسُطُهُ بِالنَّهَارِ فَيَجْلِسُ عَلَيْهِ، فَجَعَلَ النَّاسُ يَثُوبُونَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُصَلُّونَ بِصَلاَتِهِ حَتَّى كَثُرُوا،

فَأَقْبَلَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دَامَ وَإِنْ قَلَّ»


Bukhari-5860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5860. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள்.76

Book :77


«أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْأَنْصَارِ وَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ»


Bukhari-5859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரம்.

5859. அபூஜுஹைஃபா ரலி அவர்கள் அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்பு கூடாரத்தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன்.

மக்கள் அந்த தண்ணீருக்காக போட்டியிட்டனர். அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக்கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக்கப்பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க் கொண்டார்.


«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلًا أَخَذَ وَضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَالنَّاسُ يَبْتَدِرُونَ الوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا، أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ»


Bukhari-5858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5858. ஈசா இப்னு தஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரண்டு காலணிகளை எங்களுக்குக் காட்டினார்கள்.

(பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள்,  “இதுதான்            நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்றார்கள்.74

Book :77


خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ، بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ فَقَالَ ثَابِتٌ البُنَانِيُّ: «هَذِهِ نَعْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-5857

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

ஒரு காலணியில் இரண்டு வார்களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.

5857. அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன.

Book : 77


«أَنَّ نَعْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهَا قِبَالاَنِ»


Bukhari-5856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40

ஒரேயொரு காலணியில் நடக்கலாகாது.

5856. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 77


«لاَ يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ، لِيُحْفِهِمَا جَمِيعًا، أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا»


Bukhari-5855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39

முதலில் இடது கால், காலணியைக் கழற்ற வேண்டும்.

5855. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 77


«إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ»


Bukhari-5854

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38

முதலில் வலது கால், காலணியை அணிய வேண்டும்.

5854. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73

Book : 77


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ، وَتَرَجُّلِهِ، وَتَنَعُّلِهِ»


Next Page » « Previous Page