Category: புஹாரி

Bukhari

Bukhari-3765

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3765. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா(ரலி) விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்’ என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘முஆவியா (மார்க்கச்) சட்ட நிபுணராவார்’ என்று பதிலளித்தார்கள்.
Book :62


قِيلَ لِابْنِ عَبَّاسٍ: ” هَلْ لَكَ فِي أَمِيرِ المُؤْمِنِينَ مُعَاوِيَةَ، فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ؟ قَالَ: «أَصَابَ، إِنَّهُ فَقِيهٌ»


Bukhari-3764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 முஆவியா -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.147
3764. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
முஆவியா(ரலி), தம்மிடம் இப்னு அப்பாஸ்(ருலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா – ரலி – அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.
Book : 62


أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ العِشَاءِ بِرَكْعَةٍ، وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ، فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَقَالَ: «دَعْهُ فَإِنَّهُ قَدْ صَحِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3763. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி(ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி(ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
Book :62


«قَدِمْتُ أَنَا وَأَخِي مِنَ اليَمَنِ فَمَكُثْنَا حِينًا مَا نُرَى إِلَّا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3762. அப்துர் ரஹ்மான் பின் யஸித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி (ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்கு காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்த் மகனை (அதாவது இப்னு மஸ்ஊதை) விட வேறெவரையும் நான் அறிய மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 62


سَأَلْنَا حُذَيْفَةَ عَنْ رَجُلٍ قَرِيبِ السَّمْتِ وَالهَدْيِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَأْخُذَ عَنْهُ، فَقَالَ: «مَا أَعْرِفُ أَحَدًا أَقْرَبَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ابْنِ أُمِّ عَبْدٍ»


Bukhari-3761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3761. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்.
உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி(ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்வூதை) விட வேறெவரையும் நான் அறியமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book :62


دَخَلْتُ الشَّأْمَ فَصَلَّيْتُ رَكْعَتَيْنِ، فَقُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا، فَرَأَيْتُ شَيْخًا مُقْبِلًا فَلَمَّا دَنَا قُلْتُ: أَرْجُو أَنْ يَكُونَ اسْتَجَابَ، قَالَ: مِنْ أَيْنَ أَنْتَ؟ قُلْتُ: مِنْ أَهْلِ الكُوفَةِ، قَالَ: أَفَلَمْ يَكُنْ فِيكُمْ صَاحِبُ النَّعْلَيْنِ وَالوِسَادِ وَالمِطْهَرَةِ؟ أَوَلَمْ يَكُنْ فِيكُمُ الَّذِي أُجِيرَ مِنَ الشَّيْطَانِ؟ أَوَلَمْ يَكُنْ فِيكُمْ صَاحِبُ السِّرِّ الَّذِي لاَ يَعْلَمُهُ غَيْرُهُ؟ كَيْفَ قَرَأَ ابْنُ أُمِّ عَبْدٍ وَاللَّيْلِ، فَقَرَأْتُ: {وَاللَّيْلِ إِذَا يَغْشَى}. وَالنَّهَارِ إِذَا تَجَلَّى. وَالذَّكَرِ وَالأُنْثَى قَالَ: «أَقْرَأَنِيهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاهُ إِلَى فِيَّ، فَمَا زَالَ هَؤُلاَءِ حَتَّى كَادُوا يَرُدُّونِي»


Bukhari-3760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3760. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்.
நான் ஷாம் நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். அப்போது, ‘இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், ‘அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்துவிட்டதாக நம்புகிறேன்’ என்று சொன்னேன். அந்த முதியவர், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் கூஃபாவாசி’ என்று பதிலளித்தேன். அவர், ‘நபி(ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும், தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்வூத்) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்) உங்களிடையே இல்லையா? நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா) உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார். ‘உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) ‘வல் லய்லி’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறை வசனங்களை எப்படி ஓதினார்கள்?’ என்று மேலும் கேட்டார். நான், ‘வல் லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா வத் தகரி வல் உன்ஸா’ என்று (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

«اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»


Bukhari-3759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.143
3759. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், ‘உங்களில் நற் குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்’ என்று கூறினார்கள்.
மேலும், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 62


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا»

وَقَالَ: «إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ أَحْسَنَكُمْ أَخْلاَقًا»


Bukhari-3758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 அபூ ஹுதைஃபா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட சாலிம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.142
3758. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ‘அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்கள்.
Book : 62


ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ، مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»، قَالَ: لاَ أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ، أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ


Bukhari-3757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 25 கா-த் பின் வலீத் -ரலியல்லாஹு அன்ஹு – அவர்களின் சிறப்புகள்.140
3757. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
‘(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்’ என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள்.
Book : 62


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَعَى زَيْدًا، وَجَعْفَرًا، وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ، قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ، فَقَالَ «أَخَذَ الرَّايَةَ زَيْدٌ، فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، وَعَيْنَاهُ تَذْرِفَانِ حَتَّى أَخَذَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ»


Bukhari-3756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

(அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.138

3756. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, ‘இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஹிக்மத்’ என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.
Book : 62


ضَمَّنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِهِ، وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الحِكْمَةَ»

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، وَقَالَ: «عَلِّمْهُ الكِتَابَ»،

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ مِثْلَهُ،

وَالحِكْمَةُ: الإِصَابَةُ فِي غَيْرِ النُّبُوَّةِ


Next Page » « Previous Page