Category: புஹாரி

Bukhari

Bukhari-4586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள்தாம் சிறந்த தோழர்கள் (எனும் 4:69 ஆவது இறைவசனம்).

4586. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இறுதியாக) நோயுற்றுவிடுகிற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு – மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்)’ என்று சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன்.

(இதிலிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
Book : 65


«مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ»، وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ،

فَسَمِعْتُهُ يَقُولُ: {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ} [النساء: 69] فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ


Bukhari-4585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள் (எனும் 4:65 ஆவது இறைவசனம்).
4585. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ‘ஹர்ரா’ எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)’ என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஸுபைர்(ரலி) அவர்களைப் பார்த்து), ‘ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள்.

خَاصَمَ الزُّبَيْرُ رَجُلًا مِنَ الأَنْصَارِ فِي شَرِيجٍ مِنَ الحَرَّةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ المَاءَ إِلَى جَارِكَ»، فَقَالَ الأَنْصَارِيُّ: يَا رَسُولَ اللَّهِ، أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ احْبِسِ المَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الجَدْرِ، ثُمَّ أَرْسِلِ المَاءَ إِلَى جَارِكَ»، وَاسْتَوْعَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلزُّبَيْرِ حَقَّهُ فِي صَرِيحِ الحُكْمِ حِينَ أَحْفَظَهُ الأَنْصَارِيُّ، كَانَ أَشَارَ عَلَيْهِمَا بِأَمْرٍ لَهُمَا فِيهِ سَعَةٌ، قَالَ الزُّبَيْرُ: فَمَا أَحْسِبُ هَذِهِ الآيَاتِ إِلَّا نَزَلَتْ فِي ذَلِكَ: {فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ} [النساء: 65]


Bukhari-4584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர்.)

4584. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக’ எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ(ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.
Book : 65


{أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ} [النساء: 59]، قَالَ: «نَزَلَتْ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ إِذْ بَعَثَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ»


Bukhari-4583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்து விட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்புரவு செய்ய) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களின் முகங்களிலும் கைகளிலும் (அதைத்) தடவிக் கொள் ளுங்கள் எனும் (4:43ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸஈதன் (மண்) எனும் சொல் பூமியின் மேல் பரப்பைக் குறிக்கின்றது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ள4:60ஆவது வசனத்தில்-அவர்கள் தாஃகூத்தை (விஷமியை) நிராகரித்து விட வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டிருக்க, அந்த தாஃகூத்திடமே தீர்ப்புக்கேட்க அவர்கள் விரும்புகின்றனர் என்பதில்-உள்ளன தாஃகூத் எனும் சொல் சோதிடனைக் குறிக்கும். (அன்றைய அரபுகளில்) ஜுஹைனாகுலத்தாரிடையே ஒருவனும், அஸ்லம் குலத்தாரிடையே ஒருவனும், ஒவ்வொரு குலத்தாரிடையே ஒருவனுமாகப் பல சோதிடர்கள் இருந்தனர். அவர்கள் மீது (குறிசொல்லும்) ஷைத்தான் இறங்குவான். இத்தகைய தாஃகூத்களிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்டுவந்தனர். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (4:51ஆவது வசனத்திலுள்ள) ஜிப்த் எனும் சொல் சூனியத்தையும், தாஃகூத் என்பது ஷைத்தானையும்

هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، «فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ، وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ فَأَنْزَلَ اللَّهُ»، يَعْنِي آيَةَ التَّيَمُّمِ


Bukhari-4582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர் களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41ஆவது இறைவசனம்.) (4:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முக்தால் எனும் சொல்லும், (இதே மூலத்திலிருந்து வந்த) கத்தால் எனும் சொல்லும் (கர்வம் பிடித்தவன் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (4:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நத்மிஸ வுஜூஹன் (முகங்களை மாற்றி விடுவோம்) எனும் சொற்றொடருக்கு அவர் களுடைய பிடரியைப் போல முகங்களையும் (தடவி) சம மட்டமாக மாற்றிவிடுவோம் என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) தமஸல் கி(த்)தாப என்பதற்கு எழுத்தை அழித்தான் என்று பொருள். (4:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள சஈர் (கொழுந்து விட்டெரிகின்ற) எனும் சொல்லுக்கு எரிபொருள்என்று அர்த்தம்.
4582. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.

«اقْرَأْ عَلَيَّ» قُلْتُ: آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: «فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي» فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ، حَتَّى بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41] قَالَ: «أَمْسِكْ» فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ


Bukhari-4581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத் தொடர்). அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ,பாவங்களுக்கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்க மாட்டான்.
4581. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! (காண்பீர்கள்) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மேகமே இல்லாத பெளர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொள்ளாதது போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்’ என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்.
மறுமை நாள் ஏற்படும்போது

