Category: புஹாரி

Bukhari

Bukhari-7399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7399. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) சொல்லியும், அல்லாஹு மிகப்பெரியவன் என்று (தக்பீர்) சொல்லியும் குர்பானி கொடுத்தார்கள்.34

Book :97


«ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ يُسَمِّي وَيُكَبِّرُ»


Bukhari-7398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7398. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலகி (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்’ என்று பதில் சொன்னார்கள்.

இதே ஹதீஸை மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33

Book :97


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَا هُنَا أَقْوَامًا حَدِيثٌ عَهْدُهُمْ بِشِرْكٍ، يَأْتُونَا بِلُحْمَانٍ لاَ نَدْرِي يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا أَمْ لاَ، قَالَ: «اذْكُرُوا أَنْتُمُ اسْمَ اللَّهِ، وَكُلُوا»


Bukhari-7397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7397. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘நான் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்புகிறேன். (அது வேட்டிடையாடிக் கொண்டு வருகிறவற்றை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட உங்களின் நாயை (வேட்டைக்காக) அனுப்பிவைக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அது (உங்களுக்காக வேட்டையாடிக்) கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்து, அது (தன்னுடைய முனையால்) தைத்துக் கொன்றதையும் சாப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.32

Book :97


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أُرْسِلُ كِلاَبِي المُعَلَّمَةَ؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ المُعَلَّمَةَ، وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَأَمْسَكْنَ فَكُلْ، وَإِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ فَخَزَقَ فَكُلْ»


Bukhari-7396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7396. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.31

Book :97


لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ، فَقَالَ: بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرُّهُ شَيْطَانٌ أَبَدًا


Bukhari-7395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7395. அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது ‘பிஸ்மிக்க நமூத்து வ நஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) விழித்தெழும்போது ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.30

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، قَالَ: «بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا»، فَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ»


Bukhari-7394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7394. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.29

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ»، وَإِذَا أَصْبَحَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ»


Bukhari-7393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்.

7393. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.28

Book : 97


إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»


Bukhari-7392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) துல் ஜலால்’ என்பதற்கு மகத்துவமிக்கவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பர்ரு’ என்பதற்கு மென்மையானவன்’ என்று பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

7392. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்று பொருள்.

Book : 97


«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ» أَحْصَيْنَاهُ حَفِظْنَاهُ


Bukhari-7391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110)

7391. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் ‘இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பதாகவே இருந்தது. 26

Book : 97


أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»


Bukhari-7390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 (நபியே!) அவனே ஆற்றல்மிக்கவன்’ என்று சொல்லுங்கள் எனும் (6:65ஆவது) இறை வசனம்.

7390. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُ أَصْحَابَهُ الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ القُرْآنِ يَقُولُ: ” إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الفَرِيضَةِ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الأَمْرَ – ثُمَّ تُسَمِّيهِ بِعَيْنِهِ – خَيْرًا لِي فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – قَالَ: أَوْ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ


Next Page » « Previous Page