Category: புஹாரி

Bukhari

Bukhari-4881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், ‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :65


إِنَّ فِي الجَنَّةِ شَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لاَ يَقْطَعُهَا، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَظِلٍّ مَمْدُودٍ} [الواقعة: 30]


Bukhari-4879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகை களி)ல் தங்கவைக்கப்பெற்ற ஹூர் எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்திலுள்ள) ஹூர் எனும் சொல்லுக்குக் கன்னங்கரு விழியாள் என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மக்ஸூராத் எனும் சொல்லுக்குத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.

4879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.

«إِنَّ فِي الجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ، عَرْضُهَا سِتُّونَ مِيلًا، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الآخَرِينَ، يَطُوفُ عَلَيْهِمُ المُؤْمِنُونَ، وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَجَنَّتَانِ مِنْ كَذَا، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ القَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ»


Bukhari-4877 & 4878

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَهُوَ فِي قُبَّةٍ لَهُ يَوْمَ بَدْرٍ: «أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ اليَوْمِ أَبَدًا» فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ، وَقَالَ: حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ، وَهُوَ فِي الدِّرْعِ، فَخَرَجَ وَهُوَ يَقُولُ: {سَيُهْزَمُ الجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ، بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46]


Bukhari-4876

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அமர்ரு (மிகவும் கசப்பானது) எனும் சொல், மாராரத் (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

4876. யூஸுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு, ‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம் அருளப்பெறற்து’ என்று கூறினார்கள்.

Book : 65


لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ، {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46]


Bukhari-4874 & 4875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்… உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்).

4874. & 4875. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹ்ல் மின்(ம்) முஸ்ஸம்ர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தம்ர் (என்றே ஓதுக!)’ என்றார்கள்.

Book : 65


قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَهَلْ مِنْ مُذَّكِرٍ) فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]


Bukhari-4873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கை யையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38,39 ஆகிய வசனங்கள்).

4873. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள்.

பகுதி..

உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கிறோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51 வது இறைவசனம்.)

Book : 65


قَرَأَ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]


Bukhari-4872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்).

4872. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ என்றே ஓதினார்கள்.

Book : 65


قَرَأَ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] ” الآيَةَ


Bukhari-4871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும்54:20,21 ஆகிய வசனங்கள்).

4871. அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார்

ஒருவர் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் (54 வது) அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தம்ர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டதற்குவர்கள், ‘ஃபஹல் மின் முத்தம்ர்’ என்றே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதக் கேட்டேன். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ என ‘தால்’ (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 65


أَنَّهُ سَمِعَ رَجُلًا، سَأَلَ الأَسْوَدَ: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] أَوْ (مُذَّكِرٍ)؟ فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقْرَؤُهَا: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] قَالَ: وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا: «فَهَلْ مِنْ مُدَّكِرٍ» دَالًا


Bukhari-4870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே,நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்.) இந்த வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்ஸர்னா எனும் சொல்லுக்கு இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள் ளோம் என்று பொருள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

4870. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தம்ர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தம்ர்’ என்றோ, ‘முஸ்ஸம்ர்’ என்றோ ஓதவில்லை.

Book : 65


أَنَّهُ كَانَ يَقْرَأُ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]


Next Page » « Previous Page