ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 33
இறைவன் (வானவர்) ஜிப்ரீல் அவர்களுடன் பேசுவதும் அவன் வானவர்களை அழைப்பதும்.
மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(நபியே!) விவேகமும் ஞானமும் மிக்க (இறை)வனிடமிருந்து இந்தக் குர்ஆன் உமக்கு அருளப்பெறுகிறது எனும் (27:6ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள துலக்கா’ எனும் சொல்லுக்குப் போடப்படுகிறது’ என்று பொருள். இதைப் போன்றே, ஆதம் தம்முடைய இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார் எனும் (2:37ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள தலக்கா’ எனும் சொல்லுக்கு அடைந்தார்’ என்று பொருள்.
7485. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ்
إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي جِبْرِيلُ فِي السَّمَاءِ: إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، وَيُوضَعُ لَهُ القَبُولُ فِي أَهْلِ الأَرْضِ
சமீப விமர்சனங்கள்