Category: புஹாரி

Bukhari

Bukhari-5113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5113. உர்வா வின் ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் ‘(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்” என்று (நபியவர்களிடம்) கூறினேன். 

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர்கள் வழியாகவும் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது.

Book :67


كَانَتْ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ مِنَ اللَّائِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ عَائِشَةُ: أَمَا تَسْتَحِي المَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلرَّجُلِ ” فَلَمَّا نَزَلَتْ: (تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ) قُلْتُ: «يَا رَسُولَ اللَّهِ، مَا أَرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ فِي هَوَاكَ»

رَوَاهُ أَبُو سَعِيدٍ المُؤَدِّبُ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَعَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ


Bukhari-5112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5112. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றெவாருவரிடம் ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

Book :67


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشِّغَارِ» وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ، لَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ


Bukhari-5111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5111. ஏனெனில், ஆயிஷா (ரலி), ‘இரத்த பந்த உறவால் யாரை மணப்பது கூடாதோ அவர்களை மணப்பதைப் பால்குடி உறவாலும் தடைசெய்யுங்கள்” என்று கூறினார்கள். 

அத்தாயாயம்: 67


«حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»


Bukhari-5110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5110. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம்.

அத்தியாயம்: 67


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ المَرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَالمَرْأَةُ وَخَالَتُهَا»
فَنُرَى خَالَةَ أَبِيهَا بِتِلْكَ المَنْزِلَةِ،


Bukhari-5109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5109. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :67


«لاَ يُجْمَعُ بَيْنَ المَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ المَرْأَةِ وَخَالَتِهَا»


Bukhari-5108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5108. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 52

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :67


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ المَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا» وَقَالَ دَاوُدُ، وَابْنُ عَوْنٍ عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ


Bukhari-5107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5107. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்

நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகேதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று” என்று கூறினார்கள். நான், இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூ ஸலமாவின் மகள் துர்ராவை மணக்க விரும்புவதாக எங்களிடையே பேச்சு நடைபெறுகிறதே!” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(என் துணைவியார்) உம்மு ஸலமாவிற்கு (மூத்த கணவன் மூலம்) பிறந்த மகளையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்” என்று பதிலளித்தேன். நபியவர்கள், ‘அவள் என்னுடைய மடியில் (வளர்ப்பு மகளாக இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட,

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، قَالَ: «وَتُحِبِّينَ؟» قُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَوَاللَّهِ إِنَّا لَنَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ، قَالَ: «بِنْتَ أُمِّ سَلَمَةَ»، فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «فَوَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ»


Bukhari-5106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 101 கன்னிகழிந்த பெண்(ணான மனைவி) இருக்க கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால்…?

5106. (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்

நான் (ஒருமுறை) ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகளின் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள். நான், ‘(அவளை) நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!” என்று கூறினார்கள். நான், ‘தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!” என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(என் துணைவியார்) உம்மு ஸலமாவின் மகளையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள்

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ لَكَ فِي بِنْتِ أَبِي سُفْيَانَ؟ قَالَ: «فَأَفْعَلُ مَاذَا؟» قُلْتُ: تَنْكِحُ، قَالَ: «أَتُحِبِّينَ؟» قُلْتُ: لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِيكَ أُخْتِي، قَالَ: «إِنَّهَا لاَ تَحِلُّ لِي»، قُلْتُ: بَلَغَنِي أَنَّكَ تَخْطُبُ، قَالَ: «ابْنَةَ أُمِّ سَلَمَةَ»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي مَا حَلَّتْ لِي، أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ» وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنَا هِشَامٌ: دُرَّةُ بِنْتُ أَبِي سَلَمَةَ


Bukhari-5105

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படாதவர்களும். அல்லாஹ் கூறுகின்றான்: (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் சகோதரிகள்,உங்கள் அன்னையின் சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்வியர்; சகோதரியின் புதல்வியர்… (4:23) அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (4:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வல் முஹ்ஸனாத்து மினன் னிஸா’ என்பதன் கருத்தாவது: (ஏற்கெனவே திருமணமாகி) கணவன்மார்கள் இருக்கும் (அடிமையல்லாத) சுதந்திரமான பெண்களை மணமுடிப்பது விலக்கப்பட்டதாகும். இல்லா மா மலக்கத் அய்மானுக்கும்’ (உங்கள் கைவசம் வந்து விட்ட அடிமைப்பெண்களைத் தவிர) என்பதன் கருத்தாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணை (அவளுடைய கணவரான) தம் அடிமையின் மண பந்தத்திலிருந்து விலக்கி விடுவது குற்றமன்று. மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் (ஏகத்துவ நம்பிக்கை) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (2:221) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் தாய், தம் புதல்வி, மற்றும் தம் சகோதரியை மணமுடிப்பது விலக்கப்பட்டிருப்பது போன்றே நான்கை விட அதிகமான பெண்களை மணமுடிப்பதும்

