Category: புஹாரி

Bukhari

Bukhari-5514

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5514. ஸயீத் பின் அம்ர் (ரஹ்) கூறினார்: 

இப்னு உமர் (ரலி) (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவன் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தான்.

இப்னு உமர் (ரலி) அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு (யஹ்யா இப்னு ஸயீத் அவர்களிடம்) சென்று, ‘இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவனைக் கண்டித்து வையுங்கள்.

ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டி வைக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததை கேட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 72


أَنَّهُ دَخَلَ عَلَى يَحْيَى بْنِ سَعِيدٍ، وَغُلاَمٌ مِنْ بَنِي يَحْيَى رَابِطٌ دَجَاجَةً يَرْمِيهَا، فَمَشَى إِلَيْهَا ابْنُ عُمَرَ حَتَّى حَلَّهَا، ثُمَّ أَقْبَلَ بِهَا وَبِالْغُلاَمِ مَعَهُ فَقَالَ: ازْجُرُوا غُلاَمَكُمْ عَنْ أَنْ يَصْبِرَ هَذَا الطَّيْرَ لِلْقَتْلِ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ تُصْبَرَ بَهِيمَةٌ أَوْ غَيْرُهَا لِلْقَتْلِ»


Bukhari-5513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதும்,பறவையைக் கூண்டில் அடைத்துவைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.

5513. ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்

நான் (ஒரு முறை என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுடன் (பஸராவின் ஆட்சியரான) ஹகம் இப்னு அய்யூபிடம் சென்றேன். அங்கு சில ‘சிறுவர்கள்’ அல்லது ‘இளைஞர்கள்’ கோழியொன்றைக் கட்டி வைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததை அனஸ்(ரலி) ‘விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்று கூறினார்கள்.

Book : 72


دَخَلْتُ مَعَ أَنَسٍ، عَلَى الحَكَمِ بْنِ أَيُّوبَ، فَرَأَى غِلْمَانًا، أَوْ فِتْيَانًا، نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا، فَقَالَ أَنَسٌ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُصْبَرَ البَهَائِمُ»


Bukhari-5512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5512. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் குதிரையொன்றை (அதன் கழுத்து நரம்புகளை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :72


نَحَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا فَأَكَلْنَاهُ» تَابَعَهُ وَكِيعٌ، وَابْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامٍ: فِي النَّحْرِ


Bukhari-5511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5511. அஸ்மா(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் இருந்தபோது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து (‘தப்ஹ்’ செய்து) அதை உண்டோம்.

Book :72


«ذَبَحْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا، وَنَحْنُ بِالْمَدِينَةِ، فَأَكَلْنَاهُ»


Bukhari-5510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல் வளைகளை அறுப்பதும்).35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (-பிராணிகளில்-)தான் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்கள்; நான்,குரல்வளையை அறுக்கவேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா? என்று கேட்டேன். ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது எனக் (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய பிராணி யின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். தப்ஹ்’ என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும் என்று சொன்னார்கள். நான், அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்) கழுத்து எலும்பைத் துண்டிக்க லாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள

«نَحَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا فَأَكَلْنَاهُ»


Bukhari-5509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 வீட்டுப் பிராணிகளில் (கட்டுக்கடங்காமல்) வெருண்டோடக்கூடியவையும் காட்டு விலங்குகளாகவே கருதப்படும்.33 இதை (-கட்டுங்கடங்காத வீட்டுப் பிராணிகளைத் தாக்கிக் காயப்படுத்துவதை-) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அனுமதித் துள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் கைவசமுள்ள பிராணிகளில் உன்னைத் தோற்கவைப்பது வேட்டைப் பிராணி போன்றதாகும். கிணற்றில் விழுந்து விட்ட ஒட்டகத்தை உன்னால் முடிந்த விதத்தில் மீட்டு, அதை அறுத்து உண்ணலாம். அலீ (ரலி), இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோரும் இதே கருத்தைக் கொண் டுள்ளனர்.

5509. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்

நான் (துல் ஹுலைஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது) ‘இறைத்தூதர் அவர்களே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால் அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!’ என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘விரைவாக’ அல்லது ‘தாமதமின்றி’ (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்) இரத்தத்தை சிந்தச் செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின்

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لاَقُو العَدُوِّ غَدًا، وَلَيْسَتْ مَعَنَا مُدًى، فَقَالَ: ” اعْجَلْ، أَوْ أَرِنْ، مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكَ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الحَبَشَةِ ” وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الوَحْشِ، فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَيْءٌ فَافْعَلُوا بِهِ هَكَذَا»


Bukhari-5508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 வேதக்காரர்கள் அறுத்த பிராணிகளையும் அவற்றின் கொழுப்பையும் உண்ணலாம். அவர்கள் பகைநாட்டினராயினும், மற்றவர் களாயினும் சரியே. அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்கப் பட்டவையாக (ஹலாலாக) ஆக்கப்பட்டுள் ளன. வேதம் வழங்கப்பெற்றவர்களின் உணவு உங்களுக்கும், உங்கள் உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (5:5) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அரபுக் கிறிஸ்தவர்கள் அறுத்த பிராணிகளை உண்பது தவறன்று. அல்லாஹ் அல்லாத வற்றின் பெயரால் அவை அறுக்கப்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டால் அதை உண்ண வேண்டாம். அப்படி கேள்விப்படவில்லை யென்றால் அல்லாஹ் அதை நமக்கு அனுமதித்துள்ளான். அவன் அவர்களுடைய இறைமறுப்பை அறிந்தும் உள்ளான். அலீ (ரலி) அவர்களைக் குறித்தும் இவ்வாறே (அவர்கள் கூறியதாக)அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும், விருத்த சேதனம் (சுன்னத்) செய்யப்படாத வரால் அறுக்கப்பட்ட பிராணியை உண்பதில் தவறில்லை என்று கூறுகிறார்கள்.31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (5:5ஆவது வசனத்திலுள்ள)அவர்களுடைய உணவு’ என்பது அவர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளைக் குறிக்கும் என்று கூறுகிறார்கள்.

«كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لِآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ»