Category: புஹாரி

Bukhari

Bukhari-4637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 என் இறைவன் வெப்படையாகவும், மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடைசெய்துள்ளான் என்று (நபியே!) நீங்கள் சொல்லுங்கள் (எனும் 7:33ஆவது வசனத் தொடர்).

4637. அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்.

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ஆம்! அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ என்று கூறினார்கள்.

Book : 65


«لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ المِدْحَةُ مِنَ اللَّهِ فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ»


Bukhari-4636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4636. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது’ எனும் இந்த (திருக்குர்ஆன் 06:158 வது) வசனத்தை ஓதினார்கள்.

Book :65


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا» ثُمَّ قَرَأَ الآيَةَ


Bukhari-4635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ(க்)கீல்’ எனும் சொல்லுக்குக் கண்காணித்துப் பாதுகாப்பவன்’ என்று பொருள். (6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) குபுல்’ எனும் சொல் கபீல் எனும் சொல்ன் பன்மையாகும். பல வகை வேதனைகள்’ என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் கபீல்’ என்று கூறப்படும். (6: 112ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுக்ருஃபுல் கவ்ல்’ எனும் சொற்றொட ரானது, நீ எழிலூட்டி அலங்கரித்துக் காட்டும் எல்லா போகளையும் குறிக்கும். (6:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹிஜ்ர்’ எனும் சொல்லுக்குத் தடுக்கப்பட்டது’ என்று பொருள். தடைவிதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் ஹிஜ்ருன் மஹ்ஜுர்’ எனப் படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் அல் ஹிஜ்ர்’ எனலாம். பெட்டைக் குதிரையும் ஹிஜ்ர்’ எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவும் ஹிஜ்ர்’ என்றும்,ஹிஜா’ என்றும் சொல்லப்படுவதுண்டு. ஸமூத்’ குலத்தார் வாழ்ந்த பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படுவதுண்டு. தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படும். இதனால்தான், இறை யில்லம் கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம்’ (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) ஹிஜ்ர்’ (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது. (ஃபஈல்’ எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) ஹத்தீம்’

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ} [الأنعام: 158]


Bukhari-4634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 ‘மானக்கேடான செயல்கல் வெப்படை யானவை, மறைவானவை எதனையும் நெருங்காதீர்கள்’ எனும் (6:151ஆவது) வசனத் தொடர்.

4634. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) கூறினார்:

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதில்

«لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَيْءَ أَحَبُّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ» قُلْتُ: سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: وَرَفَعَهُ؟ قَالَ: نَعَمْ {وَكِيلٌ} [الأنعام: 102]: «حَفِيظٌ وَمُحِيطٌ بِهِ». {قُبُلًا} [الأنعام: 111]: ” جَمْعُ قَبِيلٍ، وَالمَعْنَى: أَنَّهُ ضُرُوبٌ لِلْعَذَابِ، كُلُّ ضَرْبٍ مِنْهَا قَبِيلٌ “. {زُخْرُفَ القَوْلِ} [الأنعام: 112]: «كُلُّ شَيْءٍ حَسَّنْتَهُ وَوَشَّيْتَهُ، وَهُوَ بَاطِلٌ فَهُوَ زُخْرُفٌ»، {وَحَرْثٌ حِجْرٌ} [الأنعام: 138]: ” حَرَامٌ، وَكُلُّ مَمْنُوعٍ فَهْوَ حِجْرٌ مَحْجُورٌ، وَالحِجْرُ كُلُّ بِنَاءٍ بَنَيْتَهُ [ص:58]، وَيُقَالُ لِلْأُنْثَى مِنَ الخَيْلِ: حِجْرٌ، وَيُقَالُ لِلْعَقْلِ: حِجْرٌ وَحِجًى، وَأَمَّا الحِجْرُ فَمَوْضِعُ ثَمُودَ، وَمَا حَجَّرْتَ عَلَيْهِ مِنَ الأَرْضِ فَهُوَ حِجْرٌ، وَمِنْهُ سُمِّيَ حَطِيمُ البَيْتِ حِجْرًا، كَأَنَّهُ مُشْتَقٌّ مِنْ مَحْطُومٍ، مِثْلُ: قَتِيلٍ مِنْ مَقْتُولٍ، وَأَمَّا حَجْرُ اليَمَامَةِ فَهْوَ مَنْزِلٌ


Bukhari-4633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடைசெய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகன் கொழுப்பை யும் தடைசெய்திருந்தோம் (எனும் 6:146 ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹவாயா’ என்பது குடல்களைக் குறிக்கும்.12 மற்றவர்கள்கூறுகின்றனர்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாதூ’ என்பதற்கு யூதர்களாய் ஆகிவிட்ட வர்கள்’ என்று பொருள். (இதே சொல்ருந்து பிறந்த 7:156 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுத்னா’ என்பதற்கு பாவமன்னிப்புக் கோரினோம்’ என்று பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) ஹாயித்’ என்பதற்கு பாவமன்னிப்புக் கோருகின்றவர்’ என்று பொருள்.

4633. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணிகளின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.

«قَاتَلَ اللَّهُ اليَهُودَ لَمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوهَا» وَقَالَ أَبُو عَاصِمٍ: حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَيَّ عَطَاءٌ، سَمِعْتُ جَابِرًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