Category: புஹாரி

Bukhari

Bukhari-4596

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, (அவர்களை நோக்கி, மார்க்கக் கடமைகளை நிறைவேற்றமுடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமான தாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து(ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும் எனும் (4:97ஆவது) இறைவசனம்.

4596. முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத் (ரஹ்) அறிவித்தார்.

(அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரலி மக்காவின் ஆட்சியராக இருந்த நேரம், ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக)

மதீனாவாசிகள், ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை

قُطِعَ عَلَى أَهْلِ المَدِينَةِ بَعْثٌ، فَاكْتُتِبْتُ فِيهِ، فَلَقِيتُ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ، فَنَهَانِي عَنْ ذَلِكَ أَشَدَّ النَّهْيِ، ثُمَّ قَالَ: أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ: «أَنَّ نَاسًا مِنَ المُسْلِمِينَ كَانُوا مَعَ المُشْرِكِينَ يُكَثِّرُونَ سَوَادَ المُشْرِكِينَ، عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِي السَّهْمُ فَيُرْمَى بِهِ فَيُصِيبُ أَحَدَهُمْ، فَيَقْتُلُهُ – أَوْ يُضْرَبُ فَيُقْتَلُ» – فَأَنْزَلَ اللَّهُ: {إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ المَلاَئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ} [النساء: 97] الآيَةَ رَوَاهُ اللَّيْثُ، عَنْ أَبِي الأَسْوَدِ


Bukhari-4595

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4595. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் வசனம் (திருக்குர்ஆன் 04:95) பத்ருப்போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
Book :65


{لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95]: «عَنْ بَدْرٍ، وَالخَارِجُونَ إِلَى بَدْرٍ»


Bukhari-4594

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4594. பராஉ (ரலி) அறிவித்தார்.

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரைக் கூப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.

(ஸைத் இப்னு ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் ‘பலகையையும்’ அல்லது ‘அகலமான எழும்பையும்’ தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) இருந்தார்கள்.

அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே!’ என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில் ‘இறைநம்பிக்கையாளர்களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்‘ என்ற இறைவசனம் (திருக்குர்ஆன் 4:95 முழுமையாக) இறங்கிற்று.
Book :65


لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95] قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ادْعُوا فُلاَنًا» فَجَاءَهُ وَمَعَهُ الدَّوَاةُ وَاللَّوْحُ، أَوِ الكَتِفُ، فَقَالَ: ” اكْتُبْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95] {وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95] “

وَخَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَا ضَرِيرٌ،

فَنَزَلَتْ مَكَانَهَا (لَا يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ غَيْرَ أُولِي الضَّرَرِ وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ)


Bukhari-4593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4593. பராஉ (ரலி) அறிவித்தார்.

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) வந்து தம் ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ் ‘இடையூறு உள்ளவர்களைத் தவிர’ எனும் சொற்றொடரை அருளினான்.
Book :65


لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي} [النساء: 95] القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا فَكَتَبَهَا، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَشَكَا ضَرَارَتَهُ ” فَأَنْزَلَ اللَّهُ: (غَيْرَ أُولِي الضَّرَرِ)


Bukhari-4592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

இறை நம்பிக்கையாளர்களில் -இடையூறு உள்ளவர்கள் தவிர- அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95 ஆவது வசனத் தொடர்).

4592. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அறிவித்தார்.

நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்னு ஸாபித் (ரலி) (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்’ என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின்

أَنَّهُ رَأَى مَرْوَانَ بْنَ الحَكَمِ فِي المَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْلَى عَلَيْهِ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95] {وَالمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]،

فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهْوَ [ص:48] يُمِلُّهَا عَلَيَّ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَوْ أَسْتَطِيعُ الجِهَادَ لَجَاهَدْتُ، وَكَانَ أَعْمَى، «فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَيَّ حَتَّى خِفْتُ أَنْ تَرُضَّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ»،

فَأَنْزَلَ اللَّهُ: (غَيْرَ أُولِي الضَّرَرِ)


Bukhari-4591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

(தம்மை இறை நம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சலாம் எனும் சொல்லும், (இன்னும் இரு வகையான ஓதுதல் முறையில் வந்துள்ள) சில்ம், சலம் ஆகிய சொற்களும் (சாந்தி எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

4591. இப்னு அப்பாஸ் (ரலி) 4:94 வது வசனம் குறித்துக் அறிவித்தார்.

ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள்.

{وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلاَمَ لَسْتَ مُؤْمِنًا} [النساء: 94] قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: ” كَانَ رَجُلٌ فِي غُنَيْمَةٍ لَهُ فَلَحِقَهُ المُسْلِمُونَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَتَلُوهُ وَأَخَذُوا غُنَيْمَتَهُ، فَأَنْزَلَ اللَّهُ فِي ذَلِكَ إِلَى قَوْلِهِ: {تَبْتَغُونَ عَرَضَ الحَيَاةِ الدُّنْيَا} [النساء: 94] تِلْكَ الغُنَيْمَةُ “

قَالَ: قَرَأَ ابْنُ عَبَّاسٍ السَّلاَمَ


Bukhari-4590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93ஆவது வசனத் தொடர்).

4590. ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்.

இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம்) இராக்கைச் சேர்ந்த கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும்.

நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை’ என்று கூறினார்கள்.
Book : 65


آيَةٌ اخْتَلَفَ فِيهَا أَهْلُ الكُوفَةِ، فَرَحَلْتُ فِيهَا إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنْهَا، فَقَالَ: ” نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] هِيَ آخِرُ مَا نَزَلَ، وَمَا نَسَخَهَا شَيْءٌ


Bukhari-4589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகி விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (தீய) வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் (எனும் 4:88ஆவது வசனத் தொடர்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்கஸ எனும் சொல்லுக்குப் பிரித்துத் தனித் தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதற அடித்து விட்டான் என்று பொருள். ஃபிஅத் எனும் சொல்லுக்குக் குழுவினர் என்று பொருள்.

4589. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள், 4:88 வது இறைவசனம் குறித்துக் கூறினார்:

(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டார்கள். இவர்களின் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு ) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர்.

ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்று விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். மற்றொரு பிரிவினர் “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய) அவர்களை கொல்ல வேண்டாம்” என்று கூறினர். அப்போது தான்

{فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ} [النساء: 88] رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أُحُدٍ، وَكَانَ النَّاسُ فِيهِمْ فِرْقَتَيْنِ: فَرِيقٌ يَقُولُ: اقْتُلْهُمْ، وَفَرِيقٌ يَقُولُ: لاَ، فَنَزَلَتْ: {فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ} [النساء: 88] وَقَالَ: «إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الفِضَّةِ»

{ أَذَاعُوا بِهِ } : أَفْشَوْهُ ، { يَسْتَنْبِطُونَهُ } : يَسْتَخْرِجُونَهُ ، { حَسِيبًا } : كَافِيًا ، { إِلا إِنَاثًا } يَعْنِي : الْمَوَاتَ حَجَرًا أَوْ مَدَرًا وَمَا أَشْبَهَهُ ، { مَرِيدًا } : مُتَمَرِّدًا ، { فَلَيُبَتِّكُنَّ } : بَتَّكَهُ قَطَّعَهُ ، { قِيلا } وَقَوْلًا وَاحِدٌ ، { طَبَعَ } : خَتَمَ


Bukhari-4588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4588. இப்னு அபீ முலைக்கா (அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்.

இப்னுஅப்பாஸ் (ரலி), ‘எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர’ எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, ‘(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்’ என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸிரத்’ (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, ‘(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக் கொண்டன’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:135 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்வூ’ (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு ‘நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்’ என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 04:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முராஃகம்’ எனும் சொல்லுக்கு ‘ஹிஜ்ரத் செல்லுமிடம்’ (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) ‘ராஃகம்த்து’ எனும் சொல்லுக்கு ‘நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:103

أَنَّ ابْنَ عَبَّاسٍ، تَلاَ {إِلَّا المُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالوِلْدَانِ} [النساء: 98]، قَالَ: «[ص:47] كُنْتُ أَنَا وَأُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ»

وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ {حَصِرَتْ} [النساء: 90]: ضَاقَتْ

، {تَلْوُوا} [النساء: 135]: أَلْسِنَتَكُمْ بِالشَّهَادَةِ

وَقَالَ غَيْرُهُ: ” المُرَاغَمُ: المُهَاجَرُ، رَاغَمْتُ: هَاجَرْتُ قَوْمِي. {مَوْقُوتًا} [النساء: 103]: مُوَقَّتًا وَقْتَهُ عَلَيْهِمْ


Bukhari-4587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அவர்களோ ” எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவலரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்குவாயாக! எனப் பிராத்தித்துக் கொண்டிருக் கின்றனர் ” எனும் (4:75 ஆவது) இறைவசனம்.

4587. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நானும், என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம்.
Book : 65


«كُنْتُ أَنَا وَأُمِّي مِنَ المُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ»


Next Page » « Previous Page