«حَرُمَ مِنَ النَّسَبِ سَبْعٌ، وَمِنَ الصِّهْرِ سَبْعٌ» ثُمَّ قَرَأَ: {حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ} [النساء: 23]
[ص:11] الآيَةَ

وَجَمَعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، بَيْنَ ابْنَةِ عَلِيٍّ وَامْرَأَةِ عَلِيٍّ وَقَالَ ابْنُ سِيرِينَ: «لاَ بَأْسَ بِهِ» وَكَرِهَهُ الحَسَنُ مَرَّةً، ثُمَّ قَالَ: «لاَ بَأْسَ بِهِ»

وَجَمَعَ الحَسَنُ بْنُ الحَسَنِ بْنِ عَلِيٍّ، بَيْنَ ابْنَتَيْ عَمٍّ فِي لَيْلَةٍ، وَكَرِهَهُ جَابِرُ بْنُ زَيْدٍ، لِلْقَطِيعَةِ، وَلَيْسَ فِيهِ تَحْرِيمٌ، لِقَوْلِهِ تَعَالَى: {وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ} [النساء: 24]

وَقَالَ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «إِذَا زَنَى بِأُخْتِ امْرَأَتِهِ لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ» وَيُرْوَى عَنْ يَحْيَى الكِنْدِيِّ، عَنِ الشَّعْبِيِّ، وأَبِي جَعْفَرٍ، فِيمَنْ يَلْعَبُ بِالصَّبِيِّ: «إِنْ أَدْخَلَهُ فِيهِ فَلاَ يَتَزَوَّجَنَّ أُمَّهُ» وَيَحْيَى هَذَا غَيْرُ مَعْرُوفٍ، وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ

وَقَالَ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «إِذَا زَنَى بِهَا لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ» وَيُذْكَرُ عَنْ أَبِي نَصْرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، حَرَّمَهُ «وَأَبُونَصْرٍ هَذَا لَمْ يُعْرَفْ بِسَمَاعِهِ مِنْ ابْنِ عَبَّاسٍ»
وَيُرْوَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَجَابِرِ بْنِ زَيْدٍ، وَالحَسَنِ، وَبَعْضِ أَهْلِ العِرَاقِ تَحْرُمُ عَلَيْهِ

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: «لاَ تَحْرُمُ حَتَّى يُلْزِقَ بِالأَرْضِ» يَعْنِي يُجَامِعَ وَجَوَّزَهُ ابْنُ المُسَيِّبِ وَعُرْوَةُ، وَالزُّهْرِيُّ وَقَالَ الزُّهْرِيُّ: قَالَ عَلِيٌّ: «لاَ تَحْرُمُ» وَهَذَا مُرْسَلٌ


Bukhari-5104

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 பாலூட்டிய செவி-த் தாயின் சாட்சியம்.

5104. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

நான் (உம்மு யஹ்யா பின்த் அபி இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)” என்று கூறினாள். எனவே (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘நான்’ இன்னவர் மகள் இன்னவளை மணந்துகொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப்பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி ‘நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்’ என்று பொய் சொல்கிறாள்” என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து ‘அவள் பொய் தான் சொல்கிறாள்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம்

تَزَوَّجْتُ امْرَأَةً، فَجَاءَتْنَا امْرَأَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: أَرْضَعْتُكُمَا، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: تَزَوَّجْتُ فُلاَنَةَ بِنْتَ فُلاَنٍ، فَجَاءَتْنَا امْرَأَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ لِي: إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا، وَهِيَ كَاذِبَةٌ، فَأَعْرَضَ عَنِّي، فَأَتَيْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، قُلْتُ: إِنَّهَا كَاذِبَةٌ، قَالَ: «كَيْفَ بِهَا وَقَدْ زَعَمَتْ أَنَّهَا قَدْ أَرْضَعَتْكُمَا، دَعْهَا عَنْكَ» وَأَشَارَ إِسْمَاعِيلُ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالوُسْطَى، يَحْكِي أَيُّوبَ


Next Page » « Previous Page