Category: புஹாரி

Bukhari

Bukhari-3593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3593. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, ‘முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு’ என்று கூறும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 61


«تُقَاتِلُكُمُ اليَهُودُ فَتُسَلَّطُونَ عَلَيْهِمْ، ثُمَّ يَقُولُ الحَجَرُ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي، فَاقْتُلْهُ»


Bukhari-3592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3592. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான செருப்புகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் போரிடுவீர்கள்.
என அம்ர் இப்னு தக்லிப் (ரலி) அறிவித்தார்.
Book :61


«بَيْنَ يَدَيِ السَّاعَةِ تُقَاتِلُونَ قَوْمًا يَنْتَعِلُونَ الشَّعَرَ، وَتُقَاتِلُونَ قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»


Bukhari-3591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3591. கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன். என் வாழ்நாளிலேயே அந்த மூன்றாண்டுகளில் ஆசைப்பட்டதை விட அதிகமாக நபி மொழிகளை நினைவில் வைக்க நான் வேறெப்போதும் ஆசைப்பட்டதில்லை’ என்று சொல்லிவிட்டு, தம் கையால் இப்படிச் சைகை செய்து, ‘நபி (ஸல்) அவர்கள், ‘உலக இறுதி நாள் வருவதற்கு முன்னால் நீங்கள் முடியாலான செருப்பு அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு போரிடுவீர்கள். அவர்கள் வெட்ட வெளியில் தோன்றி உங்களுடன் போராடுவார்கள்’ என்று கூற கேட்டேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்), ‘அவர்கள் பாலை வெளியில் வசிப்பவர்கள்’ என்று ஒரு முறை கூறினார்கள்.
Book :61


صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثَ سِنِينَ لَمْ أَكُنْ فِي سِنِيَّ أَحْرَصَ عَلَى أَنْ أَعِيَ الحَدِيثَ مِنِّي فِيهِنَّ، سَمِعْتُهُ يَقُولُ: وَقَالَ هَكَذَا بِيَدِهِ: «بَيْنَ يَدَيِ السَّاعَةِ تُقَاتِلُونَ قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ» وَهُوَ هَذَا البَارِزُ “، وَقَالَ سُفْيَانُ مَرَّةً وَهُمْ أَهْلُ البَازِرِ


Bukhari-3590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3590. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் ‘கூஸ்’ வாசிகளுடனும் ‘கிர்மான்’ வாசிகளுடனும் போரிடாதவரை உலக முடிவு நாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும், சப்பையான மூக்குகளும் சிறிய கண்களும் உடையவர்கள். அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட (அகன்ற) கேடயங்களைப் போன்றிருக்கும். அவர்கள் முடியாலான செருப்புகளை அணிந்திருப்பார்கள். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் யஹ்யா (ரஹ்) அவர்களைப் போன்றே மற்றவர்களும் இதே நபிமொழியை அப்துர் ரஸ்ஸாக் இப்னு ஹம்மாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.
Book :61


لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا خُوزًا، وَكَرْمَانَ مِنَ الأَعَاجِمِ حُمْرَ الوُجُوهِ، فُطْسَ الأُنُوفِ، صِغَارَ الأَعْيُنِ وُجُوهُهُمُ المَجَانُّ المُطْرَقَةُ، نِعَالُهُمُ الشَّعَرُ


Bukhari-3589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3589. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும்.

(3587, 3588, 3589) இந்த மூன்று ஹதீஸ்களையும் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :61


وَلَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ زَمَانٌ، لَأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَكُونَ لَهُ مِثْلُ أَهْلِهِ وَمَالِهِ»


Bukhari-3588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3588. இந்த ஆட்சியதிகாரத்தில், தாம் சிக்கிக் கொள்ளும் வரை அதை அதிகமாக வெறுப்பவர்களை மக்களில் சிறந்தவர்களாக நீங்கள் காண்பீர்கள்.

(குணங்கள் மற்றும் ஆற்றல்களைப் பொருத்த வரை) மக்கள் சுரங்கங்கள் (போன்றவர்கள்) ஆவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்.
Book :61


وَتَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّهُمْ كَرَاهِيَةً لِهَذَا الأَمْرِ حَتَّى يَقَعَ فِيهِ , وَالنَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ


Bukhari-3587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3587. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு நீங்கள் போரிடாத வரையிலும், சிறிய கண்களும், சிவந்த முகங்களும், சப்பை மூக்குகளும், தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற (அகலமான) முகங்களும் கொண்ட துருக்கியருடன் நீங்கள் போரிடாத வரையிலும் உலக முடிவு நாள் வராது.
Book :61


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَحَتَّى تُقَاتِلُوا التُّرْكَ، صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ


Bukhari-3586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3586. ஹுதைஃபா (ரலி) அறிவித்தார்.

உமர் இப்னு கத்தாப் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (இனி தலை தூக்கவிருக்கும் ஃபித்னா) குழப்பத்தைப் பற்றிச் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறவர் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நான், ‘நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்’ என்று சொன்னேன். உமர் (ரலி), ‘அதைக் கூறுங்கள், நீங்கள் தான் (நபி – ஸல் – அவர்களிடம்) துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்’ என்று கூறினார்கள்.

நான், ‘ஒரு மனிதன் தன் குடும்பத்தினர் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்), தன்னுடைய செல்வம் விஷயத்தில் (அது இறை வழிப்பாட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலமும்,) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்’ என பதில் கூறினேன்.

உமர் (ரலி), ‘நான் (‘சோதனை’ என்னும் பொருள் கெண்ட ஃபித்னாவான) இதைக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபி – ஸல் – அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட

أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الفِتْنَةِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا أَحْفَظُ كَمَا قَالَ، قَالَ: هَاتِ، إِنَّكَ لَجَرِيءٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلاَةُ، وَالصَّدَقَةُ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ»، قَالَ: لَيْسَتْ هَذِهِ، وَلَكِنِ الَّتِي تَمُوجُ كَمَوْجِ البَحْرِ، قَالَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، لاَ بَأْسَ عَلَيْكَ مِنْهَا، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا، قَالَ: يُفْتَحُ البَابُ أَوْ يُكْسَرُ؟ قَالَ: لاَ، بَلْ يُكْسَرُ، قَالَ: ذَاكَ أَحْرَى أَنْ لاَ يُغْلَقَ، قُلْنَا: عَلِمَ عُمَرُ البَابَ؟ قَالَ: نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ، فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ، وَأَمَرْنَا مَسْرُوقًا فَسَأَلَهُ فَقَالَ: مَنِ البَابُ؟، قَالَ: عُمَرُ


Bukhari-3585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

(நபி – ஸல் – அவர்களின்) பள்ளிவாசலுக்கு பேரீச்ச மரத்தின் அடித்தண்டுகளை (தூண் கழிகளாகப்) பயன்படுத்திக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது அவற்றில் ஒன்றின் மீது சாய்ந்து கொண்டு நிற்பது வழக்கம்.

அவர்களுக்காக ஓர் உரை மேடை (மிம்பர்) தயாரிக்கப்பட்டபோது அதன் மீது அவர்கள் (உரை நிகழ்த்திட) நின்றார்கள். அப்போது அது, (பத்து மாத) சினை ஒட்டகத்தைப் போன்று முனகுவதை நாங்கள் செவியுற்றோம். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (இறங்கி) வந்து தம் கரத்தை அதன் மீது (அமைதிப்படுத்துவதற்காக) வைத்தார்கள். உடனே, அது அமைதியடைந்தது.
Book :61


«كَانَ المَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ مِنْ نَخْلٍ، فَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا، فَلَمَّا صُنِعَ لَهُ المِنْبَرُ وَكَانَ عَلَيْهِ، فَسَمِعْنَا لِذَلِكَ الجِذْعِ صَوْتًا كَصَوْتِ العِشَارِ، حَتَّى جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا فَسَكَنَتْ»


Bukhari-3584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3584. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்… அல்லது பேரீச்ச மரத்தின்…. (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி… அல்லது ஓர் அன்சாரித் தோழர்.., ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)’ என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள்.

ஜும்ஆ நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் தேம்பிய (படி அமைதியாகிவிட்ட)து. நபி (ஸல்) அவர்கள், ‘தன் மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (‘இப்போது நம் மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த்தப்படுவதில்லையே’ என்று ஏங்கி) இது அழுது கொண்டிருந்தது’ என்று கூறினார்கள்.
Book :61


كَانَ يَقُومُ يَوْمَ الجُمُعَةِ إِلَى شَجَرَةٍ أَوْ نَخْلَةٍ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، أَوْ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نَجْعَلُ لَكَ مِنْبَرًا؟ قَالَ: «إِنْ شِئْتُمْ»، فَجَعَلُوا لَهُ مِنْبَرًا، فَلَمَّا كَانَ يَوْمَ الجُمُعَةِ دُفِعَ إِلَى المِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ، ثُمَّ نَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُ إِلَيْهِ، تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّنُ. قَالَ: «كَانَتْ تَبْكِي عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ عِنْدَهَا»


Next Page » « Previous Page