Category: புஹாரி

Bukhari

Bukhari-3291

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3291. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (திரும்பிப் பார்க்கும் அந்த நேரம்) உங்கள் தொழுகையிலிருந்து ஷைத்தான் திருட்டுத்தனமாகப் பறித்துக் கொள்வதாகும்’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التِفَاتِ الرَّجُلِ فِي الصَّلاَةِ، فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ»


Bukhari-3290

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3290. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நடந்தபோது இணைவைப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே, இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்’ என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள். அப்போது அங்கு தமக்கருகேயிருந்த தம் தந்தை யமான்(ரலி) (முன்னணிப் படையினரிடம்) சிக்கியதை ஹுதைஃபா(ரலி) பார்த்துவிட்டு,

‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!’ என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரைவிட்டு வைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கிக்) கொன்றுவிட்டார்கள். ஹுதைஃபா(ரலி),

‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.
‘ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது’ என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.
Book :59


لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ المُشْرِكُونَ، فَصَاحَ إِبْلِيسُ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ اليَمَانِ، فَقَالَ: أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي، فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ: حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ، قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ


Bukhari-3289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

Book :59


التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ: هَا، ضَحِكَ الشَّيْطَانُ


Bukhari-3288

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன.

பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும் போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தன் வாயை வைத்து (தாம் ஒட்டுக் கேட்டவற்றை இரகசியமாகக்) கூறி விடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்து கொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்து விடுகிறார்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59


المَلاَئِكَةُ تَتَحَدَّثُ فِي العَنَانِ – وَالعَنَانُ: الغَمَامُ -، بِالأَمْرِ يَكُونُ فِي الأَرْضِ، فَتَسْمَعُ الشَّيَاطِينُ الكَلِمَةَ، فَتَقُرُّهَا فِي أُذُنِ الكَاهِنِ كَمَا تُقَرُّ القَارُورَةُ، فَيَزِيدُونَ مَعَهَا مِائَةَ كَذِبَةٍ


Bukhari-3287

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3287. அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?’ என்று கேட்டார்’ எனச் சொன்னார்கள்.

முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), ‘அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்’ என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்’ என்று கூறினார்கள்.
Book :59


قَدِمْتُ الشَّأْمَ، فَقُلْتُ: مَنْ هَا هُنَا؟ قَالُوا أَبُو الدَّرْدَاءِ، قَالَ: «أَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، وَقَالَ: الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي عَمَّارًا


Bukhari-3286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3286. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்வை தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«كُلُّ بَنِي آدَمَ يَطْعُنُ الشَّيْطَانُ فِي جَنْبَيْهِ بِإِصْبَعِهِ حِينَ يُولَدُ، غَيْرَ عِيسَى ابْنِ مَرْيَمَ، ذَهَبَ يَطْعُنُ فَطَعَنَ فِي الحِجَابِ»


Bukhari-3285

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3285. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் சத்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடி விடுகிறான். பாங்கு சொல்லி முடித்து விடும் போது திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் திரும்பி ஒடி விடுகிறான். இகாமத் சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான்.

(தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப் பார்’ என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா, நான்கு ரக்அத்துகள் தொழுதோமா என்று தெரியாமல் போய் விடுகிறது.

மூன்று ரக்அத்துக்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால் அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


إِذَا نُودِيَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ الإِنْسَانِ وَقَلْبِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا وَكَذَا، حَتَّى لاَ يَدْرِيَ أَثَلاَثًا صَلَّى أَمْ أَرْبَعًا، فَإِذَا لَمْ يَدْرِ ثَلاَثًا صَلَّى أَوْ أَرْبَعًا، سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ


Bukhari-3284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3284. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகையைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள்ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


أَنَّهُ صَلَّى صَلاَةً، فَقَالَ «إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي، فَشَدَّ عَلَيَّ يَقْطَعُ الصَّلاَةَ عَلَيَّ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَذَكَرَهُ»


Bukhari-3283

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3283. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகியிருக்கச் செய். எனக்கு நீ அளிக்கிற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்’ என்று பிரார்த்தித்தால் அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைக்க முடியாது. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

வேறொரு வழியாகவும் இதே போன்ற நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :59


لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ: جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنِي، فَإِنْ كَانَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ، وَلَمْ يُسَلَّطْ عَلَيْهِ


Bukhari-3282

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3282. சுலைமான் இப்னு சுரத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரின் தொண்டை நரம்பு புடைத்தது.

உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்,

‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் போருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்’ என்று கூறினார்கள்.

எனவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்’ எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், ‘எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டார்.
Book :59


كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ ” فَقَالُوا لَهُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَقَالَ: وَهَلْ بِي جُنُونٌ


Next Page » « Previous Page