Category: புஹாரி

Bukhari

Bukhari-7316

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அல்லாஹ் அருளியுள்ள சட்டங்களுக்கேற்ப நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலீஃபாக்கள் ஆலோசனை செய்தது மற்றும் அறிஞர்களிடம் கேள்வி கேட்டது தொடர்பாகவும் வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் அருளியுள்ள(வேதத்தின்)படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அக்கிரமக் காரர்கள் (5:45). கல்வி ஞானம் உடைய ஒருவர் தமது ஞானத்திற்கேற்ப தீர்ப்பளித்து, அதை (மக்களுக்கு)க் கற்பித்து,சுயமான கருத்தை வ-ந்து திணிக்காத போது நபி (ஸல்) அவர்களின் பாராட்டுக்குரியவராகிறார்.

7316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்கு) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (பிறருக்கு) அதைக் கற்பித்துக் கொண்டும் இருத்தல்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.48

Book : 96


لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَآخَرُ آتَاهُ اللَّهُ حِكْمَةً، فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا


Bukhari-7315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7315. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்’ (எனக் கூறிவிட்டு) ‘உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (நிறைவேற்றுவேன்)’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட்ட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்’ என்றார்கள்.47

Book :96


أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَمَاتَتْ قَبْلَ أَنْ تَحُجَّ، أَفَأَحُجَّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ، حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ؟»، قَالَتْ: نَعَمْ، فَقَالَ: «اقْضُوا اللَّهَ الَّذِي لَهُ، فَإِنَّ اللَّهَ أَحَقُّ بِالوَفَاءِ»


Bukhari-7314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 விளங்கவேண்டிய ஒன்றை விளங்கியதோடு ஒப்பிடுவது. கேள்வி கேட்டவர் விளங்கிக்கொள் வதற்காக அந்த இரண்டின் நிலையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள்.45

7314. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ‘(வெள்ளை நிறுத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்’ என்றார். அதற்கு அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆம்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அவற்றின் நிறம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்றார். ‘அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன’ என்று பதிலளித்தார். ‘(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், இறைத்தூதர் அவர்களே!’

أَنَّ أَعْرَابِيًّا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ، وَإِنِّي أَنْكَرْتُهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟»، قَالَ: حُمْرٌ، قَالَ: «هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟»، قَالَ: إِنَّ فِيهَا لَوُرْقًا، قَالَ: «فَأَنَّى تُرَى ذَلِكَ جَاءَهَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، عِرْقٌ نَزَعَهَا، قَالَ: «وَلَعَلَّ هَذَا عِرْقٌ نَزَعَهُ»، وَلَمْ يُرَخِّصْ لَهُ فِي الِانْتِفَاءِ مِنْهُ


Bukhari-7313

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 …அல்லது உங்களைப் பல்வேறு குழுக்க ளாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன் எனும் (6:65 ஆவது) இறைவசனம்.

7313. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுககு அருளப்பெற்றபோது ‘உங்களுக்கு மேலிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘(இறைவா!) உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘உங்கள் கால்களின் கீழிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்றார்கள். ‘அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறு சிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’

لَمَّا نَزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {قُلْ هُوَ القَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} [الأنعام: 65]، قَالَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} [الأنعام: 65] قَالَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، فَلَمَّا نَزَلَتْ: {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} [الأنعام: 65] قَالَ: «هَاتَانِ أَهْوَنُ، – أَوْ أَيْسَرُ -»


Bukhari-7312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7312. முஆவியா(ரலி) அவர்கள் தங்களின் உரையில் அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான். இந்த சமுதாயத்தின் நிலை (சத்திய மார்க்கத்தின்படி) செம்மையானதாகவே இருக்கும் ‘மறுமை நாள் வரும்வரை’ அல்லது ‘அல்லாஹ்வின் கட்டளை (உலக முடிவு நாள்) வரும்வரை’ என்று சொல்ல கேட்டேன்.

இதை ஹுமைத்(ரஹ்) அறிவித்தார்.43

Book :96


مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ، وَلَنْ يَزَالَ أَمْرُ هَذِهِ الأُمَّةِ مُسْتَقِيمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ: حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ


Bukhari-7311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. (புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:) அவர்கள்தாம் அறிஞர்(பெருமக்)கள்.