أَنَّ أُنَاسًا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ القِيَامَةِ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَمْ، هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ»، قَالُوا: لاَ، قَالَ «وَهَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ؟»: قَالُوا: لاَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا تُضَارُونَ فِي رُؤْيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ القِيَامَةِ، إِلَّا كَمَا تُضَارُونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا، إِذَا كَانَ يَوْمُ القِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، فَلاَ يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ مِنَ الأَصْنَامِ وَالأَنْصَابِ، إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ، حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ بَرٌّ أَوْ فَاجِرٌ، وَغُبَّرَاتُ أَهْلِ الكِتَابِ فَيُدْعَى اليَهُودُ فَيُقَالُ لَهُمْ: مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا: كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَمَاذَا تَبْغُونَ؟ فَقَالُوا: عَطِشْنَا رَبَّنَا فَاسْقِنَا، فَيُشَارُ أَلاَ تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ، ثُمَّ يُدْعَى النَّصَارَى فَيُقَالُ لَهُمْ: مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا: كُنَّا نَعْبُدُ المَسِيحَ ابْنَ اللَّهِ، فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ، مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَيُقَالُ لَهُمْ: مَاذَا تَبْغُونَ؟ فَكَذَلِكَ مِثْلَ الأَوَّلِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ، أَوْ فَاجِرٍ، أَتَاهُمْ رَبُّ العَالَمِينَ فِي أَدْنَى صُورَةٍ مِنَ الَّتِي رَأَوْهُ فِيهَا، فَيُقَالُ: مَاذَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، قَالُوا: فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا عَلَى أَفْقَرِ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ، وَنَحْنُ نَنْتَظِرُ رَبَّنَا الَّذِي كُنَّا نَعْبُدُ، فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: لاَ نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا


Bukhari-4580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக் காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள் ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்து விடுங்கள். திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் எனும் (4:33ஆவது) இறைவசனம். மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:9 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மவா-ய எனும் சொல்லுக்கு வாரிசுகள் எனும் நேசர்கள் என்று பொருள். ஆகதத் அய்மானுக்கும் (நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்கள்) என்பது நேச ஒப்பந்தப்படி அமையும் வாரிசுகளைக் குறிக்கின்றது. (மவா- என்பதன் ஒருமையான) மவ்லா என்பது தந்தையின் சகோதரர் மகனையும் குறிக்கும்; (அடிமையை) விடுதலைசெய்து, உபகாரம் புரியும் எஜமான்; விடுதலை செய்யப்பட்ட அடிமை; அரசன் ஆகியோரையும் குறிக்கும். மார்க்கத் தோழன் என்ற பொருளும் உண்டு.
4580. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘மவாலிய’ எனும் சொல்லுக்கு ‘வாரிசுகள்’ என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள்

{وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} [النساء: 33]، قَالَ: وَرَثَةً. (وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ): «كَانَ المُهَاجِرُونَ لَمَّا قَدِمُوا المَدِينَةَ يَرِثُ المُهَاجِرِيُّ الأَنْصَارِيَّ، دُونَ ذَوِي رَحِمِهِ لِلْأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمْ»، فَلَمَّا نَزَلَتْ: {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} [النساء: 33] نُسِخَتْ، ثُمَّ قَالَ: (وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ) مِنَ النَّصْرِ وَالرِّفَادَةِ وَالنَّصِيحَةِ، وَقَدْ ذَهَبَ المِيرَاثُ وَيُوصِي لَهُ، سَمِعَ أَبُو أُسَامَةَ، إِدْرِيسَ، وَسَمِعَ إِدْرِيسُ، طَلْحَةَ


Bukhari-4579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி,அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (4: 19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) லா தஃளுலூ ஹுன்ன எனும் சொல்லுக்கு அவர்களைப் பலவந்தப்படுத் தாதீர்கள் என்று பொருள். (4:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுப் எனும் சொல்லுக்குப் பாவம் என்று பொருள். (4:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஊலூ (பேதம் பாராட்டுவது/நீதி தவறுவது) எனும் சொல்லுக்கு (ஓர வஞ்சனையாக) நீங்கள் சாய்ந்து விடுவது என்று பொருள். (4:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நிஹ்லா எனும் சொல்லுக்கு மஹ்ர் (மணாளன் மணாளிக்கு வழங்க வேண்டிய விவாகக் கொடை) என்று பொருள்.
4579. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக்

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا، وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ} [النساء: 19] قَالَ: «كَانُوا إِذَا مَاتَ الرَّجُلُ كَانَ أَوْلِيَاؤُهُ أَحَقَّ بِامْرَأَتِهِ، إِنْ شَاءَ بَعْضُهُمْ تَزَوَّجَهَا وَإِنْ شَاءُوا زَوَّجُوهَا، وَإِنْ شَاءُوا لَمْ يُزَوِّجُوهَا فَهُمْ أَحَقُّ بِهَا مِنْ أَهْلِهَا، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ»


Bukhari-4578

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (இறந்து போன) உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப் பங்கு உங்களுக் குரியதாகும் (எனும் 4:12ஆவது வசனத் தொடர்).
4578. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது.
அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கை நிர்ணயித்துத்தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கிலொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப்பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான்.
Book : 65


كَانَ المَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ: لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلْأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَالثُّلُثَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبُعَ، وَللزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ


Bukhari-4577

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்… (என்று தொடங்கும் 4:11ஆவது வசனம்.)

4577. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!’ என்று கேட்டேன். அப்போதுதான் ‘அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:11 வது) வசனம் அருளப்பட்டது.
Book : 65


«عَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فِي بَنِي سَلِمَةَ  مَاشِيَيْنِ، فَوَجَدَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ أَعْقِلُ شَيْئًا، فَدَعَا بِمَاءٍ، فَتَوَضَّأَ مِنْهُ، ثُمَّ رَشَّ عَلَيَّ فَأَفَقْتُ»، فَقُلْتُ: مَا تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي مَالِي يَا رَسُولَ اللَّهِ؟ فَنَزَلَتْ: {يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ} [النساء: 11]


Next Page » « Previous Page