Category: புஹாரி

Bukhari

Bukhari-7337

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7337. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உமர்(ரலி) அவர்கள் கூற கேட்டுள்ளேன்.66

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.

Book :96


«سَمِعْتُ عُمَرَ عَلَى مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-7336

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7336. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத்துல் வதாஉ’ மலைக்குன்று வரையாக இருந்தது. மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஸனியத்துல் வதா’ மலைக்குன்றிலிருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல் வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில். பங்கெடுத்தவர்களில் ஒருவனாயிருந்தேன்.65

Book :96


«سَابَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الخَيْلِ، فَأُرْسِلَتِ الَّتِي ضُمِّرَتْ مِنْهَا، وَأَمَدُهَا إِلَى الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَالَّتِي لَمْ تُضَمَّرْ أَمَدُهَا ثَنِيَّةُ الوَدَاعِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ» وَأَنَّ عَبْدَ اللَّهِ كَانَ فِيمَنْ سَابَقَ


Bukhari-7335

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7335. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) என்னுடைய (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.64

Book :96


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»


Bukhari-7334

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7334. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கிப்லா திசையிலுள்ள சுவருக்கும் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே ஆடு ஒன்று புகுந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது.63

Book :96


«أَنَّهُ كَانَ بَيْنَ جِدَارِ المَسْجِدِ مِمَّا يَلِي القِبْلَةَ وَبَيْنَ المِنْبَرِ مَمَرُّ الشَّاةِ»


Bukhari-7333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7333. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, ‘இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்’ என்றார்கள்.62

‘இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம்’ என்ற இதே நபிமொழியை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

Book :96


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ، فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا» تَابَعَهُ سَهْلٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُحُدٍ


Bukhari-7332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7332. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் விபசாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் (தீர்ப்புக்காக) அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட அவ்வாறே அவ்விருவருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் சடலங்கள் (ஜனாஸாக்கள்) வைக்கப்படும் இடத்திற்கு அருகே கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.61

Book :96


«أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا، قَرِيبًا مِنْ حَيْثُ تُوضَعُ الجَنَائِزُ عِنْدَ المَسْجِدِ»


Bukhari-7331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7331. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! மதீனாவாசிகளுக்கு அவர்களின் முகத்தலளவையில் வளத்தை அருள்வாயாக! அவர்களின் ‘ஸாஉ’ மற்றும் ‘முத்'(து) ஆகிய அளவைகளிலும் அவர்களுக்கு வளத்தை அருள்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.60

Book :96


«اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ» يَعْنِي أَهْلَ المَدِينَةِ


Bukhari-7330

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7330. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தின் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1ஃ3) கொண்டதாக இருந்தது. பின்னர் (உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் தான்) அதன் அளவு அதிகமாக்கப்பட்டது.59

Book :96


«كَانَ الصَّاعُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدًّا وَثُلُثًا بِمُدِّكُمُ اليَوْمَ، وَقَدْ زِيدَ فِيهِ» سَمِعَ القَاسِمُ بْنُ مَالِكٍ الجُعَيْدَ


Bukhari-7328

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7328. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘என் தோழர்கள் (முஹம்மத்(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்டு ஆளனுப்பினார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், ‘சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)’ என்றார்கள். ஆனால், (முற்ற தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், ‘முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறிவிடுவார்கள்.

Book :96


أَنَّ عُمَرَ أَرْسَلَ إِلَى عَائِشَةَ: ائْذَنِي لِي أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَيَّ، فَقَالَتْ: «إِي وَاللَّهِ»، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا أَرْسَلَ إِلَيْهَا مِنَ الصَّحَابَةِ، قَالَتْ: «لاَ وَاللَّهِ، لاَ أُوثِرُهُمْ بِأَحَدٍ أَبَدًا»


Bukhari-7327

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7327. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘என்னை (நான் இறந்த பின்) என் தோழிகளுடன் (-நபியவர்களின் இதர துணைவியருடன்) அடக்கம் செய்யுங்கள். நபி(ஸல்) அவர்களுடன் (என்) வீட்டில் அடக்கம் செய்யாதீர்கள். ஏனெனில், நான் (மற்றவர்களால் என் தோழியரை விட) உயர்வாகக் கருதப்படுவதை விரும்பவில்லை’ என்றார்கள்.

Book :96


قَالَتْ لِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ: «ادْفِنِّي مَعَ صَوَاحِبِي، وَلاَ تَدْفِنِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي البَيْتِ، فَإِنِّي أَكْرَهُ أَنْ أُزَكَّى»


Next Page » « Previous Page