Category: புஹாரி

Bukhari

Bukhari-5853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5853. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஹ்ராமின் போது) கீழங்கி இல்லாதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்து கொள்ளட்டும்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

Book :77


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَكُنْ لَهُ إِزَارٌ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ»


Bukhari-5852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5852. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

மேலும், ‘(இஹ்ராம் கட்டியிருக்கும் போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும்’ என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.71

Book :77


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَ المُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ أَوْ وَرْسٍ. وَقَالَ: «مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ»


Bukhari-5851

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5851. உபைத் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை’ என்று கூறினேன். அவர்கள் ‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!’ எனக் கேட்டார்கள். நான் ‘(கஅபாவைச் சுற்றி வரும்போது) அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரண்டு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ் மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹஜ்) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமலிருப்பதை கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)’ என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை இறைத்தூதர் (ஸல்)

رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا، قَالَ: مَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ؟ قَالَ: رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلَّا اليَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ، أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ، وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ.

فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَمَّا الأَرْكَانُ: ” فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلَّا اليَمَانِيَيْنِ، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ : فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ: فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا، وَأَمَّا الإِهْلاَلُ: فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ


Bukhari-5850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37

(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்.

5850. ஸயீத் அபூ மஸ்லமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (தொழுது வந்தார்கள்)’ என்றார்கள்.69

Book : 77


أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ»


Bukhari-5849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 36

சிவப்பு நிற மென்பட்டுத் திண்டு (மீஸரா).

5849. பராஉ (ரலி) அறிவித்தார்:

  1. நோயாளியை நலம் விசாரிப்பது,
  2. ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. சாதாரணப் பட்டு,
  2. அலங்காரப் பட்டு,
  3. ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை,
  4. தடித்த பட்டு,
  5. மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்:

أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ: عِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: عَنْ لُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ، وَالمَيَاثِرِ الحُمْرِ


Bukhari-5848

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

சிவப்பு ஆடை.

5848. பராஉ (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். நான் அவர்களைச் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதைவிட அழகான (அங்கி) எதையும் நான் பார்த்ததில்லை.67

Book : 77


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْبُوعًا، وَقَدْ رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْهُ»


Bukhari-5847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடை.

5847. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَ المُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِوَرْسٍ أَوْ بِزَعْفَرَانٍ»


Bukhari-5846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

(தங்களது மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.

5846. அனஸ் (ரலி) அறிவித்தார்:

ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65

Book : 77


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ»


Bukhari-5845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

புத்தாடை அணிந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை.63

5845. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) கூறினார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மெளனமாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் எனக்கு அணிவித்து, ‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு‘ என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தம் கையால் சைகை காட்டி, ‘உம்மு காலிதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)’ என்று சொல்லலானார்கள்.

أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ، قَالَ: «مَنْ تَرَوْنَ نَكْسُوهَا هَذِهِ الخَمِيصَةَ» فَأُسْكِتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ»

فَأُتِيَ بِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَلْبَسَنِيهَا بِيَدِهِ، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» مَرَّتَيْنِ،

فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَلَمِ الخَمِيصَةِ وَيُشِيرُ بِيَدِهِ إِلَيَّ وَيَقُولُ: «يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا وَيَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا» وَالسَّنَا بِلِسَانِ الحَبَشِيَّةِ الحَسَنُ

قَالَ إِسْحَاقُ: حَدَّثَتْنِي امْرَأَةٌ مِنْ أَهْلِي: أَنَّهَا رَأَتْهُ عَلَى أُمِّ خَالِدٍ


Bukhari-5844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5844. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் தாம் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன!

(என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக் கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகிறவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்துணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.62

Book :77


اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ وَهُوَ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، مَنْ  يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ، كَمْ مِنْ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ يَوْمَ القِيَامَةِ»


Next Page » « Previous Page