Category: புஹாரி

Bukhari

Bukhari-3603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3603. இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) ‘விரைவில் (அன்சாரிகளான) உங்களை விட , பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :61


«سَتَكُونُ أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «تُؤَدُّونَ الحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ»


Bukhari-3602

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3602. இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு முதீஉ இப்னி அஸ்வத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

எனினும், இந்த அறிவிப்பில் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்), ‘தொழுகையில் ஒரு தொழுகை (அஸர்) உண்டு; ஒருவருக்கு அது தவறிவிடுமாயின் அது அவரின் மனைவி மக்களும் அவரின் செல்வமும் பறிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதாகும்’ என்னும் நபிவாசகத்தை அதிகப்படியாகக் கூறினார்கள்.
Book :61


«مِنَ الصَّلاَةِ صَلاَةٌ مَنْ فَاتَتْهُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»


Bukhari-3601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3601. ‘விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மெளனமாகி) அமர்ந்திருப்பவன்,  (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன்,  (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான்.

அதை அடைகிறவரை அது வீழ்த்தி அழித்து விடமுனையும். அப்போது புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும்.’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :61


«سَتَكُونُ فِتَنٌ القَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ القَائِمِ ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ، وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ»


Bukhari-3600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3600. அப்துல்லாஹ் இப்னு அபீ ஸஅஸஆ (ரஹ்) அறிவித்தார்.

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) என்னிடம், ‘நான் உங்களை ஆடுகளை விரும்பக் கூடியவராகவும் அதை வைத்துக் கொண்டு பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். எனவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங்கள்.

ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள் தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தம் மார்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள விரண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவன் மழைபொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவான்’ என்று சொன்னதை கேட்டேன்’ என்று கூறினார்கள்.
Book :61


قَالَ لِي: إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ، وَتَتَّخِذُهَا، فَأَصْلِحْهَا وَأَصْلِحْ رُعَامَهَا، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، تَكُونُ الغَنَمُ فِيهِ خَيْرَ مَالِ المُسْلِمِ، يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ، أَوْ سَعَفَ الجِبَالِ فِي مَوَاقِعِ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»


Bukhari-3599

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3599. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன்! எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய குழப்பங்கள் எல்லாம் (பூமிக்கு) அனுப்பப்பட்டிருக்கின்றன!’ என்று கூறினார்கள்.
Book :61


اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، وَمَاذَا أُنْزِلَ مِنَ الفِتَنِ»


Bukhari-3598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3598. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள்.

உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்து கொண்டு) இருக்க (இறைவனின் தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்! பாவங்கள் அதிகரித்துவிட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)’ என்று பதில் கூறினார்கள்.
Book :61


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ، وَمأْجُوجَ مِثْلُ هَذَا، وَحَلَّقَ بِإِصْبَعِهِ، وَبِالَّتِي تَلِيهَا» فَقَالَتْ زَيْنَبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»


Bukhari-3597

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3597. உஸாமா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக் கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?

உங்கள் வீடுகள் நெடுகிலும் மழைத் துளிகள் விழுமிடங்களில், குழப்பங்கள் விளையப் போவதை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.
Book :61


أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أُطُمٍ مِنَ الآطَامِ، فَقَالَ: «هَلْ تَرَوْنَ مَا أَرَى؟ إِنِّي أَرَى الفِتَنَ تَقَعُ خِلاَلَ بُيُوتِكُمْ مَوَاقِعَ القَطْرِ»


Bukhari-3596

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3596. உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தியதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள்.

பிறகு, மிம்பருக்குத் திரும்பி வந்து, ‘(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டி போடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 61


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى المَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى المِنْبَرِ فَقَالَ: «إِنِّي فَرَطُكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، إِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي قَدْ أُعْطِيتُ خَزَائِنَ مَفَاتِيحِ الأَرْضِ، وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ بَعْدِي أَنْ تُشْرِكُوا، وَلَكِنْ أَخَافُ أَنْ تَنَافَسُوا فِيهَا»


Bukhari-3595

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3595. அதீ இப்னு ஹாத்திம் (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ‘ஹிரா’வைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று கூறினார்கள். –

நான் என் மனத்திற்குள், ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று கேட்டுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்’ என்று கூறினார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தரக்காரரான) கிஸ்ரா இப்னு ஹுர்முஸா வெற்றுக் கொள்ளப்படுவார்

بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الفَاقَةَ، ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ، فَقَالَ: «يَا عَدِيُّ، هَلْ رَأَيْتَ الحِيرَةَ؟» قُلْتُ: لَمْ أَرَهَا، وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا، قَالَ «فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ، حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ، – قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا البِلاَدَ -، وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى»، قُلْتُ: كِسْرَى بْنِ هُرْمُزَ؟ قَالَ: ” كِسْرَى بْنِ هُرْمُزَ، وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلاَ يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ، وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ، وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، فَلَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ؟ فَيَقُولُ: بَلَى، فَيَقُولُ: أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ؟ فَيَقُولُ: بَلَى، فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلَّا جَهَنَّمَ، وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلاَ يَرَى إِلَّا جَهَنَّمَ ” قَالَ عَدِيٌّ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ» قَالَ عَدِيٌّ: فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ إِلَّا اللَّهَ ، وَكُنْتُ فِيمَنِ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ، لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو القَاسِمِ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3594

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3594. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் போருக்குச் செல்கிற காலம் ஒன்று வரும். அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று வினவப்படும். அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு அவர்கள் புனிதப் போர் புரிவார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்டவர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்’ என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
Book :61


يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَغْزُونَ، فَيُقَالُ لَهُمْ: فِيكُمْ مَنْ صَحِبَ الرَّسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُونَ نَعَمْ، فَيُفْتَحُ عَلَيْهِمْ، ثُمَّ يَغْزُونَ، فَيُقَالُ لَهُمْ هَلْ فِيكُمْ مَنْ صَحِبَ مَنْ صَحِبَ الرَّسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ نَعَمْ، فَيُفْتَحُ لَهُمْ


Next Page » « Previous Page