Category: புஹாரி

Bukhari

Bukhari-5214

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 102

கன்னிப் பெண்(ணான மனைவி) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை ஒருவர் மணந்தால்…?

5214. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒருவர் கன்னிகழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால் முதலில் கன்னிப் பெண்ணிடம் ஏழு நாள்கள் தங்குவார். பிறகு (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார்.

ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னிகழிந்த பெண்ணிடம் மூன்று நாள்கள் தங்கிவிட்டு பிறகு தான் (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். இதுவே நபிவழியாகும்.


அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) கூறினார்:

நான் நினைத்தால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (ரலி) கூறினார் என்று சொல்ல முடியும். (அது தவறாகாது. ஆயினும், முறைப்படி அனஸ் அவர்கள் கூறிய பிரகாரமே அறிவித்துள்ளேன்.)

மற்றோர் அறிவிப்பில், காலித் (ரஹ்) கூறினார்:

«مِنَ السُّنَّةِ إِذَا تَزَوَّجَ الرَّجُلُ البِكْرَ عَلَى الثَّيِّبِ أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَقَسَمَ، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ عَلَى البِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا ثُمَّ قَسَمَ» قَالَ أَبُو قِلاَبَةَ: وَلَوْ شِئْتُ لَقُلْتُ: إِنَّ أَنَسًا رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، وَخَالِدٍ، قَالَ خَالِدٌ: وَلَوْ شِئْتُ قُلْتُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5213. அனஸ்(ரலி) அறிவித்தார்

கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூ கிலாபா) கூறுகிறார்: இதை நபி(ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் (அது தவறாகாது; எனினும், அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதன்படி ‘நபிவழி’ என்று கூறியுள்ளேன்.)

Book :67


«السُّنَّةُ إِذَا تَزَوَّجَ البِكْرَ أَقَامَ عِنْدَهَا سَبْعًا، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا»


Bukhari-5212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5212. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி), (நபி(ஸல்) அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும் ‘சவ்தா’ அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கிவந்தார்கள். 144

Book :67


أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ «وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِهَا وَيَوْمِ سَوْدَةَ»


Bukhari-5211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5211. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ،


Bukhari-5210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5210. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவுகொள்ளவும்) ‘அஸ்ல்’ செய்து கொள்ளவும் விரும்பினோம். (அது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் ‘(இந்த அஸ்லை) நீங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு, ‘மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள். 143

Book :67


أَصَبْنَا سَبْيًا، فَكُنَّا نَعْزِلُ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَوَإِنَّكُمْ لَتَفْعَلُونَ – قَالَهَا ثَلاَثًا – مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ القِيَامَةِ إِلَّا هِيَ كَائِنَةٌ»


Bukhari-5209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5209. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.

அத்தியாயம்: 67


«كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالقُرْآنُ يَنْزِلُ»


Bukhari-5208

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5208. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

Book :67


«كُنَّا نَعْزِلُ وَالقُرْآنُ يَنْزِلُ»


Bukhari-5207

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5207. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து வந்தோம்.

Book :67


«كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-5206

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5206. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் ‘என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பம்ர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பம்ர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளலாம்” என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் – மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)141

Book :67


{وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128] قَالَتْ: ” هِيَ المَرْأَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ لاَ يَسْتَكْثِرُ مِنْهَا، فَيُرِيدُ طَلاَقَهَا وَيَتَزَوَّجُ غَيْرَهَا، تَقُولُ لَهُ: أَمْسِكْنِي وَلاَ تُطَلِّقْنِي، ثُمَّ تَزَوَّجْ غَيْرِي، فَأَنْتَ فِي حِلٍّ مِنَ النَّفَقَةِ عَلَيَّ وَالقِسْمَةِ لِي، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: (فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَصَّالَحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ)


Bukhari-5205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5205. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, ‘என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்! (ஒட்டுமுடிவைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்கள்.

Book :67


أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا، فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:33] فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ: إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا، فَقَالَ: «لاَ، إِنَّهُ قَدْ لُعِنَ المُوصِلاَتُ»


Next Page » « Previous Page