Category: புஹாரி

Bukhari

Bukhari-5802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்).21

5802. சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறினார்:

அனஸ் (ரலி) மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.

Book : 77


«رَأَيْتُ عَلَى أَنَسٍ، بُرْنُسًا أَصْفَرَ مِنْ خَزٍّ»


Bukhari-5801

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5801. உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்:

(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்தார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, ‘இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று’ எனக் கூறினார்கள். 20

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :77


أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ، ثُمَّ صَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ، فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا، كَالكَارِهِ لَهُ، ثُمَّ قَالَ: «لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ»


Bukhari-5800

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 (‘கபா’ எனும்) வெளிப்புற மேலங்கியும் (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பும். இந்தப் பட்டு உடுப்பே ‘கபா’ ஆகும். பின்பக்கம் திறப்பு உள்ள அங்கிக்கே ‘ஃபர்ரூஜ்’ என்று சொல்லப்படுவதுண்டு.

5800. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா(ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே, மக்ரமா(ரலி) (என்னிடம்), ‘அன்பு மகனே! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் செல்’ என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) ‘நீ உள்ளே போய் நபி(ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே மக்ரமா(ரலி) அவர்களிடம் வரும்படி நபி(ஸல்) அவர்கள் மக்ரமா(ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் ‘உங்களுக்காக இதை எடுத்து வைத்தேன்’ என்று கூறினார்கள். மக்ரமா(ரலி) அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘மக்ரமா திருப்தி அடைந்துவிட்டான்’

قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةً وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ: يَا بُنَيِّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ مَعَهُ، فَقَالَ: ادْخُلْ فَادْعُهُ لِي، قَالَ: فَدَعَوْتُهُ لَهُ، فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ: «خَبَأْتُ هَذَا لَكَ» قَالَ: فَنَظَرَ إِلَيْهِ، فَقَالَ: رَضِيَ مَخْرَمَةُ


Bukhari-5799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 புனிதப் போரின்போது கம்பளி நீளங்கி (ஜுப்பா) அணிவது.

5799. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நான் ஒரு பயணத்தின் ஓரிரவு நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்களின் மீது ஊற்றினேன். அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், ‘அவற்றைவிட்டுவிடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي سَفَرٍ، فَقَالَ: «أَمَعَكَ مَاءٌ» قُلْتُ: نَعَمْ، فَنَزَلَ عَنْ رَاحِلَتِهِ، فَمَشَى حَتَّى تَوَارَى عَنِّي فِي سَوَادِ اللَّيْلِ، ثُمَّ جَاءَ، فَأَفْرَغْتُ عَلَيْهِ الإِدَاوَةَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ مِنْهَا، حَتَّى أَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ الجُبَّةِ، فَغَسَلَ ذِرَاعَيْهِ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ» فَمَسَحَ عَلَيْهِمَا


Bukhari-5798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 சட்டைக் கை குறுகலான நீளங்கியை (ஜுப்பா) பயணத்தில் அணிவது. 

5798. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர்கொண்டேன். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள்.

அப்போது அவர்கள் வாய்கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்திவிட்டுத் தம் முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரண்டு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. எனவே, தம் இருகைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக் கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் ‘மஸ்ஹ்’ செய்து) தடவினார்கள். (‘மோஸா’ எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவினார்கள்.17

Book : 77


«انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ، فَتَلَقَّيْتُهُ بِمَاءٍ، فَتَوَضَّأَ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ، فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ الجُبَّةِ فَغَسَلَهُمَا، وَمَسَحَ بِرَأْسِهِ وَعَلَى خُفَّيْهِ»


Bukhari-5797

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 நெஞ்சுப் பகுதியில் சட்டைக் கழுத்து அமைந்திருப்பது.

5797. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதத் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:

(இதைக் கூறியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் விரலால் தம் சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக் காட்டினார்கள். மேலும், ‘அவன் தன்னுடைய நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படைவாய்; ஏனெனில்) அது விரியாது’ என்றும் கூறினார்கள். 16

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மற்றுமோர் அறிவிப்பில் (‘இரண்டு

ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلَ البَخِيلِ وَالمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إِلَى ثُدِيِّهِمَا وَتَرَاقِيهِمَا، فَجَعَلَ المُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ، حَتَّى تَغْشَى أَنَامِلَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَجَعَلَ البَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ، وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ بِمَكَانِهَا» قَالَ أَبُو هُرَيْرَةَ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِإِصْبَعِهِ «هَكَذَا فِي جَيْبِهِ، فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلاَ تَتَوَسَّعُ» تَابَعَهُ ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، وَأَبُو الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ: «فِي الجُبَّتَيْنِ» وَقَالَ حَنْظَلَةُ: سَمِعْتُ طَاوُسًا: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «جُبَّتَانِ» وَقَالَ جَعْفَرُ بْنُ حَيَّانَ، عَنْ الأَعْرَجِ: «جُبَّتَانِ»


Bukhari-5796

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5796. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் (அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி)) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே தங்களின் (முழு நீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குக் ‘கஃபன்’ (பிரேத ஆடை) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் தம் (முழுநீளச்) சட்டையை வழங்கி (அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை முடித்தவுடன் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து ‘நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்று தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள்

لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ، جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ. فَأَعْطَاهُ قَمِيصَهُ، وَقَالَ: «إِذَا فَرَغْتَ مِنْهُ فَآذِنَّا» فَلَمَّا فَرَغَ آذَنَهُ بِهِ، فَجَاءَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَجَذَبَهُ عُمَرُ فَقَالَ: أَلَيْسَ قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ، فَقَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] فَتَرَكَ الصَّلاَةَ عَلَيْهِمْ


Bukhari-5795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5795. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உமிழ் நீரை அவரின் மீது உமிழ்ந்து தம் (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ் அறிவான். 14

Book :77


«أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَ مَا أُدْخِلَ قَبْرَهُ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، وَوُضِعَ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، فَاللَّهُ أَعْلَمُ»


Bukhari-5794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (முழு நீளச்) சட்டை அணிதல் (இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும்போது அல்லாஹ் கூறுகின்றான்: என்னுடைய இந்த (முழு நீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச் சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண் பார்வை வந்துவிடும் (என்று யூசுஃப் கூறினார்). (12:93)

5794. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்குமபடி அணிந்து கொள்ளட்டும்’ என்று பதிலளித்தார்கள். 13

Book : 77


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يَلْبَسُ المُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَلْبَسُ المُحْرِمُ القَمِيصَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ، وَلاَ الخُفَّيْنِ، إِلَّا أَنْ لاَ يَجِدَ النَّعْلَيْنِ، فَلْيَلْبَسْ مَا هُوَ أَسْفَلُ مِنَ الكَعْبَيْنِ»


Bukhari-5793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 மேல்துண்டுகள் ‘கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் மேல்துண்டை(ப் பிடித்து) இழுத்தார்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.11

5793. அலீ(ரலி) அறிவித்தார்

…பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேல் துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்தார்கள். பிறகு நானும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் பின்தொடர, நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா(ரலி) இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களுக்கு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். 12

Book : 77


«فَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرِدَائِهِ ثُمَّ انْطَلَقَ يَمْشِي، وَاتَّبَعْتُهُ أَنَا وَزَيْدُ بْنُ حَارِثَةَ، حَتَّى جَاءَ البَيْتَ الَّذِي فِيهِ حَمْزَةُ، فَاسْتَأْذَنَ فَأَذِنُوا لَهُمْ»


Next Page » « Previous Page