Category: புஹாரி

Bukhari

Bukhari-3755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3755. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார்.
பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் உங்களுக்காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனாவிலேயே) வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ்வுக்காக செயலாற்றவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :62


أَنَّ بِلاَلًا، قَالَ لِأَبِي بَكْرٍ: «إِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِنَفْسِكَ، فَأَمْسِكْنِي، وَإِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِلَّهِ، فَدَعْنِي وَعَمَلَ اللَّهِ»


Bukhari-3754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 அபூபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ் – ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.135 (பிலாலே!) சொர்க்கத்தில் உமது காலணிகளின் ஓசையை எனக்கு முன்பாக நான் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.136
3754. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி), ‘அபூ பக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்’ என்று சொல்வார்கள்.
Book : 62


«أَبُو بَكْرٍ سَيِّدُنَا، وَأَعْتَقَ سَيِّدَنَا يَعْنِي بِلاَلًا»


Bukhari-3753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3753. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்), ‘இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன்’ என்று கூறுகிறார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனைக்) கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் இருவரும் (ஹஸன் – ரலி – அவர்களும் ஹுசைன் -ரலி – அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்’ என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்’ எனக் கூறினார்கள்.
Book :62


سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، وَسَأَلَهُ عَنِ المُحْرِمِ؟ قَالَ: شُعْبَةُ أَحْسِبُهُ يَقْتُلُ الذُّبَابَ، فَقَالَ: أَهْلُ العِرَاقِ يَسْأَلُونَ عَنِ الذُّبَابِ، وَقَدْ قَتَلُوا ابْنَ ابْنَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا»


Bukhari-3752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3752. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை விட நபி(ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.
Book :62


«لَمْ يَكُنْ أَحَدٌ أَشْبَهَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الحَسَنِ بْنِ عَلِيٍّ»


Bukhari-3751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3751. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.
Book :62


«ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ»


Bukhari-3750

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3750. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்
அபூ பக்ர்(ரலி) ஹஸன்(ரலி) அவர்களைச் சுமந்தபடி, ‘என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி(ஸல்) அவர்களைத் தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை’ என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ(ரலி) (அதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
Book :62


رَأَيْتُ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَحَمَلَ الحَسَنَ وَهُوَ يَقُولُ: «بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ، لَيْسَ شَبِيهٌ بِعَلِيٍّ» وَعَلِيٌّ يَضْحَكُ


Bukhari-3749

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3749. பராஉ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்களின் மகன் ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!’ என்று பிரார்த்திக்கக் கண்டேன்.
Book :62


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالحَسَنُ بْنُ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ»


Bukhari-3748

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3748. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி-அவருக்கு சாந்தி உண்டாகட்டும்!) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.


மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தாரிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் தான், தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகம் ஒப்பானவர்களாய் இருந்தார்கள். ‘வஸ்மா’ எனும் ஒரு வகை மூலிகையால் தம் (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள்.

அத்தியாயம்: 62


أُتِيَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الحُسَيْنِ عَلَيْهِ السَّلاَمُ، فَجُعِلَ فِي طَسْتٍ، فَجَعَلَ يَنْكُتُ، وَقَالَ فِي حُسْنِهِ شَيْئًا،

فَقَالَ أَنَسٌ: «كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَخْضُوبًا بِالوَسْمَةِ»


Bukhari-3747

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3747. உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, ‘இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக’ என்று கூறினார்கள்.
Book :62


أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالحَسَنَ وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا» أَوْ كَمَا قَالَ


Bukhari-3746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்-முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.125

பாடம் : 22 ஹஸன் மற்றும் ஹுஸைன்- ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகியோரின் சிறப்புகள்.126

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக் கொண் டார்கள் என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.127

3746. அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி (ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, ‘இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான்’ என்று சொல்ல கேட்டேன்.
Book : 62


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى المِنْبَرِ وَالحَسَنُ إِلَى جَنْبِهِ، يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً، وَيَقُولُ: «ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»


Next Page » « Previous Page