Category: புஹாரி

Bukhari

Bukhari-4707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 உறுதி உங்களிடம் வரும் வரை (நபியே!) நீங்கள் உங்கள் இறைவனை வணங்கி வாருங்கள் எனும் (15:99ஆவது) இறைவசனம். இவ்வசனத்திலுள்ள உறுதி (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கின்றது என்று சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாபிகூன் (ஒருவரையொருவர் முந்திக் கொள்பவர்கள்) என்பதற்கு (அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்கதி முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்) என்று பொருள். (23:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஜிலத் குலூபுஹும் எனும் சொற்றொடருக்கு அஞ்சுபவர்கள்என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (23:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த எனும் சொற்றொடருக்கு வெகுதூரம்,வெகுதூரம் (அசாத்தியம்) என்று பொருள். (23:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஆத்தீன் (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல்,வானவர்களைக் குறிக்கின்றது. (23:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல நாக்கிபூன் எனும் சொல்லுக்குப் புறக்கணித்த வர்கள் என்று பொருள். (23:104ஆவது வசனத்திலுள்ள) முகம் விகாரமானவர்கள் எனும் பொருள் மூலத்திலுள்ள கா-ஹுன் எனும் சொல்லுக்குரியதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ وَالكَسَلِ، وَأَرْذَلِ العُمُرِ، وَعَذَابِ القَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»


Bukhari-4706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4706. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர் மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே’ எனும் (திருக்குர்ஆன் 15:90 வது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தம் வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள்.

இதை அபூ ழப்யான் ஹுஸைன் இப்னு ஜுன்துப்(ரஹ்) அறிவித்தார்.

Book :65


{كَمَا أَنْزَلْنَا عَلَى المُقْتَسِمِينَ} [الحجر: 90] قَالَ: «آمَنُوا بِبَعْضٍ وَكَفَرُوا بِبَعْضٍ، اليَهُودُ وَالنَّصَارَى»


Bukhari-4705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள் எனும் (15:91ஆவது) இறைவசனம். (15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முக்தஸிமீன் எனும் சொல்லுக்குச் சத்தியம் செய்தவர்கள்என்று பொருள்.5 இதே இனத்தில் உள்ளது தான் (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா உக்ஸிமுஎனும் சொல்லும். இதற்குச் சத்தியம் செய்கிறேன் என்று பொருள். இதனை ல உக்ஸிமு (உறுதி யாக சத்தியம் செய்கிறேன்) எனவும் ஓதலாம். (7:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காஸமஹுமா எனும் சொல்லுக்கு, (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை என்று பொருள்.6 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (27:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தகாஸமூ எனும் சொல்லுக்கு ஒருவருக் கொருவர் சத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று பொருள்.

4705. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 15:91 வது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு

{الَّذِينَ جَعَلُوا القُرْآنَ عِضِينَ} [الحجر: 91] قَالَ: «هُمْ أَهْلُ الكِتَابِ جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ»


Bukhari-4704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 65


«أُمُّ القُرْآنِ هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ»


Bukhari-4703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம் எனும் (15:87ஆவது) இறைவசனம்.

4703. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், ‘(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் தொழுது கொண்டிருந்தேன்’ என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?’ என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை)

مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُصَلِّي، فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ ثُمَّ أَتَيْتُ، فَقَالَ: «مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنِي؟» فَقُلْتُ: كُنْتُ أُصَلِّي، فَقَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24] ثُمَّ قَالَ: «أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ المَسْجِدِ» فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَخْرُجَ مِنَ المَسْجِدِ فَذَكَّرْتُهُ، فَقَالَ: «الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ. هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»


Bukhari-4702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள் எனும் (15:80ஆவது) இறைவசனம்.

4702. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஹிஜ்ர்’ வாசிகளைக் குறித்து, ‘இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப்போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டிவிடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லாதீர்கள்’ என்று கூறினார்கள்.

