Category: புஹாரி

Bukhari

Bukhari-3492

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3492. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் – அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் – எனக்கு அறிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப்பட்ட பாத்திரங்களையும் (பயன்படுதத வேண்டாமென்று) தடைவிதித்தார்கள்.

நான் அவரிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்’ என்று கூறினார்கள்.
Book :61


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالمُزَفَّتِ»
وَقُلْتُ لَهَا: أَخْبِرِينِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ كَانَ مِنْ مُضَرَ كَانَ؟ قَالَتْ: «فَمِمَّنْ كَانَ إِلَّا مِنْ مُضَرَ كَانَ مِنْ وَلَدِ النَّضْرِ بْنِ كِنَانَةَ»


Bukhari-3491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3491. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், ‘நபி(ஸல்) அவர்கள் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டதற்கு,

‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :61


قُلْتُ لَهَا: ” أَرَأَيْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَانَ مِنْ مُضَرَ؟ قَالَتْ: فَمِمَّنْ كَانَ إِلَّا مِنْ مُضَرَ، مِنْ بَنِي النَّضْرِ بْنِ كِنَانَةَ


Bukhari-3490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3490. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அவர்களில் இறையச்சமுடையவரே’ என்று பதிலளித்தார்கள்.

மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’ என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’ என்று கூறினார்கள்.
Book :61


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ»


Bukhari-3489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Bukhari-3488

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3488. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்

முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றிய படி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இதை (போலி முடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள் இதைப் ‘பொய்யானது’ என்று கூறினார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.

இந்த நபிமொழி வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60


قَدِمَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ المَدِينَةَ آخِرَ قَدْمَةٍ، قَدِمَهَا فَخَطَبَنَا، فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ، فَقَالَ: مَا كُنْتُ أُرَى أَنَّ أَحَدًا يَفْعَلُ هَذَا غَيْرَ اليَهُودِ، «وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّاهُ الزُّورَ يَعْنِي الوِصَالَ فِي الشَّعَرِ»


Bukhari-3487

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3487. ஒவ்வொரு ஏழு நாளிலும் தன் தலையையும் உடலையும் கழுவுகிற ஒருநாள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். .
Book :60


عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ، يَوْمٌ يَغْسِلُ رَأْسَهُ وَجَسَدَهُ


Bukhari-3486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும்.

எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ، يَوْمَ القِيَامَةِ بَيْدَ كُلِّ أُمَّةٍ أُوتُوا الكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ، فَهَذَا اليَوْمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ، فَغَدًا لِلْيَهُودِ، وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى»


Bukhari-3485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3485. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الخُيَلاَءِ، خُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ القِيَامَةِ» تَابَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ الزُّهْرِيِّ


Bukhari-3484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்த (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்’ என்பதும் .
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ»


Bukhari-3483

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3483. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்’ என்பதும். என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ»


Next Page » « Previous Page