Category: புஹாரி

Bukhari

Bukhari-3311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3311. (இந்த நிலையில்) அபூ லுபாபா(ரலி) அவர்களை சந்தித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மெல்லிய வெண்ணிறப் பாம்புகளைக் கொல்லாதீர்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர.

ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தையைச் சிதைத்துவிடும்; பார்வையைப் போக்கிவிடும். எனவே, அவற்றைக் கொன்றுவிடுங்கள்’ எனக் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.
Book :59


فَلَقِيتُ أَبَا لُبَابَةَ، فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَقْتُلُوا الجِنَّانَ، إِلَّا كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الوَلَدَ، وَيُذْهِبُ البَصَرَ فَاقْتُلُوهُ»


Bukhari-3310

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3310. இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்று வந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்,

நபி (ஸல்) அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். உடனே, அந்தப் பாம்பு எங்கேயிருக்கிறது என்று பாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். மக்கள் (தேடிப் பார்த்து அதைக்) கண்டு பிடித்தார்கள். நபி (ஸல்) அவரகள், அதைக் கொன்று விடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் தான் நான் அவற்றைக் கொன்று வந்தேன்.
Book :59


أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقْتُلُ الحَيَّاتِ ثُمَّ نَهَى، قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدَمَ حَائِطًا لَهُ، فَوَجَدَ فِيهِ سِلْخَ حَيَّةٍ، فَقَالَ: «انْظُرُوا أَيْنَ هُوَ» فَنَظَرُوا، فَقَالَ: «اقْتُلُوهُ» فَكُنْتُ أَقْتُلُهَا لِذَلِكَ


Bukhari-3309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3309. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அது கண் பார்வையைப் போக்கிவிடும். கருவைச் சிதைந்து போகச் செய்துவிடும் என்று கூறினார்கள்
Book :59


أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الأَبْتَرِ وَقَالَ: «إِنَّهُ يُصِيبُ البَصَرَ، وَيُذْهِبُ الحَبَلَ»


Bukhari-3308

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையை அவித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) இதையே உஸாமா (ரஹ்) வழியாக அறிவித்தார்கள்.
Book :59


«اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ البَصَرَ، وَيُصِيبُ الحَبَلَ»


Bukhari-3307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3307. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
Book :59


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ»


Bukhari-3306

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3306. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘பல்லி தீங்கிழைக்கக் கூடியது’ என்றார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.

நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
Book :59


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِلْوَزَغِ الفُوَيْسِقُ» وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِهِ


Bukhari-3305

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.


இதை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?’ என்று வினவினார்கள். நான், ‘ஆம் (கேட்டேன்)’ என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)’ என்று கேட்டேன்.

அத்தியாயம்: 59


«فُقِدَتْ أُمَّةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ لاَ يُدْرَى مَا فَعَلَتْ، وَإِنِّي لاَ أُرَاهَا إِلَّا الفَارَ، إِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الإِبِلِ لَمْ تَشْرَبْ، وَإِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الشَّاءِ شَرِبَتْ»

فَحَدَّثْتُ كَعْبًا فَقَالَ: أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ لِي مِرَارًا، فَقُلْتُ: أَفَأَقْرَأُ التَّوْرَاةَ؟


Bukhari-3304

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3304. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன.

இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்:

அதாவு(ரஹ்) எனக்கு அறிவித்ததைப் போன்ற இதே நபிமொழியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாக அம்ர் இப்னு தீனார்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். ஆனால், அவர்கள் ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ என்னும் வாக்கியத்தை மட்டும் (தம் அறிவிப்பில்) சொல்லவில்லை.
Book :59


«إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ، أَوْ أَمْسَيْتُمْ، فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا»

قَالَ: وَأَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ  نَحْوَ مَا أَخْبَرَنِي عَطَاءٌ، وَلَمْ يَذْكُرْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ


Bukhari-3303

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3303. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவேதான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவேதான் கத்துகிறது.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهُ رَأَى شَيْطَانًا»


Bukhari-3302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3302. உக்பா இப்னு அம்ர் அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘இறை நம்பிக்கை, அதோ அங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.

அறிந்து கொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். குழப்பங்கள் தலை தூக்கும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தினரிடையே அவை தோன்றும்’ என்றார்கள்.
Book :59


أَشَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ نَحْوَ اليَمَنِ فَقَالَ «الإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلاَ إِنَّ القَسْوَةَ وَغِلَظَ القُلُوبِ فِي الفَدَّادِينَ، عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ، وَمُضَرَ»


Next Page » « Previous Page