Category: புஹாரி

Bukhari

Bukhari-5782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்…
5782. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 110
Book : 76

«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً»


Bukhari-5781

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5781. மற்றோர் அறிவிப்பில் லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்திருப்பதாவது:

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரலி) கூறினார்:

நான் அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ(ரஹ்) அவாகளிடம், ‘கழுதைப் பாலில் நாங்கள் அங்கசுத்தி (உளூ) செய்யலாமா? அல்லது அதைப் பருகலாமா? அல்லது விலங்குகளின் பித்த நீரை, அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை அருந்தலாமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘முஸ்லிம்கள் ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சை பெற்றுவந்தார்கள். அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் கருதவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென்று தடை விதித்ததாகச் செய்தி எமக்கு எட்டியுள்ளது. ஆனால், அவற்றின் பாலை அருந்துங்கள் என்றோ அருந்தாதீர்கள் என்றோ எந்தக் கட்டளையும் அல்லது தடை உத்தரவும் நமக்கு எட்டவில்லை’ என்று கூறினார்கள்.

விலங்குகளின் பித்த நீரைப் பொறுத்த வரை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விலங்குகளின் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்’ என்று அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார் என அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ(ரஹ்) என்னிடம் தெரிவித்தார்கள்.

Book :76


وَسَأَلْتُهُ هَلْ نَتَوَضَّأُ أَوْ نَشْرَبُ أَلْبَانَ الأُتُنِ، أَوْ مَرَارَةَ السَّبُعِ، أَوْ أَبْوَالَ الإِبِلِ؟ قَالَ: قَدْ كَانَ المُسْلِمُونَ يَتَدَاوَوْنَ بِهَا، فَلاَ يَرَوْنَ بِذَلِكَ بَأْسًا، فَأَمَّا أَلْبَانُ الأُتُنِ: فَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُحُومِهَا، وَلَمْ يَبْلُغْنَا عَنْ أَلْبَانِهَا أَمْرٌ وَلاَ نَهْيٌ، وَأَمَّا مَرَارَةُ السَّبُعِ: قَالَ ابْنُ شِهَابٍ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الخَوْلاَنِيُّ، أَنَّ أَبَا ثَعْلَبَةَ الخُشَنِيَّ، أَخْبَرَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ»


Bukhari-5780

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57 கழுதைப் பால்108

5780. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.109

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்), ‘நான் ஷாம் நாட்டிற்கு வரும்வரை இந்த ஹதீஸை செவியுற்றதில்லை’ என்று கூறினார்கள்.

Book : 76


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ» قَالَ الزُّهْرِيُّ: وَلَمْ أَسْمَعْهُ حَتَّى أَتَيْتُ الشَّأْمَ


Bukhari-5779

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ தீங்களிக்காது.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 76


«مَنِ اصْطَبَحَ بِسَبْعِ تَمَرَاتِ عَجْوَةٍ، لَمْ يَضُرَّهُ ذَلِكَ اليَوْمَ سَمٌّ، وَلاَ سِحْرٌ»


Bukhari-5778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 56

விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.

5778. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.

ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 76


مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»


Bukhari-5777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 55

நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது பற்றிய குறிப்பு.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறித்து அறிவித்துள்ளார்கள்.

5777. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(ஹிஜ்ரீ -7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷயம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மது(ஸல்) அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உங்கள்

لَمَّا فُتِحَتْ خَيْبَرُ، أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سَمٌّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لِي مَنْ كَانَ هَا هُنَا مِنَ اليَهُودِ» فَجُمِعُوا لَهُ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ، فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ». فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَبُوكُمْ» قَالُوا: أَبُونَا فُلاَنٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ» فَقَالُوا: صَدَقْتَ وَبَرِرْتَ، فَقَالَ: «هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ» فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، وَإِنْ كَذَبْنَاكَ عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَهْلُ النَّارِ» فَقَالُوا: نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَنَا فِيهَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا». ثُمَّ قَالَ لَهُمْ: «فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ» قَالُوا: نَعَمْ، فَقَالَ: «هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سَمًّا؟» فَقَالُوا: نَعَمْ، فَقَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ» فَقَالُوا: أَرَدْنَا: إِنْ كُنْتَ كَذَّابًا نَسْتَرِيحُ مِنْكَ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ


Bukhari-5776

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5776. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்’ என்று பதிலளித்தார்கள். 102

Book :76


«لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الفَأْلُ» قَالُوا: وَمَا الفَأْلُ؟ قَالَ: «كَلِمَةٌ طَيِّبَةٌ»


Bukhari-5775

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5775. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தொற்று நாய் கிடையாது’ என்று கூறினார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘(பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்கு பிடிக்கச் செய்து விடுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச் செய்தது யார்?’ என்று கேட்டார்கள். 101

Book :76


«لاَ عَدْوَى» فَقَامَ أَعْرَابِيٌّ فَقَالَ: أَرَأَيْتَ الإِبِلَ، تَكُونُ فِي الرِّمَالِ أَمْثَالَ الظِّبَاءِ، فَيَأْتِيهَا البَعِيرُ الأَجْرَبُ فَتَجْرَبُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ»


Bukhari-5774

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5774. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 100

Book :76


«لاَ تُورِدُوا المُمْرِضَ عَلَى المُصِحِّ»


Bukhari-5773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5773. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தொற்று நோய் கிடையாது

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :76


«لاَ عَدْوَى»


Next Page » « Previous Page