Category: புஹாரி

Bukhari

Bukhari-4667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக் கும் (ஸகாத் எனும் தானம் உரியதாகும்) எனும் (9:60ஆவது) வசனத் தொடர். நன்கொடை மூலம் மக்களை ஈர்ப்பவர் களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

4667. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், ‘இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்’ என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் ‘நீங்கள் நீதி செய்யவில்லை’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்’ என்று கூறினார்கள்.

Book : 65


بُعِثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ فَقَسَمَهُ بَيْنَ أَرْبَعَةٍ، وَقَالَ: أَتَأَلَّفُهُمْ؟ فَقَالَ رَجُلٌ: مَا عَدَلْتَ، فَقَالَ: «يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَمْرُقُونَ مِنَ الدِّينِ»


Bukhari-4666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4666. இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், கூறினார்கள், இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேரவேண்டுமென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? நான் இப்னு ஸுபைருக்காக அவருக்கு ஆதரவு கொடுப்பதா வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவிற்கு) நான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவோ உமர் (ரலி) அவர்களுக்காகவோ வாதாடியதில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக்கும் தகுதிவாய்ந்தோராய் இருந்தனர் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். இப்னு ஸுபைர் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸமா) உடைய புதல்வரும் ஆவார் என்று (மக்களிடம்) கூறினேன்.

دَخَلْنَا عَلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: «أَلاَ تَعْجَبُونَ لِابْنِ الزُّبَيْرِ قَامَ فِي أَمْرِهِ هَذَا»، فَقُلْتُ: «لَأُحَاسِبَنَّ نَفْسِي لَهُ مَا حَاسَبْتُهَا لِأَبِي بَكْرٍ، وَلاَ لِعُمَرَ، وَلَهُمَا كَانَا أَوْلَى بِكُلِّ خَيْرٍ مِنْهُ»، وَقُلْتُ: «ابْنُ عَمَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَابْنُ الزُّبَيْرِ، وَابْنُ أَبِي بَكْرٍ، وَابْنُ أَخِي خَدِيجَةَ، وَابْنُ أُخْتِ عَائِشَةَ، فَإِذَا هُوَ يَتَعَلَّى عَنِّي، وَلاَ يُرِيدُ ذَلِكَ»، فَقُلْتُ: «مَا كُنْتُ أَظُنُّ أَنِّي أَعْرِضُ هَذَا مِنْ نَفْسِي، فَيَدَعُهُ وَمَا أُرَاهُ يُرِيدُ خَيْرًا، وَإِنْ كَانَ لاَ بُدَّ لَأَنْ يَرُبَّنِي بَنُو عَمِّي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَرُبَّنِي غَيْرُهُمْ»


Bukhari-4665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4665. இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் காலையில் சென்று, ‘நீங்கள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும் தாம் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கிறவர்களாக அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.’ என்று கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: மக்கள் (என்னிடம்) ‘இப்னு ஸுபைர் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவரின் தந்தையோ நபி(ஸல்) அவர்களின் பிரத்தியேக உதவியாளராவார் – ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்

فَغَدَوْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، فَقُلْتُ: أَتُرِيدُ أَنْ تُقَاتِلَ ابْنَ الزُّبَيْرِ، فَتُحِلَّ حَرَمَ اللَّهِ؟ فَقَالَ: «مَعَاذَ اللَّهِ، إِنَّ اللَّهَ كَتَبَ ابْنَ الزُّبَيْرِ وَبَنِي أُمَيَّةَ مُحِلِّينَ، وَإِنِّي وَاللَّهِ لَا أُحِلُّهُ أَبَدًا»، قَالَ: قَالَ النَّاسُ: بَايِعْ لِابْنِ الزُّبَيْرِ فَقُلْتُ: ” وَأَيْنَ بِهَذَا الأَمْرِ عَنْهُ، أَمَّا أَبُوهُ: فَحَوَارِيُّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ الزُّبَيْرَ – وَأَمَّا جَدُّهُ: فَصَاحِبُ الغَارِ – يُرِيدُ أَبَا بَكْرٍ – وَأُمُّهُ: فَذَاتُ النِّطَاقِ – يُرِيدُ أَسْمَاءَ – وَأَمَّا خَالَتُهُ: فَأُمُّ المُؤْمِنِينَ – يُرِيدُ عَائِشَةَ – وَأَمَّا عَمَّتُهُ: فَزَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ خَدِيجَةَ – وَأَمَّا عَمَّةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَجَدَّتُهُ – يُرِيدُ صَفِيَّةَ – ثُمَّ عَفِيفٌ فِي الإِسْلاَمِ، قَارِئٌ لِلْقُرْآنِ، وَاللَّهِ إِنْ وَصَلُونِي وَصَلُونِي مِنْ قَرِيبٍ، وَإِنْ رَبُّونِي رَبُّونِي أَكْفَاءٌ كِرَامٌ، فَآثَرَ التُّوَيْتَاتِ وَالْأُسَامَاتِ وَالْحُمَيْدَاتِ يُرِيدُ أَبْطُنًا مِنْ بَنِي أَسَدٍ بَنِي تُوَيْتٍ وَبَنِي أُسَامَةَ وَبَنِي أَسَدٍ، إِنَّ ابْنَ أَبِي العَاصِ بَرَزَ يَمْشِي القُدَمِيَّةَ – يَعْنِي عَبْدَ المَلِكِ بْنَ مَرْوَانَ – وَإِنَّهُ لَوَّى ذَنَبَهُ – يَعْنِي ابْنَ الزُّبَيْرِ


Bukhari-4664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4664. இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,) ‘இப்னு ஸுபைரின் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும், அவர்களின் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களும், அவர்களின் பாட்டி ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக்கூடாது?)’ என்று கேட்டேன்.

