Category: புஹாரி

Bukhari

Bukhari-2875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

பெண்களின் அறப்போர்.

2875. இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா (ரலி) கூறினார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப்போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வது தான்’ என்று கூறினார்கள்.
Book : 56


اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الجِهَادِ، فَقَالَ: «جِهَادُكُنَّ الحَجُّ»


Bukhari-2874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2874. பராஉ(ரலி) அறிவித்தார்.

என்னிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின்வாங்கிச் சென்று விட்டீர்களே?’ என்று கேட்டார். நான், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஆனால், அவசர புத்தியுள்ள மக்கள் தான் பின்வாங்கிச் சென்றார்கள்.

எனவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.

அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உண்மையான இறைதூதரே. இதில் பொய் எதுவும் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
Book :56


قَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عُمَارَةَ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لاَ، وَاللَّهِ مَا وَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ، فَلَقِيَهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَأَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»


Bukhari-2873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 கழுதைகளின் மீது (சவாரி செய்து) போருக்குச் செல்வது.

பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை.

இதை அனஸ் (ரலி) அவர்கள் தம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு அய்லாவின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாகத் தந்தார் என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2873. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் மரணத்தின் போது) தம் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதத்தையும், தருமமாக விட்டுச் சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச் செல்லவில்லை.
Book : 56


«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً»


Bukhari-2872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2872. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார்.

அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்த. இதையறிந்த போது நபி(ஸல்) அவர்கள், ‘உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ஹம்மாத்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து மூஸா(ரஹ்) அவர்களும் நீண்டதாக அறிவித்தார்கள்.
Book :56


كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةٌ تُسَمَّى العَضْبَاءَ، لاَ تُسْبَقُ – قَالَ حُمَيْدٌ: أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ – فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ، فَقَالَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ»

طَوَّلَهُ مُوسَى، عَنْ حَمَّادٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம்.

நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை (தம் ஒட்டகமான) கஸ்வாவின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக் கொண்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.39

2871. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.
Book : 56


«كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا العَضْبَاءُ»


Bukhari-2870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்.

2870. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம்,

‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், ‘ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து’ என்று பதிலளித்தார்’ என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

தொடர்ந்து நாஃபிஉ(ரஹ்) கூறினார்.

‘நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை சனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

மேலும், இப்னு உமர்(ரலி) அவர்களும் (தம் குதிரையுடன்) பந்தயத்தில் பங்கெடுத்தார்கள்.

‘நான் மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?’ என்று கேட்க, ‘சுமார் ஒரு மைல்’ என்று அவர்கள்

سَابَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ، فَأَرْسَلَهَا مِنَ الحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الوَدَاعِ – فَقُلْتُ لِمُوسَى: فَكَمْ كَانَ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: سِتَّةُ أَمْيَالٍ أَوْ سَبْعَةٌ – وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، فَأَرْسَلَهَا مِنْ ثَنِيَّةِ الوَدَاعِ وَكَانَ أَمَدُهَا مَسْجِدَ بَنِي زُرَيْقٍ ” قُلْتُ: فَكَمْ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: مِيلٌ أَوْ نَحْوُهُ، وَكَانَ ابْنُ عُمَرَ مِمَّنْ سَابَقَ فِيهَا


Bukhari-2869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57 பந்தயத்திற்காகக் குதிரையை மெலிய வைப்பது.

2869. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.
Book : 56


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، وَكَانَ أَمَدُهَا مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ سَابَقَ بِهَا، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَمَدًا: غَايَةً “، {فَطَالَ عَلَيْهِمُ الأَمَدُ} [الحديد: 16]


Bukhari-2868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56 குதிரைப் பந்தயம்.

2868. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து ‘பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ(ரஹ்), ‘ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
Book : 56


«أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، قَالَ ابْنُ عُمَرَ: وَكُنْتُ فِيمَنْ أَجْرَى، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ سُفْيَانُ: بَيْنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةَ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ


Bukhari-2867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55 மந்தமாக நடக்கின்ற குதிரை.

2867. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மதீனாவாசிகள் ஒரு முறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் குணமுடைய ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தார்கள்.

திரும்பி வந்தபோது, ‘உங்களுடைய இந்த குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் நாம் கண்டோம்’ என்று கூறினார்கள். அதற்குப் பிறகு அந்த குதிரை வேறெந்த குதிரையும் அதை (வெல்ல முடியாத அளவிற்கு பந்தயத்தில்) முந்த முடியாததாக மாறிவிட்டது.
Book : 56


أَنَّ أَهْلَ المَدِينَةِ فَزِعُوا مَرَّةً، فَرَكِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ كَانَ يَقْطِفُ – أَوْ كَانَ فِيهِ قِطَافٌ – فَلَمَّا رَجَعَ قَالَ: «وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا، فَكَانَ بَعْدَ ذَلِكَ لاَ يُجَارَى»


Bukhari-2866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 சேணம் பூட்டப்படாத குதிரையில் சவாரி செய்தல்.

2866. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சேணம் பூட்டப்படாத, திறந்த மேனி கொண்ட ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தபடி, அவர்களின் கழுத்தில் வாளொன்று தொங்கிக் கொண்டிருக்க, மதீனா வாசிகளை நோக்கி வந்தார்கள்.
Book : 56


«اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَرَسٍ عُرْيٍ مَا عَلَيْهِ سَرْجٌ فِي عُنُقِهِ سَيْفٌ»


Next Page » « Previous Page