Category: புஹாரி

Bukhari

Bukhari-5792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 குஞ்சம் வைத்த கீழங்கி9 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), அபூபக்ர் பின் முஹம்மத் (ரஹ்), ஹம்ஸா பின் அபீஉசைத் (ரஹ்), முஆவியா பின் அப்தில்லாஹ் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோர் குஞ்சம் வைத்த ஆடைகளை அணிந்தார்கள் என்று கூறப்படுகிறது.

5792. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), இருக்க நான் (அங்கு) அமர்ந்திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் வந்தார். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அவர்களை மணமுடித்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லிவிட்டுத் தம் முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) இச்சொல்லை வாசலில் நின்ற படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத்(ரலி) உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், ‘அபூ பக்ரே! இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பம்ரங்கமாக

جَاءَتْ امْرَأَةُ رِفَاعَةَ القُرَظِيِّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسَةٌ، وَعِنْدَهُ أَبُو بَكْرٍ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ تَحْتَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا مِثْلُ هَذِهِ الهُدْبَةِ، وَأَخَذَتْ هُدْبَةً مِنْ جِلْبَابِهَا، فَسَمِعَ خَالِدُ بْنُ سَعِيدٍ قَوْلَهَا وَهُوَ بِالْبَابِ لَمْ يُؤْذَنْ لَهُ، قَالَتْ: فَقَالَ خَالِدٌ: يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَنْهَى هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلاَ وَاللَّهِ مَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التَّبَسُّمِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ» فَصَارَ سُنَّةً بَعْدُ


Bukhari-5791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5791. ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அறிவித்தார்

நான் முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்று கொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்.

‘தற்பெருமையின் காரணத்தால் தம் ஆடையை(த் தரையில்படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்’ என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) சொல்லக் கேட்டேன். அப்போது நான் முஹாரிப்(ரஹ்) அவர்களிடம், ‘தம் கீழங்கியை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் அறிவிப்பில் கூறினார்களா?’ என்று வினவினே. அதற்க அவர்கள், ‘கீழங்கி’ என்றோ, ‘(முழு நீளச்) சட்டை’ என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை’ என்று பதிலளித்தார்கள்.

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :77


«مَنْ جَرَّ ثَوْبَهُ مَخِيلَةً لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ القِيَامَةِ» فَقُلْتُ لِمُحَارِبٍ: أَذَكَرَ إِزَارَهُ؟ قَالَ: مَا خَصَّ إِزَارًا وَلاَ قَمِيصًا تَابَعَهُ جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، وَزَيْدُ بْنُ أَسْلَمَ، وَزَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، مِثْلَهُ. وَتَابَعَهُ مُوسَى بْنُ عُقْبَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ، وَقُدَامَةُ بْنُ مُوسَى، عَنْ سَالِمٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ»


Bukhari-5790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(முற்காலத்தில்) ஒருவர் தம் கீழங்கியை (தற்பெருமையுடன் தரையில்) இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும் படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தம் உடல்) குலுங்கியபடி மறுமை நாள் வரை பூமியினுள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பார்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.8

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்

நான் சாலீம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்களுடன் அவர்களின் வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் மேற்சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியேற்றேன்’ என்றார்கள்.

Book :77


«بَيْنَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ، إِذْ خُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلَّلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ القِيَامَةِ» تَابَعَهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ يَرْفَعْهُ شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،

حَدَّثَنِي  عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ: أَخْبَرَنَا أَبِي، عَنْ عَمِّهِ جَرِيرِ بْنِ زَيْدٍ، قَالَ: كُنْتُ مَعَ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ – عَلَى بَابِ دَارِهِ – فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ


Bukhari-5789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5789. நபி(ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :77


«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي فِي حُلَّةٍ، تُعْجِبُهُ نَفْسُهُ، مُرَجِّلٌ جُمَّتَهُ، إِذْ خَسَفَ اللَّهُ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ إِلَى يَوْمِ القِيَامَةِ»


Bukhari-5788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 தற்பெருமையினால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது.

5788. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். 7

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 77


«لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا»


Bukhari-5787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும்.

5787. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 77


«مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ»


Bukhari-5786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 ஆடையை வரிந்து கட்டுவது

5786. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்

பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை கண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி(ஸல்) அவர்களுக்கு முன் நடந்து செல்வதை பார்த்தேன்.6

Book : 77


فَرَأَيْتُ بِلاَلًا جَاءَ بِعَنَزَةٍ فَرَكَزَهَا، ثُمَّ أَقَامَ الصَّلاَةَ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَرَجَ فِي حُلَّةٍ مُشَمِّرًا، فَصَلَّى رَكْعَتَيْنِ إِلَى العَنَزَةِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ مِنْ وَرَاءِ العَنَزَةِ»


Bukhari-5785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5785. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியம்ரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அவரசத்துடன் எழுந்து தம் ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் சூரியம்ரகணம் விலகும்வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி(ஸல்) எங்களை நோக்கி, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றில் (ம்ரகணங்களில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அதை அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.5

Book :77


خَسَفَتِ الشَّمْسُ وَنَحْنُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ يَجُرُّ ثَوْبَهُ مُسْتَعْجِلًا، حَتَّى أَتَى المَسْجِدَ، وَثَابَ النَّاسُ، فَصَلَّى رَكْعَتَيْنِ فَجُلِّيَ عَنْهَا، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا، وَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَصَلُّوا، وَادْعُوا اللَّهَ حَتَّى يَكْشِفَهَا»


Bukhari-5784

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது.3

5784. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள்.4

Book : 77


«مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ القِيَامَةِ» قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَ شِقَّيْ إِزَارِي يَسْتَرْخِي، إِلَّا أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَسْتَ مِمَّنْ يَصْنَعُهُ خُيَلاَءَ»


Bukhari-5783

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 ‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?’ எனும் (7:32ஆவது) இறைவசனம்.2 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள். (ஆனால்,) விரயம் செய்யாதீர்கள்;தற்பெருமை கொள்ளாதீர்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பியதை உடுத்தலாம்.
5783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 77

«لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ»


Next Page » « Previous Page