Book : 65


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَصْحَابِ الحِجْرِ: «لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ القَوْمِ إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ»


Bukhari-4701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் வான்வெளியை நாம் காத்தோம். (ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது;) எதையேனும் ஒட்டுக் கேட்பவர் தவிர! (அப்படி அவர் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச் சுவாலை அவரைப் பின்சென்று விரட்டும் (எனும்15:17, 18 ஆகிய வசனங்கள்).

4701. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னுஅப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்:

(சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்’ என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ المَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَالسِّلْسِلَةِ عَلَى صَفْوَانٍ – قَالَ عَلِيٌّ: وَقَالَ غَيْرُهُ: صَفْوَانٍ يَنْفُذُهُمْ ذَلِكَ – فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ، قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ، قَالُوا لِلَّذِي قَالَ: الحَقَّ، وَهُوَ العَلِيُّ الكَبِيرُ، فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ، وَمُسْتَرِقُو السَّمْعِ هَكَذَا وَاحِدٌ فَوْقَ آخَرَ – وَوَصَفَ سُفْيَانُ بِيَدِهِ، وَفَرَّجَ بَيْنَ أَصَابِعِ يَدِهِ اليُمْنَى، نَصَبَهَا بَعْضَهَا فَوْقَ بَعْضٍ – فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ المُسْتَمِعَ قَبْلَ أَنْ يَرْمِيَ بِهَا إِلَى صَاحِبِهِ فَيُحْرِقَهُ، وَرُبَّمَا لَمْ يُدْرِكْهُ حَتَّى يَرْمِيَ بِهَا إِلَى الَّذِي يَلِيهِ، إِلَى الَّذِي هُوَ أَسْفَلَ مِنْهُ، حَتَّى يُلْقُوهَا إِلَى الأَرْضِ – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: حَتَّى تَنْتَهِيَ إِلَى الأَرْضِ – فَتُلْقَى عَلَى فَمِ السَّاحِرِ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ، فَيُصَدَّقُ فَيَقُولُونَ: أَلَمْ يُخْبِرْنَا يَوْمَ كَذَا وَكَذَا، يَكُونُ كَذَا وَكَذَا، فَوَجَدْنَاهُ حَقًّا؟ لِلْكَلِمَةِ الَّتِي سُمِعَتْ مِنَ السَّمَاءِ ” حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ»، وَزَادَ «وَالكَاهِنِ»، وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، فَقَالَ: قَالَ عَمْرٌو: سَمِعْتُ عِكْرِمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: «إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ»، وَقَالَ: «عَلَى فَمِ السَّاحِرِ» قُلْتُ لِسُفْيَانَ: أَأَنْتَ سَمِعْتَ عَمْرًا؟ قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ لِسُفْيَانَ: إِنَّ إِنْسَانًا رَوَى عَنْكَ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ وَيَرْفَعُهُ أَنَّهُ قَرَأَ: «فُرِّغَ»، قَالَ سُفْيَانُ: هَكَذَا قَرَأَ عَمْرٌو، فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ، قَالَ سُفْيَانُ: وَهِيَ قِرَاءَتُنَا


Bukhari-4700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்வின் அருட்கொடையை (அடைந்த பின் அதனை) நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தங்கள் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை நீர் பார்க்க வில்லையா? (எனும் 14:28ஆவது இறை வசனம்.) (இவ்வசனத்திலுள்ள) நீர் பார்க்க வில்லையா? (அலம் தர) எனும் சொற்றொட ருக்கு நீர் அறியவில்லையா? என்று பொருள். அலம் தர கைஃப (14:24; 89:6; 105:1) மற்றும் அலம் தர இலல்லஃதீன கரஜூ (2:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அல்பவார் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள். (25:18; 48:12ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) கவ்மன் பூரா என்பதன் பொருள் அழிந்து விடும் சமுதாயம்என்பதாகும்.

4700. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.

‘அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்கால் மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?’ எனும் (திருக்குர்ஆன் 14:28 வது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்து இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

{أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} [إبراهيم: 28] قَالَ: «هُمْ كُفَّارُ أَهْلِ مَكَّةَ»