Category: புஹாரி

Bukhari

Bukhari-3301

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3301. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை மறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (நெருப்பை வணங்கும் மஜூஸிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களிடம் (அடக்கமும் கம்பீரமும் கலந்த) அமைதி காணப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«رَأْسُ الكُفْرِ نَحْوَ المَشْرِقِ، وَالفَخْرُ وَالخُيَلاَءُ  فِي أَهْلِ الخَيْلِ وَالإِبِلِ، وَالفَدَّادِينَ أَهْلِ الوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الغَنَمِ»


Bukhari-3300

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவன் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடு தான்.

3300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விரைவில்) மனிதன் தன் மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் தன் ஆடுகளை (தன்னுடன்) ஓட்டிக் கொண்டு விரண்டோடுவான்.

(அப்போது) அந்த ஆடுகள் தான் (அவனது) செல்வங்களில் சிறந்ததாக இருக்கும். இதை அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                                                                                  Book : 59


«يُوشِكَ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الرَّجُلِ غَنَمٌ، يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»


Bukhari-3299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3299. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

…அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்ற போது) என்னை அபூ லுபாபா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் பார்த்தார்கள்.
Book :59


 فَرَآنِي أَبُو لُبَابَةَ، أَوْ زَيْدُ بْنُ الخَطَّابِ


Bukhari-3298

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3298. 

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்’ என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்ல வேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


قَالَ عَبْدُ اللَّهِ: فَبَيْنَا أَنَا أُطَارِدُ حَيَّةً لِأَقْتُلَهَا، فَنَادَانِي أَبُو لُبَابَةَ: لاَ تَقْتُلْهَا، فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ بِقَتْلِ الحَيَّاتِ قَالَ: إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَاتِ البُيُوتِ، وَهِيَ العَوَامِرُ


Bukhari-3297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நினைவு கூருங்கள்: ஒரு முறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உங்கள் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்த போது தங்களுக்குள் மௌனமாய் இருங்கள் என்று அவை பேசிக் கொண்டன.

பின்னர் அது ஓதி முடிக்கப்பட்ட போது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக் கூடியவர்களாய் திரும்பிச் சென்று, எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழி காட்டுகின்றது.

எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும், அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்க வில்லை. அல்லாஹ்விடமிருந்து

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى المِنْبَرِ يَقُولُ: «اقْتُلُوا الحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ البَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الحَبَلَ»


Bukhari-3296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

ஜின்கள் பற்றியும், அவர்களுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தண்டனை பற்றியும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: காண்க இறை வசனங்கள்: 1)6:130 2) 7:27 3) 72:13              4) 37:158 5) 36:75

3296. அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள்.

ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றன என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன் என்று சொன்னார்கள்.                                                                                Book : 59


إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»

قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3295

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ»


Bukhari-3294

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3294. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள்.

உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர்(ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர்(ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு

اسْتَأْذَنَ عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نِسَاءٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ قُمْنَ يَبْتَدِرْنَ الحِجَابَ، فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ، فَقَالَ عُمَرُ: أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللَّاتِي كُنَّ عِنْدِي، فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الحِجَابَ» قَالَ عُمَرُ: فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ كُنْتَ أَحَقَّ أَنْ يَهَبْنَ، ثُمَّ قَالَ: أَيْ عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْنَ: نَعَمْ، أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا لَقِيَكَ الشَّيْطَانُ قَطُّ سَالِكًا فَجًّا إِلَّا سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ»


Bukhari-3293

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்) எனும்

“லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும்.

மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும்.

மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக (ஓதி) நற்செயல் புரிந்தாலே தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 59


مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ


Bukhari-3292

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார்.
Book :59


«الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالحُلُمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ حُلُمًا يَخَافُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»


Next Page » « Previous Page