7311. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும்.

இதை முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.42

Book : 96


«لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»


Bukhari-7310

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அல்லாஹ் தமக்குக் கற்பித்ததையே போதித்தார்களே தவிர, சொந்தக் கருத்தையோ கணிப்பையோ போதிக்கவில்லை.

7310. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக

جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ، فَقَالَ: «اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا»، فَاجْتَمَعْنَ، فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلاَثَةً، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ»، فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: يَا رَسُولَ اللَّهِ، أَوِ اثْنَيْنِ؟ قَالَ: فَأَعَادَتْهَا مَرَّتَيْنِ، ثُمَّ قَالَ: «وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ»


Bukhari-7309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறாத ஒரு விஷயம் குறித்துக் கேள்வி கேட்கப் பட்டால் எனக்குத் தெரியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்; அல்லது வேத அறிவிப்பு அருளப்பெறும்வரை எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். அவர்கள் (ஒரு போதும்) தமது சொந்தக் கருத்தையோ கணிப்பையோ கூறியதில்லை. அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர் களுக்கிடையே நீங்கள் தீர்ப்பளிப்பதற்காகவே உண்மையான இந்த வேதத்தை உங்களுக்கு நாம் அருளினோம் (4:105). நபி (ஸல்) அவர்களிடம் உயிர்(ரூஹ்) குறித்து கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அது பற்றிய வசனம் அருளப்பெறும் வரை (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார்கள்.39

7309. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நோயுற்றிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நான் மூர்ச்சையடைந்து விட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்து, பின்னர் தாம் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரை என் மீது

مَرِضْتُ فَجَاءَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي ، وَأَبُو بَكْرٍ، وَهُمَا مَاشِيَانِ فَأَتَانِي وَقَدْ أُغْمِيَ عَلَيَّ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَبَّ وَضُوءَهُ عَلَيَّ، فَأَفَقْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ فَقُلْتُ: أَيْ رَسُولَ اللَّهِ – كَيْفَ أَقْضِي فِي مَالِي؟ – كَيْفَ أَصْنَعُ فِي مَالِي؟ – قَالَ: فَمَا أَجَابَنِي بِشَيْءٍ حَتَّى نَزَلَتْ: «آيَةُ المِيرَاثِ»


Bukhari-7307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 (அடிப்படை ஆதாரங்களுக்கு மாறான) சொந்தக் கருத்தும் வ-ந்து திணிக்கப்படும் கணிப்பும் இழிவானவை ஆகும்.36 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எதைப் பற்றி உங்களுக்கு(த் தீர்க்கமான) ஞானம் இல்லையோ அதைப் பற்றிப் பேச வேண்டாம் (17:36). (நூஹே!) நீங்கள் அறியாதவற்றைப் பற்றி என்னிடம் (துருவிக்) கேட்காதீர்கள் (11:46).

7307. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்’ என்று கூறக் கேட்டேன்.

حَجَّ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ لاَ يَنْزِعُ العِلْمَ بَعْدَ أَنْ أَعْطَاكُمُوهُ انْتِزَاعًا، وَلَكِنْ يَنْتَزِعُهُ مِنْهُمْ مَعَ قَبْضِ العُلَمَاءِ بِعِلْمِهِمْ، فَيَبْقَى نَاسٌ جُهَّالٌ، يُسْتَفْتَوْنَ فَيُفْتُونَ بِرَأْيِهِمْ، فَيُضِلُّونَ وَيَضِلُّونَ»، فَحَدَّثْتُ بِهِ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو حَجَّ بَعْدُ فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي انْطَلِقْ إِلَى عَبْدِ اللَّهِ فَاسْتَثْبِتْ لِي مِنْهُ الَّذِي حَدَّثْتَنِي عَنْهُ، فَجِئْتُهُ فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ كَنَحْوِ مَا حَدَّثَنِي، فَأَتَيْتُ عَائِشَةَ فَأَخْبَرْتُهَا فَعَجِبَتْ فَقَالَتْ: وَاللَّهِ لَقَدْ حَفِظَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو