Category: புஹாரி

Bukhari

Bukhari-5605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5605. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.

Book :74


جَاءَ أَبُو حُمَيْدٍ بِقَدَحٍ مِنْ لَبَنٍ مِنَ النَّقِيعِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَلَّا خَمَّرْتَهُ: وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا


Bukhari-5604

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5604. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ(ரஹ்) கூறினார்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) சில வேளைகளில் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, உம்முல் ஃபள்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பிவைத்தார்கள்’ என்று (‘உம்முல் பள்ல்(ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், ‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்ஸலா(ன ஹதீஸா)?’ என்று கேட்கப்பட்டால், ‘இதை உம்முல் ஃபள்ல்(ரலி)

«شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلْتُ إِلَيْهِ بِإِنَاءٍ فِيهِ لَبَنٌ فَشَرِبَ»، فَكَانَ سُفْيَانُ رُبَّمَا قَالَ: «شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الفَضْلِ» فَإِذَا وُقِّفَ عَلَيْهِ، قَالَ: هُوَ عَنْ أُمِّ الفَضْلِ


Bukhari-5603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 பால் அருந்துவது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது; அவற்றின் வயிற்றி லுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (அது) அருந்துவோருக்கு இனிமையானதாகும். (16:66)

5603. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் பால் கிண்ணமும், மதுக் கிண்ணமும் கொண்டுவரப்பட்டன.27

Book : 74


«أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِقَدَحِ لَبَنٍ وَقَدَحِ خَمْرٍ»


Bukhari-5602

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5602. அபூ கத்தாதா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

Book :74


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجْمَعَ بَيْنَ التَّمْرِ وَالزَّهْوِ، وَالتَّمْرِ وَالزَّبِيبِ، وَلْيُنْبَذْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ»


Bukhari-5601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5601. ஜாபிர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.

Book :74


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالبُسْرِ وَالرُّطَبِ»


Bukhari-5600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று.26

5600. அனஸ்(ரலி) கூறினார்

நான் அபூ தல்ஹா, அபூ துஜானா, சுஹைல் இப்னு பய்ளா(ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.

Book : 74


«إِنِّي لَأَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَسُهَيْلَ بْنَ البَيْضَاءِ، خَلِيطَ بُسْرٍ وَتَمْرٍ، إِذْ حُرِّمَتِ الخَمْرُ، فَقَذَفْتُهَا، وَأَنَا سَاقِيهِمْ وَأَصْغَرُهُمْ، وَإِنَّا نَعُدُّهَا يَوْمَئِذٍ الخَمْرَ» وَقَالَ عَمْرُو بْنُ الحَارِثِ: حَدَّثَنَا قَتَادَةُ، سَمِعَ أَنَسًا


Bukhari-5599

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5599. ஆயிஷா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள்.

Book :74


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الحَلْوَاءَ وَالعَسَلَ»


Bukhari-5598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 பாதக்’ எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்.22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை (திலா’) அருந்தலாம் என உமர் பின் கத்தாப், அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ், முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கருதினர். பராஉ பின் ஆஸிப், அபூஜுஹைஃபா (ரலி) ஆகியோர் சரி பாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை அருந்தியுள்ளனர். காய்ச்சப்படாத (பச்சைப்) பழச்சாற்றை அருந்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.23 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் மகன்) உபைதுல்லாஹ்விடமி ருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்குக் கசையடி கொடுப்பேன்.24

5598. அபுல் ஜுவைரியா(ரஹ்) கூறினார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத்(ஸல்)

سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ البَاذَقِ فَقَالَ: سَبَقَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَاذَقَ: «فَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ» قَالَ: الشَّرَابُ الحَلاَلُ الطَّيِّبُ، قَالَ: «لَيْسَ بَعْدَ الحَلاَلِ الطَّيِّبِ إِلَّا الحَرَامُ الخَبِيثُ»


Bukhari-5597

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 போதையூட்டக் கூடியதாக மாறாத வரை பேரீச்சம் பழ ஊறலை அருந்தலாம்.

5597. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூ உஸைதின் துணைவியாரே அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் இரவிலேயே ஊறவைத்தேன். (நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்)’ என்று கூறினார்.

Book : 74


أَنَّ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ دَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُرْسِهِ، فَكَانَتْ امْرَأَتُهُ خَادِمَهُمْ يَوْمَئِذٍ، وَهِيَ العَرُوسُ، فَقَالَتْ: «مَا تَدْرُونَ مَا أَنْقَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ»


Bukhari-5596

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5596. சுலைமான் இப்னு அபீ சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்

‘நபி(ஸல்) அவர்கள் பச்சை நிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன். அப்போது ‘வெண்ணிற களிமண் பாத்திரத்தில் நாங்கள் அருந்தலாமா?’ என்று வினவினேன். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ‘இல்லை. (அதுவும் கூடாது)’ என்று கூறினார்கள்.

Book :74


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الجَرِّ الأَخْضَرِ» قُلْتُ: أَنَشْرَبُ فِي الأَبْيَضِ؟ قَالَ: لاَ


Next Page » « Previous Page