Category: புஹாரி

Bukhari

Bukhari-5402

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 பாலாடைக் கட்டி ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள் (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (மணவிருந்தில் விரிக்கப்பட்ட உணவு விரிப்பில்) பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை வைத்தார்கள். மற்றோர் அறிவிப்பில் (மணவிருந்துக்காக) நபி (ஸல்) அவர்கள் ஹைஸ்’ எனும் உணவைத் தயாரித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.26

5402. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களுக்கு என் தாயாரின் சகோதரி (உம்மு ஹுஃபைத்) அவர்கள் உடும்பு, பாலாடைக் கட்டி, பால் ஆகியவற்றை அன்பளிப்புச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பின் மீது உடும்பு வைக்கப்பட்டது. அது விலக்கப்பட்டதாக இருந்திருப்பின் அவ்வாறு வைக்கப்பட்டிராது. நபி(ஸல்) அவர்கள் (உடும்பை மட்டும்விட்டுவிட்டு) பாலை அருந்தினார்கள். பாலாடைக் கட்டியையும் சாப்பிட்டார்கள்.27

Book : 70


«أَهْدَتْ خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضِبَابًا وَأَقِطًا وَلَبَنًا، فَوُضِعَ الضَّبُّ عَلَى مَائِدَتِهِ، فَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُوضَعْ، وَشَرِبَ اللَّبَنَ، وَأَكَلَ الأَقِطَ»


Bukhari-5401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 அல்கஸீரா (கோதுமைக் குறுணைக் கஞ்சி) அல்கஸீரா’ என்பது (கோதுமைக்) குறுணையால் தயாரிக்கப்படும் (கஞ்சி) உணவாகும்; அல்ஹரீரா’ என்பது பாலால் தயாரிக்கப்படும் (பாயசம்) உணவாகும் என்று நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

5401. பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் வழிந்தோடும். அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. எனவே, இறைத்தூதர் அவர்களே! தாங்கள் வந்து என்னுடைய வீட்டில் தொழுகை நடத்த வேண்டுமென்றும் (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ ‘இன்ஷா அல்லாஹ்’ (அல்லாஹ் நாடினால்)

أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ لَهُمْ، فَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ، أَنَّكَ تَأْتِي فَتُصَلِّي فِي بَيْتِي فَأَتَّخِذُهُ مُصَلًّى، فَقَالَ: «سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ» قَالَ عِتْبَانُ: فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ البَيْتَ، ثُمَّ قَالَ لِي: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟» فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ فَصَفَفْنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ  سَلَّمَ، وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرٍ صَنَعْنَاهُ، فَثَابَ فِي البَيْتِ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: أَيْنَ مَالِكُ بْنُ الدُّخْشُنِ؟ فَقَالَ بَعْضُهُمْ: ذَلِكَ مُنَافِقٌ، لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُلْ، أَلاَ تَرَاهُ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ؟ ” قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: قُلْنَا: فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى المُنَافِقِينَ، فَقَالَ: ” فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ ابْنُ شِهَابٍ: ثُمَّ سَأَلْتُ الحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ، أَحَدَ بَنِي سَالِمٍ، وَكَانَ مِنْ سَرَاتِهِمْ، عَنْ حَدِيثِ مَحْمُودٍ، فَصَدَّقَهُ


Bukhari-5400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 பொரித்த உணவு அல்லாஹ் கூறுகின்றான்: (அதன் பின்னர்) அவர் (-இப்ராஹீம்-) பொரித்த காளைக் கன்றி(ன் இறைச்சியி)னை உடனே கொண்டுவந்தார். (11:69) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹனீஃத்’ எனும் சொல்லுக்குப் பொரிக்கப் பட்டது’ என்று பொருள்.

5400. காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதை உண்பதற்காக அவர்கள் தங்களின் கையைக் கொண்டுபோனார்கள். அவர்களிடம், ‘இது உடும்பு’ என்று சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தங்களின் கையை இழுத்துக்கொண்டார்கள். நான், ‘இது தடை செய்யப்பட்டுள்ளதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை. ஆனால், இது என் சமுதாயத்தாரின் பூமியில் இருப்பதில்லை. எனவே, என் மனம் இதை விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, நான் அதைச் சாப்பிட்டேன்.24

மற்றோர் அறிவிப்பில், (‘பொரிக்கப்பட்டது’ என்பதைக் குறிக்க ‘மஷ்விய்யு’ எனும் சொல்லுக்கு பதிலாக) ‘மஹ்னூஃத்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضَبٍّ مَشْوِيٍّ، فَأَهْوَى إِلَيْهِ لِيَأْكُلَ، فَقِيلَ لَهُ: إِنَّهُ ضَبٌّ، فَأَمْسَكَ يَدَهُ، فَقَالَ خَالِدٌ: أَحَرَامٌ هُوَ؟ قَالَ: «لاَ، وَلَكِنَّهُ لاَ يَكُونُ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» فَأَكَلَ خَالِدٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ قَالَ مَالِكٌ: عَنْ ابْنِ شِهَابٍ: «بِضَبٍّ مَحْنُوذٍ»


Bukhari-5399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5399. அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள்.

Book :70


كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ: «لاَ آكُلُ وَأَنَا مُتَّكِئٌ»


Bukhari-5398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 சாய்ந்தபடி சாப்பிடுவது23

5398. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 70


«لاَ آكُلُ مُتَّكِئًا»


Bukhari-5397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5397. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்

ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகி விட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ என்று கூறினார்கள்.

Book :70


أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا، فَأَسْلَمَ، فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ المُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»


Bukhari-5396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5396. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :70


«يَأْكُلُ المُسْلِمُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»


Bukhari-5395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5395. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்

(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் ‘நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)’ என்று கூறினார்.

Book :70


كَانَ أَبُو نَهِيكٍ  رَجُلًا أَكُولًا، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ» فَقَالَ: فَأَنَا أُومِنُ بِاللَّهِ وَرَسُولِهِ


Bukhari-5394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5394. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளன்’ அல்லது ‘நயவஞ்சகன்’ ஏழு குடல்களில் சாப்பிடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பளர்களில் ஒருவரான அப்தா இப்னு சுலைமான்(ரஹ்), ‘இதை எனக்கு அறிவித்த உபைதுல்லாஹ் இப்னு உமர்(ரஹ்), ‘இறைமறுப்பாளன்’, ‘நயவஞ்சகன்’ ஆகிய இரண்டு சொற்களில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது (நினைவில்லை)’ என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

Book :70


«إِنَّ المُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَإِنَّ الكَافِرَ أَوِ المُنَافِقَ – فَلاَ أَدْرِي أَيَّهُمَا قَالَ عُبَيْدُ اللَّهِ – يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ» وَقَالَ ابْنُ بُكَيْرٍ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Bukhari-5393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22 இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

5393. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர்(ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

Book : 70


كَانَ ابْنُ عُمَرَ، لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا، فَقَالَ: يَا نَافِعُ، لاَ تُدْخِلْ هَذَا عَلَيَّ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «المُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»


Next Page » « Previous Page