Category: புஹாரி

Bukhari

Bukhari-4627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும்6:59ஆவது வசனத் தொடர்).

4627. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறினான்:) ‘நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்தமனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறேன் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 31:34)5

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 65


{مَفَاتِحُ الغَيْبِ} [الأنعام: 59] خَمْسٌ: (إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنْزِلُ الغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ)


Bukhari-4626

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவு டையவனுமாய் இருக்கின்றாய் (என்றும் மர்யமின் மைந்தர் ஈசா கூறுவார்) எனும் (5:118ஆவது) இறைவசனம்.

4626. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப் படவிருக்கிறீர்கள். சிலர் இடப் பக்கத்திலுள்ள நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் (ஈசா(அலை) அவர்கள்) சொன்னதைப் போல், ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்’ (திருக்குர்ஆன் 05:117,118) என்று சொல்வேன்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

إِنَّكُمْ مَحْشُورُونَ وَإِنَّ نَاسًا يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ} [المائدة: 117] إِلَى قَوْلِهِ {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]