Book :65


أَنَّهُ قَالَ حِينَ وَقَعَ بَيْنَهُ وَبَيْنَ ابْنِ الزُّبَيْرِ: قُلْتُ: «أَبُوهُ الزُّبَيْرُ، وَأُمُّهُ أَسْمَاءُ، وَخَالَتُهُ عَائِشَةُ، وَجَدُّهُ أَبُو بَكْرٍ، وَجَدَّتُهُ صَفِيَّةُ»، فَقُلْتُ لِسُفْيَانَ: إِسْنَادُهُ؟ فَقَالَ: حَدَّثَنَا، فَشَغَلَهُ إِنْسَانٌ، وَلَمْ يَقُلْ ابْنُ جُرَيْجٍ


Bukhari-4663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிட மிருந்து மன அமைதியை அருளினான் எனும் (9:40ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சகீனா (மனஅமைதி) எனும் சொல் சுகூன் எனும் வேர்ச் சொல்லிலிருந்து ஃபஈலா எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

4663. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி(ஸல்) அவர்களுடன் (‘ஸவ்ர்’ எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே!’ என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

Book : 65


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَارِ فَرَأَيْتُ آثَارَ المُشْرِكِينَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَنَّ أَحَدَهُمْ رَفَعَ قَدَمَهُ رَآنَا، قَالَ: «مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا»


Bukhari-4662

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங் களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இது தான் சரியான நெறிமுறையாகும் எனும் (9:36ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அல்கய்யிம் எனும் சொல்லுக்கு நிலையான என்று பொருள்.

4662. ஹஜ்ஜத்துல் வதாவில்’ உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும்.

என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

Book : 65


إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ، وَذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ، مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى، وَشَعْبَانَ


Bukhari-4661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரகநெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்படும். இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)எனும் (9:35ஆவது) இறைவசனம்.

4661. காலித் இப்னு அஸ்லம்(ரஹ்) கூறினார்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள், (திருக்குர்ஆன் 03:95 வது இறைவசனத்தைப் பற்றி) இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப்படுத்தக் கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்’ என்று கூறினார்கள்.

Book : 65


خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ: «هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ»


Bukhari-4660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4660. ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார்.

நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் அபூ தர்(ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், ‘இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஷாம் நாட்டில் இருந்தோம். அப்போது நான், ‘தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்து, அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக’ எனும் (திருக்குர்ஆன் 09:34 வது) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா(ரலி), இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்களின் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது’ என்று கூறினார்கள். நான், ‘இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிச்சை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்’ என பதிலளித்தார்கள்.

Book :65


مَرَرْتُ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ فَقُلْتُ: مَا أَنْزَلَكَ بِهَذِهِ الأَرْضِ؟ قَالَ: ” كُنَّا بِالشَّأْمِ فَقَرَأْتُ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ} [التوبة: 34] ” قَالَ مُعَاوِيَةُ: مَا هَذِهِ فِينَا، مَا هَذِهِ إِلَّا فِي أَهْلِ الكِتَابِ، قَالَ: قُلْتُ: «إِنَّهَا لَفِينَا وَفِيهِمْ»


Bukhari-4659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் நற்செய்தியினை (நபியே!) நீர் அறிவிப்பீராக எனும் (9:34ஆவது) வசனத் தொடர்.

4659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களின் கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65


«يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ القِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ»


Bukhari-4658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களது மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர் களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்கு சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்க ளிலிருந்து) ஒதுங்கியிருக்கக் கூடும் (எனும் 9:12ஆவது இறைவசனம்).

4658. ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், ‘இந்த இறைவசனத்தில் (திருக்குர்ஆன் 09:12) குறிபிட்டப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறினார்கள்.அப்போது கிராமவாசி ஒருவர், ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர் தரமான பொருள்களைத் திருடிச் செல்கிற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத்

كُنَّا عِنْدَ حُذَيْفَةَ، فَقَالَ: «مَا بَقِيَ مِنْ أَصْحَابِ هَذِهِ الآيَةِ إِلَّا ثَلاَثَةٌ، وَلاَ مِنَ المُنَافِقِينَ إِلَّا أَرْبَعَةٌ»، فَقَالَ أَعْرَابِيٌّ: إِنَّكُمْ أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تُخْبِرُونَا فَلاَ نَدْرِي، فَمَا بَالُ هَؤُلاَءِ الَّذِينَ يَبْقُرُونَ بُيُوتَنَا وَيَسْرِقُونَ أَعْلاَقَنَا؟ قَالَ: «أُولَئِكَ الفُسَّاقُ، أَجَلْ لَمْ يَبْقَ مِنْهُمْ إِلَّا أَرْبَعَةٌ، أَحَدُهُمْ شَيْخٌ كَبِيرٌ، لَوْ شَرِبَ المَاءَ البَارِدَ لَمَا وَجَدَ بَرْدَهُ»


Next Page » « Previous Page