Category: புஹாரி

Bukhari

Bukhari-3321

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3321. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது.

அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ: كَادَ يَقْتُلُهُ العَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ


Bukhari-3320

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً»


Bukhari-3319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3319. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)’ என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.
Book : 59


نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ، فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: فَهَلَّا نَمْلَةً وَاحِدَةً


Bukhari-3318

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3318. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :59


«دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ»


Bukhari-3317

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3317. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதருடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, ‘தொடர்ந்து அனுப்பப்படும் காற்றுகளின் மீது சத்தியமாக!’ என்னும் அத்தியாயம் (77) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து (அவர்கள் ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைக் போல் அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்றார்கள்.

வேறொரு வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘நாங்கள் அந்த அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து புத்தம் புதியதாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறினார்கள்.

இதை அறிவிப்பாளர் இஸ்ராயீல்(ரஹ்) அவர்களைப் போன்றே அபூ அவானா(ரஹ்) அவர்களும் முகீரா இப்னு மிக்ஸம்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்திருக்கிறார்கள்.
Book :59


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، فَنَزَلَتْ {وَالمُرْسَلاَتِ عُرْفًا} [المرسلات: 1] فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا، فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا» وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ، قَالَ: وَإِنَّا لَنَتَلَقَّاهَا  مِنْ فِيهِ رَطْبَةً


Bukhari-3316

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :59


«خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ العِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا المَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»،

قَالَ: ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ، عَنْ عَطَاءٍ «فَإِنَّ لِلشَّيَاطِينِ»


Bukhari-3315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3315. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து பிராணிகள் எத்தகையவையெனில் அவற்றை இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமெதுவும் இல்லை. தேள், எலி, வெறி நாய், காக்கை, பருந்து ஆகியன தாம் அவை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59


خَمْسٌ مِنَ الدَّوَابِّ، مَنْ قَتَلَهُنَّ وَهُوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ: العَقْرَبُ، وَالفَأْرَةُ، وَالكَلْبُ العَقُورُ، وَالغُرَابُ، وَالحِدَأَةُ


Bukhari-3314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்.ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது என்னும் நபிமொழியும்,

ஐந்து பிராணிகள் தீங்கிழைக்கக் கூடியவை. அவற்றை ஹரமிலும் கொல்லலாம் என்னும் நபிமொழியும்.

3314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (பிராணிகள்) எத்தகையவையெனில் அவற்றை ‘ஹரம்’ எனும் பனித எல்லைக்குள் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை. எலி, தேள், பருந்து, காக்கை, வெறி, நாய் ஆகியன தாம் அவை. என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59


خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الحَرَمِ: الفَأْرَةُ، وَالعَقْرَبُ، وَالحُدَيَّا، وَالغُرَابُ، وَالكَلْبُ العَقُورُ


Bukhari-3313

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3313. அப்போது அபூ லுபாபா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்களிடம்,

‘நபி(ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்’ என்று தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர்(ரலி) அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.
Book :59


فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ البُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا»


Bukhari-3312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3312. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள்.
Book : 59


أَنَّهُ كَانَ يَقْتُلُ الحَيَّاتِ


Next Page » « Previous Page